உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்த ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ‘அக்யூஸ்ட்’ படக்குழு மரியாதை செலுத்தினர்ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ திரையரங்குகளில் கடந்த 25 நாட்களாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி நடை போட்டு வருகிறது.

வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது. திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களின் உற்சாக பாராட்டுகளோடு படக்குழுவினர் கேக் வெட்டி ‘அக்யூஸ்ட்’ வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றிருந்த நிலையில் அதன் வெற்றி கொண்டாட்டமும் அதே திரையரங்கில் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது கேப்டன் ஆலயம் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் உதயா உள்ளிட்ட ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர் அங்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

இது குறித்து பேசிய உதயா, “கலை உலகத்திற்கும் திரையுலகினருக்கும் எவ்வளவோ நன்மைகளை செய்த கேப்டன் அவர்களின் பிறந்த நாளில் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதற்கு காரணமான படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்,” என்றார்.

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான ‘அக்யூஸ்ட்’, உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.’அக்யூஸ்ட்’ படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

Related posts:

’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!

ஜிடிஎன் படத்தில் இருந்து வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில் 'இந்தியாவின் எடிசன்' ஆக நடிகர் மாதவனின் மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!

மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் 'மைதான்' திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்,ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார் !

லாரி ஓட்டுவது எளிதல்ல? 'கைதி' பற்றி கார்த்தி !

ஐ.எம்.டி.பியில் அதிக-தரமதிப்பீடு பெற்ற நடிகர் தனுஷ்11 திரைப்படங்களின் பட்டியல் !

ஏர்டெல், வோடபோன் கடன் பிரச்னையால் பதறும் வங்கிகள்..?