29
Jul
*ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!* *மேலும், தனது ரசிகர்மன்ற (AAFA) உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கினார்!*ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட சுமார் 1000 அல்லு அர்ஜுன் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டார். அன்பும், ஒற்றுமையும் நிறைந்த ஒரு சிறப்பான நிகழ்வாக இது அமைந்தது.இந்த நிகழ்வை சிறப்பாக்கியது அதன் பிரம்மாண்டமான ஏற்பாடு மட்டுமல்ல. ரசிகர்களுடன் அல்லு அர்ஜுன் பகிர்ந்த அன்பான தருணங்கள்தான்.ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு மட்டும் அல்லு அர்ஜுன் போஸ் கொடுக்கவில்லை. ரசிகர்களுடன் சிரித்து, நடனமாடி, மனம் திறந்து உரையாடினார். நகைச்சுவையாக பேசி மகிழ்ந்தார். அந்தச் சூழல் நடிகர்- ரசிகர்கள் சந்திப்பு சந்திப்பைப் போல அல்லாமல், நீண்ட நாட்களாகப்…
