ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய சேமிப்புத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

எஃப்டி எக்ஸ்ட்ரா என்ற பெயரில் இந்தத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே சமயம், கூடுதலாக டேர்ம் இன்ஷூரன்ஸ் வசதியுடனும் வரும் டெபாசிட் திட்டங்களாகும். எஃப்டி எக்ஸ்ட்ரா திட்டங்கள், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியது. முதல் திட்டம் எஃப்டி லைஃப் (FD Life).

இது 18-50 வயதான வாடிக்கையாளர்களுக்கு வருமான வளர்ச்சி தரும் எஃப்டி முதலீட்டுத் திட்டத்தையும், இலவசமாக ஓராண்டுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தையும் வழங்கும் இரட்டை பலனுள்ள திட்டமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் அடுத்த ஆண்டும் இந்த காப்பீட்டு சலுகையை நீடித்துக் கொள்ளலாம்.மேலும் பிரத்யேக பலனாக இலவச டேர்ம் ஆயுள் காப்பீடு வசதியையும் ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மூலம் அளிக்கிறது.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 3 லட்சம் நிரந்தர சேமிப்புக் கணக்கில் போட்டால், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அளிக்கப்படும். அடுத்த திட்டம், எஃப்டி இன்வெஸ்ட் (FD Invest) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஃப்டி மூலம் பெறும் வட்டிவருமானத்தை ஐசிஐசிஐ புரூடென்சியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பரஸ்பர நிதி திட்டங்களில், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடுசெய்ய முடியும்.

வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த அல்லது தேவையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. மேலும், கூடவே அதன் மூலமான வட்டி வருமானத்தை, வாடிக்கையாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

Related posts:

ஜி.எஸ்.டி வரியை மேலும் எளிதாக்கும் முயற்சியில் மத்திய அரசு ?

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தெரியும், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் தெரியுமா?

வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும் ? ஆடிட்டர்கள் கோரிக்கை !

ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம் !

சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு !

3 மாத தவணை அவகாசம்.? யார் யார் இதற்கு தகுதியானவர்கள்.?எப்படி தெரிந்து கொள்ள வேண்டும்.?

சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இ-கோர்ட் !

வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?