*நடிகர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்!*

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ‘டிமாண்டி காலனி3- தி எண்ட் இஸ் டூ ஃபார்’ இந்த வருடம் கோடையில் வெளியாகிறது. அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முந்திய இரு பாகங்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தப் படத்தை, ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது படத்தின் வெற்றி வாய்ப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

திரையரங்கு விநியோகத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்கள் கொடுத்து திரைத்துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில். ’டிடி ரிட்டர்ன்ஸ்’, ’கருடன்’, ’மகாராஜா’ மற்றும் ’பைசன் காளமாடன்’ உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றி பெற்ற பல படங்களை அவர் விநியோகம் செய்துள்ளார். ‘டிமாண்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ படத்தின் தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை அவர் கைப்பற்றி இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையும் தருவாயில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

படம் குறித்தான ஒவ்வொரு அறிவிப்பு வெளியாகும்போதும் மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால், தனித்துவமான மற்றும் புதுமையான புரோமோஷனல் பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜிஎம் குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்து வழங்குகிறார். மேலும், ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறையுடன் இணைந்து தங்கல் டிவியும் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

எழுத்து, இயக்கம்: அஜய் ஆர் ஞானமுத்து,
இசை: சாம் சி.எஸ்,
ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்,
படத்தொகுப்பு: குமரேஷ் டி.

Related posts:

வாழை' படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே

தமிழ் சினிமாவில் ‘ஜூடோபியா’ திரைப்படம் உருவானால் எந்த நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களில் பொருந்திப் போவார்கள்?

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் ப...

அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா - டெல்னா டேவிஸ் நடிக்கும் 'லவ் இங்க்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் 'யுகம்'. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.!

வசூல்ராஜா வான சுந்தர் சி யின் "மதகஜராஜா"! பட அதிபர் கே.ஆர் அறிக்கை!!

இந்தியா # முதல் முறை # இதய பெருநாடி அறுவை சிகிச்சை # சிம்ஸ் மருத்துவமனை சாதனை #

கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு