இணை­ய­த­ளம் மூலம் கடன் வசதி: தவிர்க்க வேண்­டிய தவ­று­கள்!

வங்­கி­களும், நிதி நிறு­வ­னங்­களும் இணை­ய­த­ளம் மூலம் உட­னடி கடனை வழங்­கு­கின்­றன. நிதி நுட்ப நிறு­வ­னங்­கள் ஸ்மார்ட்­போன் வாயி­லாக கடன் பெறும் வச­தியை அறி­மு­கம் செய்­துள்­ளன. இந்த வகை டிஜிட்­டல் கடன் வச­தியை, இளம் தலை­மு­றை­யி­னர் அதி­கம் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். எளி­தாக கிடைப்­பது சாத­க­மாக அமைந்­தா­லும், இந்த வகை கடன் பெறும் போது, வழக்­க­மாக பல­ரும் செய்­யும் தவ­று­களை தவிர்ப்­பது நல்­லது.எளி­தாக கிடைக்­கிறது என்­ப­தற்­காக மட்­டுமே, கடன் வச­தியை கண்ணை மூடிக்­கொண்டு பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. மொத்­த­மாக பார்க்­கும் போது, கடன் வசதி அதிக செல­­வு இல்லாத­தாக தோன்­ற­லாம். ஆனால் வட்­டியை கணக்­கிட்டு பார்க்க வேண்­டும். பல நேரங்­களில் வட்டி விகி­தம், செயல்­பாட்டு கட்­ட­ணத்­தில் உள்­ள­டங்­கி­யி­ருக்­க­லாம்.

பல­ரும் கடன் பெறும் அவ­ச­ரம் அல்­லது ஆர்­வத்­தில் விதி­மு­றை­களை பொறு­மை­யாக படிப்­ப­தில்லை. இணை­ய­த­ளம் அல்­லது செயலி வாயி­லாக கடன் பெறும் போது, தொடர்ந்து தக­வல்­களை சமர்­ப்பித்து, கடன் அனு­மதி பெறும் நிலை­யில், நிபந்­த­னை­களை அறி­வ­தில் நேரம் செல­வி­டு­வதில்லை; இது பாத­க­மாக அமை­ய­லாம்.இணைய சூழ­லில் கடன் பெறு­வ­தற்­கான தக­வல்­களை சமர்­ப்பிப்­பது மிக­வும் எளி­தாகி இருக்­கிறது. தேவை­யான ஆவ­ணங்­களை ஆன்­லை­னி­லேயே பதி­வேற்­ற­லாம். ஆனால், ஆன்­லை­னில் சமர்ப்­பிக்­கும் தக­வல்­க­ளின் பாது­காப்பு பற்­றி­யும் யோசிக்க வேண்­டும். இணை­யத்­தில், ‘பிரை­வசி’ பாதிப்பு அதி­கம் இருப்­பதை மன­தில் கொள்ள வேண்­டும்.

எளி­தாக கிடைப்­ப­தன் கார­ண­மாக பலரும் முதல் வாய்ப்பை ஏற்­றுக்­கொள்­கின்­ற­னர். ஒரு, இ – மெ­யில் அல்­லது குறுஞ்­செய்தி வாயி­லாக வரும் கடன் வாய்ப்பை ஏற்­றுக்­கொள்­கின்­ற­னர். ஆனால், போட்டி நிறு­வ­னங்­கள் அளிக்­கும் கடன் வாய்ப்­பு­களை ஒப்­பிட்டு, அவற்­றில் சிறந்த வாய்ப்பை தேர்வு செய்­வது ஏற்­ற­தாக இருக்­கும்.எப்­போ­துமே திரும்ப பெறும் ஆற்­ற­லுக்கு ஏற்­பவே கடன் வாங்க வேண்­டும். ஆனால், டிஜிட்­டல் கடன் வாய்ப்­பால், தேவைக்கு மேல் கடன் வாங்­கும் அபா­யம் இருக்­கிறது. லேட்­டஸ்ட் மாடல் ஸ்மார்ட்­போ­னுக்­காக கடன் வாங்­கு­வது போன்ற பழக்­கம் பர­வ­லாக உள்­ளது. தேவையை அறிந்து திட்­ட­மிட்டே செயல்­பட வேண்­டும்

Related posts:

பொழுதுபோக்கு உலகில் புதிய புரட்சி: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் 'கதைஷார்ட்ஸ்'!

“மைலாஞ்சி” – திரை விமர்சனம்!

நடிகர், இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு 'யூத் ஐகான் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது!

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிப்பில் சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்!

விஜய் ஆண்டனி நடிக்கும் 'நூறு சாமி' திரைப்பட வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு!

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' பத்திரிகையாளர் சந்திப்பு !!

Turkish Airlines Announces Flight Resumptions, Restoring Middle East Network !