அதிமுக – பாஜக கூட்டணி முறிவு

பாஜக கூட்டணி வேண்டாம். அவர்களோடு கூட்டணி தொடர விரும்பலைன்னு அதிமுக அறிவித்து விட்டது. அதோடு 2024 லோக்சபா தேர்தலில் தனியாக கூட்டணி அமைத்து நிற்க போறோம்ன்னும் அதிமுக அறிவித்து விட்டது.இப்படிப்பட்ட நிலையில் தான் பாஜக – அதிமுக வட்டாரத்தில் விசாரிச்சதுல கூட்டணி உடைஞ்சது உண்மை தான். அதே சமயம் கூட்டணியை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமா நடந்து வருதாம்.. முக்கியமாக சில கண்டிஷன்கள் இதற்காக போடப்பட்டு வருது.. அதை செய்தால் பாஜகவோடு கூட்டணியை தொடர ரெடின்னு அதிமுக சொல்லிக்கிட்டு வருதாம்.

அதாவது அண்ணாமலையை மாற்றுவது, குறைவான தொகுதிகளை லோக்சபா தேர்தலில் கேட்போம்ங்கிற உறுதி தருவது, டிடிவி தினகரன், ஓபன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க மாட்டோம்ங்கிற வாக்குறுதி வாங்குவது போன்ற சில உறுதியை அளித்தால் மட்டுமே கூட்டணி தொடரும். இல்லைன்னா கூட்டணி நடக்க வாய்ப்பே இல்லைன்னு அதிமுக கண்டிஷன்களை போட்டு வருதாம்.இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள், ஆலோசனை எல்லாம் நடந்து கிட்டு தான் இருக்குமாம். இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த கூட்டணி மோதல் எதிலும் 2 முக்கியமான மாஜிக்கள் தலையிடவே இல்லையாம். பொதுவாக கட்சி விவகாரங்களில் அவ்வப்போது இவர்கள் பேசுவது வழக்கம். ஆனால் 2 பேருமே கட்சி கூட்டணி தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசலை. கட்சி கூட்டங்களில் இவங்க ரெண்டு பேரும் கலந்து கிட்டாலும்,அதிமுக – பாஜக கூட்டணி முறிவு தொடர்பான எந்த விவகாரங்களிலும் அந்த 2 முக்கியமான மாஜி அமைச்சர்கள் பெரிதாக தலை காட்டலை.அதிமுக கூட்டத்திற்கு வந்தால் கூட, மீடியா வெளிச்சம் படாமல் அவங்க ரெண்டு பேரும் ஓரமாகவே இருந்தது பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்குது.அதிமுக – பாஜக இடையிலான மோதல் முற்றிலுமாக முடிந்து விட்டாலும், வெளியே முடிந்தது போல தெரிந்தாலும், உண்மையில் இந்த மோதல் முடிவிற்கு வரவில்லை என்று தான் பாஜக, அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்குது.

டெல்லியில் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார் அண்ணாமலை. ஆனால் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் தான் நிர்மலா சீதாராமன், பி.எல்.சந்தோஷ், நட்டா ஆகியோரை மட்டும் அண்ணாமலை சந்தித்தார். ஆனால் அமித்ஷாவை சந்திக்காவிட்டால் தனது பதவிக்கு ஆபத்தாகிவிடும்னு நெனச்ச அண்ணாமலை டெல்லியிலேயே தங்கியிருந்தார். அப்புறம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த தலைவர்கள், உங்களை உடனடியாக மாற்ற விரும்பலை. நாங்கள் சொல்லும்வரை அதிமுகவைப் பற்றியோ, அதன் தலைவர்களைப் பற்றியோ எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிடக் கூடாது. அதப் பத்தி வாயே திறக்கக் கூடாது. உண்மையான எதிர்க்கட்சியாக மட்டும் செயல்பட்டால் போதுமானதுன்னு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து பாஜ தலைவர் அண்ணாமலை, சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பேட்டி எடுப்பதற்காக குவிந்திருந்தனர். விமானத்தை விட்டு இறங்கி, வெளியில் வந்த அண்ணாமலை, செய்தியாளர்கள் நின்றிருந்த பகுதிக்கு வந்து, இன்னும் இரண்டு நாட்கள் கழித்து, நான் உங்களிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு, காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

அண்ணாமலையை மாற்ற வேண்டாம் என்று தலைமை முடிவு எடுத்துள்ளதால், அதிமுக தலைவர்களும் கூட்டணி உடைந்தது, உடைந்ததுதான். இனி எந்தக் காலத்திலும் பாஜவுடன் கூட்டணி இல்லை. அதேநேரத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். மோடி, அமித்ஷா ஆகியோரை திட்ட வேண்டாம். அண்ணாமலை பேசினால் அவருக்கு மட்டும் பதிலடி கொடுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி, இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுது. இதனால், தமிழக அரசியல் இனி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுது.

கட்சியின் ஆலோசனைகளில் கருத்து தெரிவித்தனர். ஆனால் டெல்லி சென்ற குழுவில் இவர்கள் இல்லை. பேட்டி அளித்த போது இவர்கள் வரலை. தனியாக பேட்டி அளிக்கலை. பாஜக பற்றி எங்கும் ஒரு வார்த்தை கூட சொல்லலை. கூட்டணி உடைந்ததை பற்றி எந்த இடத்திலும் பேசலை. காரணம் இவர்கள் பாஜகவை பகைத்துக் கொள்ள விரும்பலை என்று கூறப்படுது.பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க இவர்கள் விரும்பலை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்குது.இவர்களுக்கு எதிராக சில வழக்குகள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இருக்குது. அதை காரணம் காட்டி இவர்கள் தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதால் பாஜகவை பற்றி எதுவும் பேசாமல் அமைதி காப்பதாக கூறப்படுது.

இதை எல்லாம் பார்த்து தான் எடப்பாடி அதிருப்தியில் இருக்காராம். இவங்க இரண்டு பேர் மட்டும் ஏன்? எதிலுமே கலந்து கொள்ளாமல் இருக்கிறாங்க. இவங்க செயல்பாடு எதுவும் சரியில்லையே. இவர்கள் நோட்டம் சரியில்லையே. எதிர்காலத்தில் முதுகில் குத்த போகிறீர்களா? பாஜக பக்கம் தாவ போகிறார்களா? பாஜக எதுவும் இதற்காக காய் நகர்த்திக்கிட்டு இருக்குதான்னு? விசாரித்து வருகிறாராம். ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த எடப்பாடி டீமின் ஏக்நாத் ஷிண்டே! பாஜக ‘ஸ்கெட்ச்’ அரங்கேற்றம்?பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொள்வதாக அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் கூடவே இருந்து, குழிபறிக்க காத்திருக்கும் நாளைய ‘ஏக்நாத் ஷிண்டே’, ஓ.பன்னீர்செல்வத்தை ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்குது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்த கட்சிகளையே அக்கட்சி சின்னா பின்னமாக்கி சிதைத்து விடுவது வாடிக்கை. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றி சில சீட்டுகளையாவது பெற முடியும் என்பதற்கு காரணமாக இருந்த அதிமுக, அதெல்லாம் முடியாது கூட்டணி கிடையாது என அறிவித்தால் பாஜக சும்மா இருந்து விடுமா என்ன?
ஒன்றல்ல ரெண்டு ஏக்நாத் ஷிண்டேக்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அதிமுகவை உடைத்து சிதைப்பதற்காக 2 முக்கிய தலைவர்களை தமிழ்நாட்டு ஏக்நாத் ஷிண்டேக்களாக பாஜக ஏற்கனவே தயார் செய்திருக்கிறது என்பதை நாடும், நாட்டு மக்களும் நன்கறிவார்கள்.அதிமுகவை உடைக்க இவர்கள் செய்த சதியின் உச்சமாகத்தான் இனி பாஜக கூட்டணியே வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுது. இருந்த போதும் இந்த 2 தலைகளும் தானாக போகட்டும் என காத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களை தீவிரமாக கண்காணிப்பதை புரிந்து கொண்டாலும், பாஜக கொடுத்த அசைன்மெண்ட் என்னவோ அதை கன கச்சிதமாக செய்து கொண்டே இருக்கிறாராம் ஏக்நாத் ஷிண்டேக்களில் சீனியர் ஒருவர்.சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து பாஜக கூட்டணி இல்லை என அறிவித்த அன்றே, ஓ.பன்னீர்செல்வத்தை ‘ஏக்நாத் ஷிண்டே’ சந்தித்து பேசினாராம். எப்படி எல்லாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் ஸ்கெட்சை கொடுத்து ஆலோசித்துள்ளாராம் ஏக்நாத் ஷிண்டே.

இந்த அஜெண்டாபடியே ஓ.பன்னீர்செல்வம் தமது அடுத்த முடிவுகளை அறிவிக்க இருக்கிறாராம். ஆனாலும் எது வந்தாலும் சமாளிப்போம் என திடமான முடிவோடு இருக்கிறதாம் எடப்பாடி பழனிசாமி தரப்பு.எத்தனை பேர் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாலும், எத்தனை சதித் திட்டம் தீட்டினாலும் தொண்டர்களும், கட்சியும் என் பக்கம் இருக்கும் போது அதில் எந்த கவலையும் இல்லை. எந்த வழக்கும் எதுவும் செய்ய முடியாது. எதையும் எதிர் கொள்வோம் என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
நாம் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை புரிந்து கொண்டு முன்னேறுவது தான் சரியாக இருக்கும். பாஜகவானது தன்னைத் தவிர எல்லா கட்சிகளையும் அழிக்கும் நோக்கம் கொண்டது. ஒரே நாடு, ஒரே கட்சி என்ற இலக்கை முன்னெடுத்துச் செல்பவர்கள்! அந்த வகையில் தாங்கள் கூட்டணியில் சேர்ந்த எல்லா கட்சிகளையும் அவர்கள் தேய்பிறையாக்கி, தங்களை வளர்பிறையாக உருவாக்கிக் கொள்ளும் கலையை வெகு காலமாக செய்து வருகிறார்கள்!

யாருடனும் அவர்களால் தொடர்ந்து நட்பு பாராட்ட முடியாது! வெறுப்பு பேச்சுக்கள், வன்மத்தை தூண்டும் வார்த்தை பிரயோகங்கள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே கட்சியை வளர்ப்பவர்கள்! அந்த வகையில் திராவிட வெறுப்பு, திராவிடத்தின் மீதான வன்மத்தை வளர்த்தெடுப்பதே அவர்களின் முதல் இலக்கு! அந்த அஜெண்டாபடி தான் அண்ணாமலை பேசி வருகிறார். பெரியாரையும், அண்ணாவையும் இன்னபிற திராவிடத் தலைவர்களையும் மக்கள் மனதில் மோசமாக சித்தரிப்பதன் மூலமே இங்கு பாஜகவை வலுவாக காலூன்ற வைக்க வேண்டும் என்பது அவர்களின் மாற்றிக் கொள்ள முடியாத தீர்மானமாகும். இதற்கு அண்ணாமலை ஒரு கருவி! அவ்வளவுதான்!
பிரச்சினை என்னன்னா, அதிமுக தரும் ஐந்து அல்லது ஆறு பாராளுமன்ற தொகுதிகள் அவர்களை திருப்திபடுத்த முடியாது. காரணம், தரும் இடத்தில் அதிமுக இருப்பதையே பாஜக தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை.அதனால் தான் சென்ற முறை எடப்பாடி பழனிச்சாமியை அமித்ஷா அழைத்து பேசிய போது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 15 தொகுதிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 25 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தந்துவிட வேண்டும். அந்த 25 தொகுதிகளில் இங்கிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நாங்கள் பங்கு தருவோம் என்றது. இதை ஏற்காததால் தான் அண்ணாமலையை வைத்து தாறுமாறாகப் பேச வைத்தனர்.
அதுமட்டுமின்றி, சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டேயை தூக்கியது போல, தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவாரை தூக்கியது போல, ஜக்கிய ஜனதா தளத்தில் இருந்து ஆர்.சி.பி.சிங்கை தூக்கியது போல அதிமுகவில் இருந்து வேலுமணி, தங்கமணி, தம்பிதுரை ஆகியோரை தூக்க பேரம் பேசி வருகிறது பாஜக தலைமை.
இதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டி பாஜக கூட்டணி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார். இதன் மூலம் இந்தக் கட்சியின் தொண்டர்கள், பெரும்பாலான நிர்வாகிகள் பாஜக உறவை விரும்பவில்லை. ஆகவே, தொண்டர்களின் விருப்பப்படி பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என அறிவித்து தன் தலைமையை கட்சிக்குள் கேள்வியில்லாமல் உறுதி செய்கிறார்.
அதாவது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் முடிவு என்பது அண்ணாமலையின் பேச்சால் எடுக்கப்பட்ட முடிவு மட்டுமல்ல, அதைவிட கட்சியில் தன் தலைமையை கேள்வியில்லாமல் உறுதிபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதை நாம் உணரவேண்டும்.

பாஜகவுடன் உறவு இல்லை என கே.பி.முனுசாமி அறிவித்த போது அங்கிருந்த அத்தனை அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்த போது முகத்தில் எந்தவிதச் சலனமும் இன்றி எடப்பாடி அமைதியா உக்காந்திருந்தார். அதாவது, தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது கூட பாஜக தலைவர்களின் மனதை புண்படுத்தி, விளைவுகள் விபரீதமாகலாம் என அவர் நினைத்திருக்கக் கூடும்.

அதிமுகவை தனித்து நிற்க வைப்பதன் மூலம் தன் கூட்டணியில் உள்ள ஒ.பி.எஸ், தினகரன் அணிகளை அவர்களுக்கு எதிராகக் களம் இறக்கி அதிமுகவை தோற்கடிக்க எல்லா முன்னெடுப்புகளையும் செய்யத் தயாராகி விட்டது பாஜக.பீகாரில் தன் தோழமை கட்சித் தலைவராக இருந்த நிதிஸ்குமாரை பலவீனப்படுத்த பாஜகவின் நெருங்கிய கூட்டாளியான லோக் ஜன்சக்தி தலைவர் சிராக் பாஸ்வானின் வேட்பாளர்களை ஜனதா தளம் நிற்கும் தொகுதிகளில் நிற்க வைத்து, 30 தொகுதிகளில் ஜனதா தளத்தை தோற்க வைத்தது பாஜக என்பதை நாம் நினைவில் நிறுத்திப் பார்த்தால், அதிமுகவை பலவீனப்படுத்துவது என்ற ஒற்றை நோக்கத்தில் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை பாஜக.

எனவே, பாஜகவை எதிர்க்கத் துணிவற்ற நிலையில் தான் தற்போதும் அதிமுக தலைவர்கள் உள்ளனர். இந்தக் கூட்டணி விரிசலுக்கு பிறகு அதிமுக தலைவர்கள் மீது அமலாக்கத் துறை ரெய்டுகள் பாயலாம். அல்லது திமுகவிற்கு சிக்னல் கொடுத்தாலே கூட போதும் திமுக உடனே நடவடிக்கை எடுக்கும். இதுவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரத்தில் அமைதி காத்த திமுக தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புத்துயிர் தந்துவிடும்.அதிமுக பாஜகவுடன் உறவை முறித்ததற்கு நியாயப்படி வாழ்த்து சொல்லி வாழ்த்தி இருக்க வேண்டும் திமுக தலைமை!. பாஜக தமிழகத்தில் பலவீனப்படுவது நல்லது என்பது மட்டுமல்ல, சக திராவிடக் கட்சி அடிமைத் தளையை உதற முன் வந்ததையும் இணைத்தே இதற்கு வாழ்த்து சொல்லி இருக்கலாம் திமுக.

உண்மையில் அதிமுகவை போலவே திமுகவும் பாஜகவுக்கு அடிமையாகத் தான் உள்ளது. அதனால் தான் பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி அண்ணாமலை பேசிய விவகாரத்தில் திமுக தலைவர்கள் அதிமுக தலைவர்கள் அளவுக்கு சரியாக எதிர்வினை ஆற்றவில்லை. ஆர்.எஸ்.பாரதியை மட்டும் வழக்கம் போல அறிக்கை தர வைத்துவிட்டு, கட்சியின் மூத்த தலைவர்களை ‘கப்சிப்’ ஆக்கிவிட்டார் ஸ்டாலின்.

பாஜகவின் கட்டளைப்படி தான் 62 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவிற்கு சட்டமன்றத்தில் எதிர்கட்சித்துணைத் தலைவர் பதவி தராமல் பன்னீர் செல்வத்திற்கு தந்து அழகு பார்க்கிறார் ஸ்டாலின். இனி வருங்காலத்தில் பாஜகவின் கட்டளைப்படி அதிமுகவை ஒடுக்கும் வேலைகளை எந்தத் தடையும் இல்லாமல் செய்வார் ஸ்டாலின்.பாஜக நினைத்தால் மீண்டும் அதிமுகவை கூட்டணிக்குள் இழுத்துக் கொள்ளக் கூடிய சூழல் தான் தற்போதைய அரசியலை கணிக்கும் போது நம்மால் உணர முடிகிறது! அப்படி மீண்டும் பாஜகவுடன் அதிமுக சேருமானால் அது அடிமட்டத் தொண்டர்களும், ஆதரவாளர்களும் அதிமுக தலைமையிடம் இருந்து அன்னியப்பட்டு வேறு இயக்கத்தை நாடும் நிலைக்கு கொண்டு செல்லும். மீண்டும் பாஜகவுடன் கூட்டணியை புதுப்பிப்பது எடப்பாடி எடுக்கும் தற்கொலை முடிவுக்கு சமமாகும்.

அதே சமயம் அதிமுகவை பிளக்கவும், சிதைக்கவும் பாஜக சாம,பேத, தான தண்ட அணுகுமுறைகள் அத்தனையையும் கையாளும். எந்த மாதிரியான பிளாக்மெயில் அரசியலையும் ராஜதந்திரத்தின் பெயரால் கையாளத் தயங்காது. இதையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதற்கு காலம் தான் விடை சொல்லும்.பாஜக எதிர்ப்பை வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமி பேச முன் வரும் பட்சத்தில் அது திமுக கூட்டணியில் அதிர்வுகளை உருவாக்க வாய்ப்புண்டு. அப்போது தான் இழந்த அதிமுகவின் செல்வாக்கை மீட்கவும் முடியும். அதிமுக தன் தன்மானத்தை மீட்க கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை அது நழுவவிட்டால், பிறகு வரலாற்றில் அதற்கு வீழ்வதைத் தவிர விடிவே இல்லை.

திமுக அரசின் மறைமுக பாஜக ஆதரவு போக்குகளாலும், தொழிலாளர் விரோத செயல்பாடுகளாலும், கட்டுக் கடங்கா ஊழல், இயற்கை வளக் கொள்ளைகள் ஆகியவற்றால் அதிருப்தியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, காங்கிரஸ், இஸ்லாமியக் கட்சிகள் அதிமுக அணிக்கு மாற வாய்ப்பு உள்ளது.

ஆனால், அந்த வாய்ப்பை பெறுவதற்கு அதிமுக தன்னை தகுதிபடுத்திக் கொள்ளுமா? எனத் தெரியவில்லை. ஏனெனில், பாஜகவை வீழ்த்த, அதிமுக தலைவர்களில் ஒரு சிலரேனும் தங்களை பலிகடாவாக்கியேனும் இந்த இயக்கத்தை கட்டிக் காக்க வேண்டும் என முன்வர வேண்டும். அப்படி ஒருவரைக் கூட அந்தக் கட்சியில் இது வரை பார்க்க முடியவில்லை என்பது தான் துரதிர்ஷ்டமாகும். ஆம், தானே சிறை செல்ல நேர்ந்தாலும் பரவாயில்லை என தனக்கு பதிலாக கட்சியைக் கட்டிக் காக்க அர்ப்பணிப்புள்ள சில நிர்வாகிகளை உருவாக்கி நிலை நிறுத்த வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி. இல்லையென்றால், அதிமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலைல தமிழகத்தில் பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைக்க பாஜக திட்டம் போடுது.! அமித்ஷா எடுத்த சர்வேயில் அதிர்ச்சி தகவல்!!தமிழகத்தில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி என இரண்டு கூட்டணிகள் இதுவரை தேர்தலில் போட்டியிட்ட நிலையில், ஒரு சில தேர்தலில் மூன்றாவது கூட்டணி அமைந்தாலும், அந்த கூட்டணி வெற்றி பெற்றதில்லை.இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது. தேமுதிக, பாமக, புதிய தமிழகம், அமமுக, ஓபிஎஸ் அணி உள்பட சில கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுது.
இந்த நிலைல தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால், ரிசல்ட் எப்படி இருக்கும்? என அமித்ஷா ஒரு சர்வே எடுத்து இருப்பதாக தெரிகிறது. அதில் 18 சதவீதத்திற்கு மேல் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும், 23 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பெறுவோம் என்றும், ஐந்து தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இதனை அடுத்து பாஜக கூட்டணியை அமைக்க, அண்ணாமலைக்கு அமித்ஷா பச்சைக் கொடி காட்டிவிட்டதாக கூறப்படுது.

ஆனால் எதிர்கால அரசியலை மனதில் வைத்து 2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறது என்கிற தகவல் கிடைச்சிருக்கு. இதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலம் சமாதானம் பேச உள்ளனர்.

அதன்படி உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் ஜனவரியில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடிக்கு அழைப்பு போயிருந்தது. இந்த அழைப்பிதழ் மூலம் எடப்பாடிக்கு சமாதானம் சொல்ல யோகி வழியாக எடப்பாடிக்கு தூது விட மோடி திட்டமிட்டு இருந்தாராம்.ஆனா எடப்பாடி போகலை.பாஜகவும் அதிமுகவை கூட்டணியில் இணைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதை மிரட்டலாகவே அதிமுகவுக்கு சொல்லிப் பார்த்தது பாஜக தரப்பு. பாஜகவைச் சேர்ந்த ராம சீனிவாசன் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால் அதிமுக அரசியல் ரீதியாக விலை கொடுக்க நேரிடும் என்றும் கூறியிருந்தார்.எடப்பாடி பழனிசாமியின் முடிவு அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாக டானிக் கொடுத்தது. தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு தனி கூட்டணியை அமைக்கும் வேலைகளில் இறங்கினார் எடப்பாடி பழனிசாமி. முதலில், தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு தூது விட்டார். அதில் பல கட்சிகள், பாஜகவை விட்டுக் கொடுக்காமல், மீண்டும் பழைய கூட்டணி அமைய வேண்டும் எனப் பேசின.  பாஜகவும் அதிமுகவை கூட்டணியில் இணைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதை மிரட்டலாகவே அதிமுகவுக்கு சொல்லிப் பார்த்தது பாஜக தரப்பு. பாஜகவைச் சேர்ந்த ராம சீனிவாசன் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால் அதிமுக அரசியல் ரீதியாக விலை கொடுக்க நேரிடும் என்றும் கூறியிருந்தார்.