உதயநிதியின் ஆணவ பேச்சிற்கு ஆப்பு வைத்த அண்ணாமலை.

உதயநிதியின் ஆணவ பேச்சிற்கு ஒரே நாளில் ஆப்பு வைத்த அண்ணாமலை. திமிராக பேசிய அமைச்சர் உதயநிதிக்கு விழப்போகுது ஆப்பு என தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சியை சேர்ந்த டாப் தலைவர்களின் சொத்து பட்டியல்களை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார். அவர் வெளியிட்ட பிறகு சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரபரப்பாக பரவியது ஆனால் இந்த சொத்து பட்டியல்களின் சொந்தக்காரர்கள் ஒருவருமே இது தங்களது சொத்து அல்ல என்று யாரும் மறுக்கவும் இல்லை அதைப் பற்றி எதுவும் பேசவும் இல்லை. கிட்டத்தட்ட சொத்து பட்டியல்கள் வெளியிட்டு 48 மணி நேரம் கழித்து திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி, அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியல் பற்றிய வீடியோக்களை முற்றிலுமாக நீக்க வேண்டும் அதோடு தான் கூறியது தவறு என்று அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் தங்களுக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் இல்லை என்றால் சிவில் மற்றும் கிருமினல் வழக்குகள் அண்ணாமலை மீது தொடரப்படும் என்று அறிவித்திருந்தார். Also Read – முடியாத ரெய்டு – வெள்ளைக்கொடியுடன் டெல்லி செல்லும் முதல்வர்! சொத்து பட்டியல் பற்றிய முழு விவரங்களும் ஆதாரமாக என்னிடம் உள்ளது நான் நேரடியாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிலும் ஒப்படைத்து தங்கள் மீது வழக்கு பதிவு செய்து கொள்கிறேன் என்று அண்ணாமலை நேரடியாக தனது பதிலை வெளியிட்டார். இதற்காக அண்ணாமலை மீது ஆருத்ரா நிறுவனத்தின் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியது திமுக இதற்கு இழப்பீடாக 501 கோடி நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இப்படி ஆர் எஸ் பாரதி மற்றும் அண்ணாமலை இருவருமே பேசிக் கொண்டிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட இந்த விவகாரம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு உதயநிதி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். Also Read – அப்பனும், மகனும் மொத்தமா வசூலை வாரி குவிக்குறாங்க – வெளியான பிடிஆர் புதிய ஆடியோ இஸ்லாமியர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது, அவரிடம் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் பற்றிய விவரங்களுக்கு கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு எதற்காக என்னிடம் மட்டும் இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்கள் நீங்கள் அண்ணாமலை சந்தித்தால் ஸ்கூல் டீச்சர் சொன்னதை ஸ்டுடென்ட் கேட்டுக்கொண்டு வர மாதிரியே நீங்களும் அண்ணாமலை சொல்லும் போது அவர் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு வருகிறீர்கள், ஆதாரம் அற்ற விவரங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார் நானும் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் திமுக மீது அண்ணாமலை வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் சும்மா விடுவதாக இல்லை என்று பதிலளித்தார் உதயநிதி ஸ்டாலின். Also Read – “ஸ்காலர்ஷிப்லதானே சாப்புடுற..!” – தாழ்த்தப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தி பாலியல் தொல்லை செய்த பிக்பாஸ் விக்ரமன், கப்சிப் திருமாவளவன் இப்படி அண்ணாமலை மீது தான் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் கூறிய அடுத்த நாளே நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மருமகன் இருவரும் 30 ஆயிரம் கோடி ருபாய் சேர்த்து வைத்துள்ளனர் என கூறிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது, அந்த ஆடியோ பதிவில் அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வரின் மருமகனான சபரீசன் ஆகிய இருவருமே ஒரு வருடத்திற்கு அவர்களின் மூதாதையர்களை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். அது தற்பொழுது பிரச்சினையாகி வருகிறது, இதை எப்படி கையாளுவது? எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது? முதலில் பத்து கோடி 20 கோடி என சிறுக சிறுக குவித்த நிலையில் தற்போது அது ஒரு 30,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரத்திற்கு திமிராக பதிலளித்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக கட்சியின் அமைச்சரே தற்போது ஆபத்தாக மாறி உள்ளார், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வைத்த ஆப்பு உதயநிதிக்கு தற்பொழுது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. முடியாத ரெய்டு – வெள்ளைக்கொடியுடன் டெல்லி செல்லும் முதல்வர்! தமிழகத்தில் தொடரும் ரைடுகள்! அவசர அவசரமாக டெல்லி விரையும் முதல்வர் ஸ்டாலின்! தமிழக அரசியலில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் பி.டி.ஆரின் முதல் ஆடியோ பதிவை வெளியிட்டு இருந்தார் அண்ணாமலை. அந்த ஆடியோ பதிவில் முதல்வரின் மகன் மற்றும் மருமகனின் சொத்து குவிப்பு பற்றியும் அவர்களின் சொத்து தற்போது முப்பதாயிரம் கோடியாக வளர்ந்து உள்ளது என்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் புலம்பியது இடம்பெற்று இருந்தது. இந்த ஆடியோ பதிவை பி டி ஆர் போலியாக சித்தரிக்கப்பட்டது என்று அவர் மறுத்தாலும் இதன் உண்மை தன்மையை பற்றி ஆராய்ந்து விசாரிக்க வேண்டும் என பாஜக தலைமை குழு ஆளுநரிடம் சென்று தங்களது கோரிக்கையை முன்வைத்து வந்ததன் விளைவாக 50 முக்கிய இடங்களில் அதாவது திமுகவினருக்கு நெருக்கமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் ரைடு நடத்தினர். இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த ரைடு முடிவதற்குள்ளேயே பி டி ஆரின் இரண்டாவது ஆடியோ பதிவு வெளியாகி திமுக அரசில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த இரண்டாவது பதிவிலும் பி டி ஆர் திமுக மற்றும் பாஜகவிற்கு இடையேயான வித்தியாசத்தையும், கட்சிப் பொறுப்பும் மக்களை கவனிக்கும் பொறுப்பும் தனித்தனி மனிதரிடம் இருக்க வேண்டும் என்பதையும் மேலும் முதல்வர், அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் கையில் தான் கட்சி உள்ளது மேலும் ஊழலில் வரும் பணத்தை அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள் என்று தமிழக அரசியலின் எரியவிட்ட சம்பவத்தை தொடர்ந்து. தற்போது நடைபெற்று வரும் வருமானவரித்துறையினரின் ரைடின் முடிவுகள் வெளிவராத நிலையில் மேலும் அடுத்தடுத்த ரைடுகள் தொடரும் எனவும் அந்த சோதனைகள் எங்கு என்பது யாருக்கும் தெரிவிக்கப்படாது மேலும் ரகசியமாக வைக்கப்படும் எனவும் வருமானவரித் துறையினரிடமிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி தொடர் ரைடுகளால் முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் மிகுந்த மனக்கஷ்டத்தில் உள்ளது. அதிலும் முதல்வரின் நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் ரெய்டு நடப்பது முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை தவிக்க வைத்துள்ளது. இதன் காரணமாக அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து வரும் முதல்வர் ஸ்டாலின் அவசர அவசரமாக டெல்லி கிளம்பிகிறார். அதாவது வருகின்ற ஏப்ரல் 28 மற்றும் 29 போன்ற தேதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரு நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். இந்த பயணத்தின் பொழுது குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு’வை ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகவும், மேலும் அரசியல் ரீதியாக சில தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள பழனிசாமி ஆகிய இருவருமே இன்று டெல்லி சென்றுள்ளார் என்பது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பற்றி குடியரசு தலைவரிடம் ஆளுநர் கலந்தலோசிக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் முதல்வரும் அடுத்த படியாக குடியரசு தலைவரை சந்திக்க உள்ளாராம் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் பார்ப்பதற்கான நேரத்தையும் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடக்கும் இது போன்ற ரைடு நடவடிக்கைகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக முதல்வர் டெல்லி செல்வது கூட்டணி கட்சிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரைடு நடந்தால் எதிர் கொள்ள வேண்டியதுதானே எதற்காக டெல்லி விரைய வேண்டும் ? எதற்காக மத்திய அரசிடம் சமாதானம் பேச சொல்ல வேண்டும்? என அதிருப்தியில் உள்ளனர்.அப்பனும், மகனும் மொத்தமா வசூலை வாரி குவிக்குறாங்க – வெளியான பிடிஆர் புதிய ஆடியோ பரபரப்பான தமிழக அரசியலில் தற்பொழுது அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜனின் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த தமிழ் புத்தாண்டு அன்று அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரத்தை தொடர்ந்து அடுத்தபடியாக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது அதில் முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை பணத்தை முதல்வர் ஸ்டாலின் என் மகனும், அமைச்சருமான உதயநிதியும், முதல்வர் மருமகன் சபரீசனும் சேர்த்து வைத்துள்ளனர் என்ற தகவலை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அதில் கூறியிருந்தார். இந்த நிலையில் விரைவில் அடுத்த ஆடியோ வெளியாகும் என அண்ணாமலை கூறி வந்தார். அதனை அடுத்து தற்பொழுது இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் திமுக எம்எல்ஏ மோகன் வீடு மற்றும் ஜீ ஸ்கொயர் நிறுவனத்தில் அதிரடி ரைடு நடத்துவரும் நிலையில் அடுத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை பற்றி பேசியுள்ளார், என்னவென்றால், ‘நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஒரு நபருக்கு ஒரே பதவி என்ற கொள்கையை ஆதரித்து வருகிறேன். பாஜகவிடம் எனக்குப் பிடித்தது இதுதான். கட்சி மற்றும் மக்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளும் தனித்தனியே இருக்கவேண்டும். இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏகளும் அமைச்சர்களும் தான் எடுக்கிறார்கள். நிதி மேலீண்மை செய்வது சுலபமாக இருக்கும். இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். முதல்வரின் மகனும் மருகனும்தான் கட்சியே… அவர்களையே நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள்… அதனால்தான் 8 மாதம் பார்த்துவிட்டு, நான் முடிவு செய்தேன். இது ஒரு நிலையான வழிமுறை அல்ல. எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால், இப்போது நான் விலகினால்… இந்தக் குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர்வினையாக அவர்களையே திருப்பி அடிக்கும். நான் இதை எப்படிச் சொல்வது… இந்தப் போராட்டத்தை நான் மிக சீக்கிரம் கைவிட்டுவிட்டதாக என் மனசாட்சி சொல்லாது எனக் கருதுகிறேன்’ என பிடிஆர் பேசும் அந்த ஆடியோ வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பனும், மகனும், மருமகனும் சேர்ந்து தான் கட்சியே, எல்லா ஊழல் பணத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மற்றும் முதல்வர் மருமகன் சபரீசனை பற்றி பி டிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறிய ஆடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை அண்ணாமலை வெளியிட்டது தற்பொழுது திமுகவினருக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது அது மட்டுமல்லாமல் நிதியமைச்சர் பி.டி ஆர். பழனிவேல் தியாகராஜன் மீதுள்ள முதல்வர் குடும்பத்தின் கோபத்தை இந்த ஆடியோ மேலும் அதிகமாக்கும் எனவும் தெரிகிறது. ஏற்கனவே நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான 30000 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக அதில் வந்த குரல் எனது இல்லை என பி டி ஆர் கூறிவந்த நிலையில் தற்பொழுது அடுத்த ஆடியோ வெளியாகி இருப்பது பி டி ஆர் தரப்பை மேலும் அதிர்ச்சி உள்ளாகியுள்ளது. ஏற்கனவே முதல் ஆடியோவை வெளியிட்ட மூத்த பத்திரிக்கையாளரான சவுக்கு சங்கர் இது பி டி ஆர் உடைய ஆடியோ பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் குரல் தான் என்னால் எங்கு வந்து வேண்டுமானாலும் சொல்ல முடியும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க தயார் என சவால் விட்டிருந்தார் இந்த நிலையில் அண்ணாமலை அடுத்த ஆடியோவை அனுப்பி இருப்பது திமுகவினரை தெளிய தெளிய அடிக்கும் நிலையில் உள்ளதுமாட்னாருய்யா பிடிஆரு – ஆடியோ டேப் விவகாரத்தில் பி.டி.ஆர் சிக்கியதற்கு குத்தாட்டம் போடும் திமுக மூத்த அமைச்சர்கள் By : Mohan Raj | 25 Apr 2023 6:10 AM 1 பி டி ஆர் ஆடியோ விவகாரம் வெளியாகிய முதல் திமுகவில் இருக்கும் பிற அமைச்சர்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து, கிட்டத்தட்ட 60 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இந்த அளவிற்கு சொத்து குவித்ததாக எந்த கட்சியும் பெயர் எடுத்தது கிடையாது, அந்தப் பெயரை திமுகவிற்கு அண்ணாமலை தற்பொழுது வாங்கிக் கொடுத்துள்ளார். குறிப்பாக அண்ணாமலை தகுந்த ஆதாரங்களுடன் எவ்வளவு ரூபாய் யார் யார் பேரில் உள்ளது? அது எந்த வகையான சொத்தாக உள்ளது? எங்கு இருக்கிறது? எந்த நாட்டில் இருக்கிறது அதன் மதிப்பு எவ்வளவு என துல்லியமாக வெளியிட்ட விவகாரம் தான் தற்பொழுது தமிழக அரசியலையே புரட்டிப் போட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட புகார் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள், அண்ணாமலை என்ன அண்ணாமலை நான்தான் பெரிய மலை என என்கின்ற ரீதியில் வெளியான நிதியமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ தான் தமிழக அரசியலில் எரிமலையாக வெடித்துள்ளது. குறிப்பாக இந்த ஆடியோ வெளியான பிறகு தான் அறிவாலயம் ஆட்டம் கண்டது என அனைவரும் கூறும் அளவிற்கு ஓர் ஆடியோ வெளியானது, அதுதான் பி டி ஆர் ஆடியோ. உதயநிதியும் சபரிசனம் கிட்டத்தட்ட முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை சேர்த்து வைத்துள்ளார்கள், இது அவங்க தாத்தா காலத்திலேயே இந்த அளவுக்கு சேர்த்தது கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த பணத்தை இப்போது சேர்த்து வைத்து எங்கு முதலீடு செய்வது? எப்படி பதுக்குவது? என தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர். நல்லவேளை நமக்கு அந்த தொந்தரவு இல்லை’ என நிதியமைச்சர் பி.டி.ஆர் அசால்டாக பத்திரிகையாளர் அவர்களிடம் கூறும் அந்த ஆடியோ வெளியானது முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளிவந்து கிட்டத்தட்ட மூன்று தினங்கள் கடந்த பிறகும் இந்த விவகாரம் தரப்பொழுது தமிழக அரசியல் இன்னும் சூடு குறையாமல் இருந்து வருகிறது இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆடியோ விவகாரத்தில் சிக்கிய காரணத்தினால் திமுகவின் மற்ற அமைச்சர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்ற சில தகவல் விசாரித்த பொழுது நல்ல வேலை பி.டி.ஆர் மாட்டினார், மாட்டட்டும் இதுதான் நமக்கு நல்லது என சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனியார் யூ ட்யூப் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ‘நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ரொம்ப ஆணவம் பிடித்த ஆள், அவர் மற்ற அமைச்சர்களை மதிக்க மாட்டார் இன்னும் சொல்லப்போனால் முதல்வரின் மருமகன் சபரீசனும், பி.டி.ஆரும் உறவினர்கள் ஒருவகையில் பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுமே பி.டி..ஆர் ஆகிய இருவரும் உறவினர் என்ற முறையில் தான் வருவார்கள். அந்த வகையில் தான் அயல்நாட்டில் படித்தவன், பெரிய பெரிய வங்கிகளில் வேலை செய்தவன், டன் கணக்கில் பணத்தை ஹேண்டில் செய்திருக்கிறேன், எவ்வளவு பெரிய வங்கிகளுக்கெல்லாம் நான் பட்ஜெட் போட்டு இருக்கிறேன், இந்த நான் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன் என்பது போன்று மிகவும் ஆணவமாக பேசுவார். ஆனால் அதெல்லாம் பொய் அவரது துறையில் இருந்து செல்லும் அனைத்து கோப்புகளுக்கும் குறிப்பிட்ட அளவு சதவீதத்தை தான் அவர் கமிஷனாக பெற்றுக் கொண்டு வருகிறார். மேலும் இதனை எல்லாம் கவனிக்க இலக்குவன் என்ற உதவியாளர் இருக்கிறார் என்ற தகவலையும் போட்டு உடைத்தார், இப்படி உதவியாளர் வைத்துக்கொண்டு கோடி கோடியாக பணத்தை அடிக்கும் உங்களுக்கு எதுக்கு சமூக நீதி, மக்கள் சேவை, திராவிடம் மாடல் ஆட்சி என்ற பெயரெல்லாம் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று! என பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை பற்றி சவுக்கு சங்கர் விமர்சித்தார். மேலும் ஒரு குறிப்பிட்ட தகவலையும் சவுக்கு சங்கர் பகிர்ந்து கொண்டார். அது என்னவென்றால் பிடிஆர் இப்படி சிக்கிய விஷயம் மற்ற அமைச்சர்களை குறிப்பாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் ‘மாட்னாண்டா’ என்கின்ற வகையில் சந்தோஷமாக இருக்கின்றனர், ஏற்கனவே தலைவலி புடிச்ச ஆளு பி.டி.ஆர் போனா நல்லது தான் என்கின்ற வகையில் பல அமைச்சர்கள் இருக்கின்றனர் காரணம் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எந்த அமைச்சரை மதிப்பது கிடையாது இதுதான் காரணம், இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது போன்ற ஆடியோவில் சிக்கியது பல திமுக மூத்த அமைச்சர்கள் மத்தியில் ‘ஆணவத்தில் இருக்கும் பி டி ஆர் க்கு இதெல்லாம் தேவைதான்’ என்கின்ற ரீதியில் கருத்து கூறி வருகின்றனர் என்று கூறினார். மூத்த அமைச்சர்கள் பி.டி.ஆர் மாட்டினார் என சந்தோசமாக இருப்பது பி டி ஆர் தரப்பை மேலும் சோகமாக்கி உள்ளது.