கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்.. அதிர்ச்சியில் எடப்பாடி..?

கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்.. அதிர்ச்சியில் எடப்பாடி.. “கை”யில் விழுந்த கொங்கு..கொங்கு மண்டல கோட்டையை தன்பக்கம் திருப்பி அதிமுகவை அதிர வைத்து வருகிறது திமுக. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலம், திமுகவின் கையில் முழுமையாக வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.. அதற்கான சாத்தியக்கூறுகளும் ஈரோடு கிழக்கில் அரங்கேறி கொண்டிருக்கின்றன. எம்ஜிஆர் இருந்தபோதும் சரி, கருணாநிதி இருந்தபோதும்சரி, அதிமுகவும் திமுகவும் தன்னை சாதிக்கு ஆதரவாகவும், ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை..ஆனால் ஜெயலலிதா மட்டும் இதில் விதிவிலக்கு. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தேவர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.அதிமுகவை அகில இந்திய தேவர் முன்னேற்றக் கழகம் என்று தான் சொல்வார்கள். இதுவே அக்கட்சிகளின் ஆகச்சிறந்த பலமாக இருந்து வருகிறது.. இதில், கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை கொண்டதாகும்.. இங்கு மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகள் இருக்குது.. வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.. இதற்கடுத்து முதலியார்கள்… அருந்ததியினர்.. என்று பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.. எனினும், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்கு என்பது அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது.. ஒவ்வொரு வீடுகளிலும், சாமி படத்துக்கு பக்கத்திலேயே எம்ஜிஆர் படத்தையும், கொங்கு மக்கள் வைத்துக் கொள்வார்களாம்.. அந்த அளவுக்கு எம்ஜிஆர் அந்த மக்களிடம் நெருங்கி இருந்திருக்கிறார் அவருக்கு பிறகுகூட, கொங்கு மண்டலத்தை தன் பிடியில் இருந்து விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டு வைத்திருந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா..இதற்கு பிறகு கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 61 அதிமுகவினர் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்கள்.. இதுதான் ஆட்சி அமைய அப்போது முக்கிய காரணமாக இருந்தது… இதற்கு முன்புவரை கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது இல்லை என்பதும் அதிமுகவுக்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்துவிட்டது.. கடந்த 1989-ல்அதிமுக இரண்டாகப் பிரிந்து களம் கண்டபோது, ஜெயலலிதா அணி வெற்றி பெற்ற 27 எம்எல்ஏக்களில், 17 பேர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதன்பின், 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தவிர, கடைசியாக நடந்த 2016 தேர்தல் வரை அதிமுக கொங்கு மண்டலத்தை தனது கோட்டையாகவே மாற்றிவிட்டது.. கடந்த 2011-ல் மொத்தமுள்ள 57 தொகுதிகளில், 45 தொகுதிகளையும், 2016-ல், 53 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிக்கொடி நாட்டியது. மிக மிக முக்கிய அமைச்சர்கள் 4 பேர் இதே கொங்குவில் இருந்ததால், சகல அறிவிப்புகளும் இந்த மண்டல மக்களை குளிர்வித்தபடியே இருந்ததை மறுக்க முடியாது.. அதனால்தான், திமுகவின் வெற்றி என்பது இங்கு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. கருணாநிதி இருந்தபோது, கொங்கு வேளாளருக்கு பிசி சட்டம் கொண்டுவந்தார்… வன்னியர்களுக்கும் எம்பிசிக்கு கொண்டு வந்தார்.. அருந்ததியருக்கும் உள்ஒதுக்கீடு செய்தார்… இப்படி 3 சாதிகளுக்கும் கருணாநிதி செய்த நலன்கள் ஏராளமானவை.. அப்படி இருந்தும் சொதப்பிடுச்சே திமுகவால் அங்கு நிலையாக கால் ஊன்ற முடியவில்லை என்பது கவலைக்குரியதாகவே இருந்தது.. அதேசமயம், கடந்த காலங்களில், கொங்கு மண்டலத்தில் கருணாநிதி எடுத்த சில தவறான முடிவுகளும், அரசியலும்கூட காரணமாக இருந்தன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 10 வருடம் கழித்து, திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.. அப்போதுகூட, மெஜாரிட்டி வெற்றியை பெறவிடாமல் சொதப்பிவிட்டதே இந்த கொங்கு மண்டலம்தான்.. எவ்வளவுதான் நலத்திட்டங்கள், வாக்குறுதிகள், அறிவிப்புகளை செய்தாலும், “வெள்ளாள கவுண்டர்” என்ற ஒரு புள்ளியை வைத்து, திமுகவை ஆட்டம் காண வைத்துவிட்டது அதிமுக வை ஆதரிக்கும் கொங்கு மண்டலம்.. இந்த சூட்சுமத்தைதான் முதல்வர் ஸ்டாலின் கண்டறிந்தார்.. 4 புள்ளிகள் அதே சமுதாய புள்ளிகளை முன்வைத்து, திமுகவின் மைனஸ் பாயிண்ட்கள் அத்தனையும் நொறுக்க வியூகம் வகுத்தார்.. அதிமுகவின் கோட்டை என்று தெரிந்தும், பாஜகவின் ஆதரவு சார்ந்த இடம் என்று தெரிந்தும், திருமாவளவன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு 10 வருடத்துக்கு மேலாக கோபம் இருக்கிறது என்று தெரிந்தும், கொங்குவை கொக்கி போட்டு இழுக்க துணிந்தார். அதற்காக 4 பேரை முன்னிறுத்தினார்.. செந்தில்பாலாஜி அதில் முக்கியமானவர்.. தன்னைவிட வலிமை குறைந்தவரை வெல்வதைவிட, சரிக்கு சமமான பலமுடையவரை வெல்வதில்தான், ஒரு தலைவனின் அழகு பொதிந்துள்ளது.. வெட்டி வா என்றால் கட்டி வருவார். அந்தவகையில், சிட்டிங் அமைச்சரான விஜயபாஸ்கரை வீழ்த்தி, கொங்குவில் முதல் நம்பிக்கையை செந்தில் பாலாஜி ஏற்படுத்தி தந்தார். அடுத்து, முத்துசாமியை களமிறக்கினார் முதல்வர் ஸ்டாலின்… அடுத்து சக்கரபாணியை களமிறக்கினார்.. அடுத்து வெள்ளக்கோயில் சாமிநாதனை களமிறக்கினார்.. இந்த 4 பேருமே வெள்ளாள கவுண்டர்கள்தான்.. இவர்களைதான் ஸ்டாலின் பெரிதும் நம்பி, கொங்கு திமுகவை ஒப்படைத்தார்.. இந்த 4 பேர் நாலாபக்கமும் சுழட்டி சுழட்டி அடித்ததாலேயே, எடப்பாடி பழனிசாமியின் கூடாரம் மெல்ல மெல்ல ஆட்டம் காண ஆரம்பித்தது. கனவு தகர்ந்தது. எடப்பாடியின் ஜாதி பலம் + பாஜகவின் இந்துத்துவம் + எல் முருகன் + கொங்குவை சேர்ந்த பாஜக தலைவர் = போன்றவைகள் அனைத்தையுமே பின்னுக்கு தள்ளிக்கொண்டு திமிறிவிட்டது திமுக.. இதோ இப்போதும் கூட நிரூபணமாகிவிட்டது.. ஈரோடு கிழக்கு கொங்குவாக இருந்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வாக்கு வங்கியுள்ளது… உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாநகராட்சியை, திமுக வென்று காட்டியது.. இத்தனைக்கும் ஆட்சிக்கு வந்த இந்த ஒன்றரை வருட காலத்திலேயே ஆளும்கட்சி மீது இத்தனை புகார்களும், சலசலப்புகளும் வேறு எந்த கட்சிக்கும் எழுந்ததில்லை.. ஆனால், திமுகவுக்கு அந்த நெருக்கடி கூடியது.. விமர்சனங்கள் கூடியது.. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகார்களும் உள்ளன.. பிளறிய சத்தம் இத்தனையும் தாண்டி, திமுக ஈரோட்டில் ஸ்ட்ராங்காகவே உள்ளது.. கோவை, திருப்பூர் மாநகராட்சியும் ஏற்கனவே திமுக வசமாகி உள்ளது.. ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமான முதல்சுற்றிலேயே, முதல் நபராக முன்னணிக்கு வந்துவிட்டார் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளந்தது ஆக கொங்குவில் திமுக அசுர பலம் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது.. இந்த விஷயத்தில், செயல்புயல் செந்தில் பாலாஜியின் பங்களிப்பை அவசியம் குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.. “வெட்டி வா என்றால், கட்டி வந்துவிடுகிறாரே” என்று ஒவ்வொரு முறையும் முதல்வர் ஸ்டாலின் பூரித்து சொல்லும் அளவுக்கு செந்தில் பாலாஜியின் முன்னெடுப்புகள் திமுகவுக்கு பலம் சேர்த்து வருகின்றன.. கருணாநிதி மகன் கருணாநிதி காலம்போல இல்லாமல் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் பலமான இடங்களிலும் கால்பதிக்கும் திட்டத்தை தொடங்கினார். அதில் வெற்றியும் பெற்று வருகிறார். இத்தனை காலமாக, கொங்குவை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருந்த கருணாநிதியாலும் முடியாத விஷயத்தை ஸ்டாலின் ஒவ்வொன்றாக முடித்து காட்டி துவங்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. இன்னொன்றையும் நாம் இங்கு சொல்லியாக வேண்டியாக உள்ளது.. “உங்கள் நபர் எடப்பாடிக்கு பதிலாக, இதோ கொங்குவில் நான் இருக்கிறேன்” என்ற அடர்த்தி மிகுந்த மெசேஜ்ஜை பறைசாற்றி வருகிறார் கருணாநிதி மகன் முக ஸ்டாலின்..!!!!

Related posts:

அரசியலில் குதிக்கும் விஜய்! பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு? அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள் ?
முதல்வர் ஆவாரா ஸ்டாலின் ? STALIN WOULD BE THE C M |
பொதுச் செயலாளராகும் எடப்பாடி ! சசிகலா மறைமுக ஆதரவு ?
கவலைப்படாதீங்க".. தைரியப்படுத்திய முதல்வர் !. பிடிஆரின் அதிரடி முடிவு !
லாட்டரி தொழில் நடத்தி நிதி சேர்க்கும் எண்ணமே திமுக அரசிடம் இல்லை!- PTR பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்!
அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஓபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார். !
234 தொகுதிகளில், 184 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளனர்
அதிமுக கூட்டணியில் சசிகலாவை சேர்க்க வேண்டும் !