ஐசிஎஃப் ரெயில்பெட்டி தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க வட மாநிலத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் !

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளை வடமாநிலத்தவர்களே ஆக்கிரமித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மத்தியஅரசு பணிகளிலும், மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்தியஅரசு மாற்றான்தாய் போக்கில் செயல்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரெயில்பெட்டி தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க வட மாநிலத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ரயில்வே நிர்வாகம் சார்பில், ரெயில்பெட்டி தொழிற்சாலையில், அப்ரண்டீஸ் பணிக்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு கடந்த 20ந்தேதி வெளியானது. அதன்படி 510 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.  இந்த பணிகளுக்கு தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகஅரசின் நடவடிக்கை காரணமாக, ரெயில்வே நிர்வாகம் இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts:

10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!

இந்தி மட்டும் அல்ல உலகின் எந்த மொழியும் கற்றுக்கொள்வதில் தவறில்லை! ஆனால்....

இந்தியக் கல்வியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல்!

உதவித்தொகையுடன் கணிதம், புள்ளியியல் படிக்கலாம் !

சிவசங்கர் பாபா மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

மத்திய அரசுப் பணிகளுக்கு 12 மொழிகளில் தேர்வு ! அமைச்சர் ஜிதேந்திர சிங்

தொழில்நுட்ப தகுதிகளுடன் தரமிக்க ஆசிரியர்களை உருவாக்கும் - டிஏவி பள்ளிகள் !

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்'? இது சாத்தியமா?