ஓபிஎஸ் ஐ புறக்கணித்த மோடி.. நிறைவேறாத ஓபிஎஸ் பிளான்?

ஓபிஎஸ் ஐ புறக்கணித்த மோடி.. நிறைவேறாத ஓபிஎஸ் பிளான்? டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்க மறுத்துட்டதாக தகவல்கள் வருது. இந்த சம்பவத்ததுக்கு பின்னால வேறு சில காரணங்கள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் சொல்லுது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது கைப்பற்றணும்னு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறாரு. வரும் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட இருக்குது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுது. அதோடு பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடிக்கு கொடுப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்படும்னும்னும் சொல்றாங்க. ஓபிஎஸ்ஸோட கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்?  இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் பொதுக்குழு முடிந்ததும் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் சில மணி நேரங்கள் ஆலோசனை செஞ்சிட்டு  டெல்லிக்கு புறப்பட்டுப் போனாரு. டெல்லிக்கு அவசரமாக விமானத்தில் போனவர் , நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தாரு. ஆனா பாஜக கூட்டணி சார்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செஞ்சாரு இல்லையா அதில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ்ஸூம் அவரது மகன் ஓ பி ரவீந்திரநாத் எம்பி இரண்டு பேரும் கூடவே இருந்தாங்க. ஆனா மோடியை தனியாக சந்திக்க முடியலை இதில் ஓ பன்னீர்செல்வத்தை பார்த்த பிரதமர் மோடி.. வாஞ்சையாக தோளில் தட்டி இருக்கிறாரு சிரித்தபடி அவரிடம் நலம் விசாரிச்சாரு. ஆனால் அவரிடம் மட்டும் நலம் விசாரிக்கலை. அங்கு இருந்த எம்பி தம்பிதுரை போன்றவர்களிடமும் நலம் விசாரிச்சாரு. மற்றபடி ஓபிஎஸ்ஸை அவர் தனியாக சந்திக்கலை. அந்த நிகழ்ச்சியில நிறைய எம்பிக்கள், சீனியர் அமைச்சர்கள் இருந்ததுனால ஓபிஎஸ்சால் தனியாக பிரதமர் மோடியை சந்திக்க முடியலை. ஓபிஎஸ், ஓபிஆர் இரண்டு பேரும் எப்படியாவது மோடி முகத்தில் படும்படி நிற்கணும்னு அவரின் முன் அடிக்கடி வர வேண்டும். அப்போதுதான் அவர் நம்மை அழைப்பாருன்னு முயற்சி பண்ணி பாத்திருக்காங்க. ஆனால் அப்படியும் மோடி இவர்களை பெரிதாக கண்டுகொள்ளலை. இது போக.. சென்னையில் இருக்கும் முக்கியமான “லாபியிஸ்ட்” ஒருவர் மூலம் பேச வைத்து, பிரதமர் மோடியின் அப்பாயின்மென்டை வாங்க முயற்சி பண்ணி இருக்கிறார் ஓபிஎஸ். ஆனால் அதுவும் செட்டாகலை. வேறு புள்ளியை பார்த்து புலம்பியிருக்காரு ஏற்கனவே நான் லாபி பார்த்தது எல்லாம் வீணாகிப்போச்சி. அதற்கே பாஜக தலைமை என்மேல கோபத்தில் இருக்காங்க.. மீண்டும் இந்த விவகாரத்தில் நான் தலையிட விரும்பலைன்னு அந்த புள்ளி ஒதுங்கிடுச்சாம். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வேறு புள்ளியை பார்த்து ஓபிஎஸ் புலம்பி இருக்கிறார். டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகியை பார்த்து எப்படியாவது மோடியை சந்திக்க நேரம் வாங்கிக்கொடுங்கள். இக்கட்டான சூழ்நிலையில் இருக்கோம்ன்னு சொல்லியிருக்கிறாரு. ஏக்கத்தோடு இருந்த ஓபிஎஸ்ஸுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் விடையாக கிடைச்சதாம்.. ஆமா நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்துள்ளார் . பிரதமர் அலுவலகம் கடைசி வரை இவருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கலை. இதனால் ஓபிஎஸ் சோகம் அடைஞ்சிட்டாராம். ஏதாவது செய்யலாம்.. அதிமுகவில் டெல்லி மூலம் பிரஷர் கொடுக்கலாம்னு நெனச்சவருக்கு ஏமாற்றம்.தான் மிஞ்சிச்சாம் ஆனால் மற்ற பாஜக தலைகள் சிலரை இவர் வெற்றிகரமாக சந்தித்து இருக்கிறார்.  மற்ற பாஜக தலைவர்கள் சிலரிடம் அதிமுகவினரிடம் பேசுங்கள் என்று பிரஷர் கொடுத்துள்ளார். அவர்களும் பேசுவதாக கொஞ்சம் நம்பிக்கையாக பேசி இருக்கிறார்களாம். ஆனால் இந்த தகவலும் உடனே எடப்பாடி காதுகளுக்கு சென்று இருக்கிறதாம். தம்பிதுரை எம்பி டெல்லியில் கண் கொத்தி பாம்பாக ஓபிஎஸ் எடுத்த ஒவ்வொரு மூவையும் கவனித்து வந்துள்ளார். இவர் மூலம் டெல்லி பயணத்தின் சீக்ரெட் எல்லாம் எடப்பாடி காதுகளுக்கு சென்று இருக்கிறதாம்.  பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்காமல் இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுது. அதன்படி, அதிமுக விவகாரத்தில் இப்போது அவர் மத்தியஸ்தம் பேச விரும்பலைன்னு சொல்றாங்க. அதோட பிரதமர் மோடி சொல்லித்தான் நான் துணை முதல்வர் பதவி ஏற்றேன்னு ஓபிஎஸ் அந்த ரகசியத்தப் போட்டு உடைச்சதையும் அவர் சுத்தமாக விரும்பலையாம். இதனால் மீண்டும் இதில் சமாதானம் பேச போய்.. அதை எதிர்காலத்தில் ஓபிஎஸ் சொல்லிக்காட்டுவாருன்னு மோடியும், பாஜக மேலிடமும் இதில் ஒதுங்கிக்கிட்டதாக சொல்லப்படுது.

ஒரே நேரத்தில் 4 குதிரைகள் மேல் ஓ.பி.எஸ்., சவாரி: ஓரங்கட்டப்பட இவை தான்! !!

அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரம் உருவானதற்கு ஓ.பி.எஸ்., செய்த சில காரியங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதிமுக.,வில் சில நாட்களுக்கு முன்பு வரை, ஒற்றை தலைமை என்ற பேச்சு எழவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் இ.பி.எஸ்.,க்கு ஆதரவாக ஓங்கி ஒலிக்கிறது. ஏன் இந்த திடீர் கோரிக்கை என்று கட்சியினர் சிலரிடம் பேசிய போது, அவர்கள் கூறியதாவது:

முதல் காரணமாக கூறப்படுவது, சசிகலாவை அ.தி.மு.க.,விற்குள் கொண்டு வருவதற்கு ஓ.பி.எஸ்., செய்த மறைமுக முயற்சி. மனம் திருந்தி வந்தால் சசிகலாவை ஏற்று கொள்வோம் என்று அவர் கொடுத்த பேட்டியை அ.தி.மு.க.,வில் பலர் ரசிக்கவில்லை. இ.பி.எஸ்., சுத்தமாக ரசிக்கவில்லை.

இன்னொரு காரணமாக கூறப்படுவது, ஓ.பி.எஸ்., சின் தம்பி ராஜா பகிரங்கமாக சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தது. இதன் பிறகு ராஜா அ.தி.மு.க.,வை விட்டு நீக்கப்பட்டாலும் சசிகலா – ராஜா சந்திப்பின் பின்னணியில் ஓ.பி.எஸ்., இருப்பதாக கட்சியினர் சந்தேகப்பட்டனர். மறைமுகமாக இ.பி.எஸ்.,க்கு ஓ.பி.எஸ்., சவால் விடுகிறார் என்றே கட்சியினரால் கருதப்பட்டது.
மூன்றாவது முக்கிய காரணம், முதல்வர் ஸ்டாலினை ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத் ரகசியமாக சந்தித்து தி.மு.க., ஆட்சியையும் பாராட்டி பேசியது. இந்த தகவல் வெளியே கசிந்ததும், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அ.தி.மு.க.,வின் ஜென்ம விரோதியான தி.மு.க.,வின் தலைவரையும் சந்தித்து, பாராட்டியும் பேசியதை பலரால் ஜீரணிக்க முடியவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இ.பி.எஸ்., கடினமாக தி.மு.க.வை எதிர்த்து பேசி, தட்டிக் கேட்டு வந்த நிலையில் தி.மு.க., வை ஓ.பி.எஸ்.,தடவிக் கொடுத்தது கட்சியினரின் விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல பா.ஜ.,விடமும் ஓ.பி.எஸ்., தனிப்பாசம் காட்டுவதாக இன்னொரு பேச்சு பலமாக அடிபட்டது.
இப்படி சசிகலாவும் வேண்டும், ஸ்டாலினும் வேண்டும் , பா.ஜ.,வும் வேண்டும், அ.தி.மு.க.,வும் வேண்டும் என்று நான்கு குதிரைகளின் மேல் ஒரே நேரத்தில் ஒ.பி.எஸ்., சவாரி செய்ய முயற்சித்தது அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டது.
ஓ.பி.எஸ்.,ஐ நம்பி கட்சியை நடத்த முடியாது என்று அ.தி.மு.க., விசுவாசிகள் பலர் கருத துவங்கினர். இந்த காரணங்கள் எல்லாம் சேர்ந்து ஓ.பி.எஸ்., ஐ அ.தி.மு.க.,விற்குள் ஓரம்கட்ட வைத்துவிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிமுகவின் இந்த உட்கட்சி பிரச்சனையை மேலிட தலைவர்கள் விரும்பவில்லையாம்.. கட்சி ஒன்றாக இருந்தால்தான், வாக்கு சதவீதம் அப்படியே கூட்டணிக்கு திருப்ப முடியும், திமுகவை பலவீனப்படுத்த முடியும் என்று பாஜக கணக்கு போடுகிறது.. அதுமட்டுல்ல, எடப்பாடி பழனிசாமி பக்கம், பெரும்பாலான ஆதரவாளர்கள் தற்போது இருப்பதால், இந்த முறையும் ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி ஆதரவு தருமா என்பது சந்தேகம்தானாம்.. இதையடுத்து சில பாஜக நிர்வாகிகளை மட்டும் அவர் சந்தித்து பேசி இருக்கிறார். டெல்லியில் ஒரு முக்கிய பாஜக புள்ளியையும் அவர் சந்திச்சி இருக்காரு. நேற்று மாலையே சென்னை திரும்பினாரு ஓபிஎஸ் டெல்லியில் பேசிய விஷயங்களை அவர் சென்னையில் தனது ஆதரவாளர்களிடம் பேசி இருக்கிறார். இதில் பாஜக பெரிதாக மத்தியசம் செய்ய முன்வரவில்லை என்று சொல்லப்படுது. ஓரளவிற்கு சமாதானம் செய்ய முயல்கிறோம்.. முடிந்த அளவு மட்டுமே சரி பண்ணலாம் என்று மட்டுமே டெல்லி மேம்போக்காக கூறி உள்ளதாம். ஆனால் வேறு ஒரு ஆஃபரை டெல்லி இவருக்கு வழங்கி இருக்கிறதாம். அரசியலில் நீங்கள் அதிக அனுபவம் கொண்டவர். நீங்கள் ஏன் ஆளுநர் ஆக கூடாது. மற்ற மாநிலங்களில் ஆளுநராக உயர் பதவியில் இருக்கலாம். விரைவில் ஆளுநர்களை நாடு முழுக்க பல மாநிலங்களில் கூட மாற்ற இருக்கிறோம். தெலுங்கானாவில் கூட மாற்ற வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஏன் ஆளுநர் ஆக கூடாது என்று டெல்லி தரப்பு இவரிடம் ஆஃபர் கொடுத்துள்ளதாம். கண்டிஷன் 1 அதோடு இரண்டு கண்டிஷன்களையும் கொடுத்துள்ளதாம். அதிமுக விவகாரத்தில் நீங்கள் ஆளுநர் ஆன பின் கருத்து சொல்ல கூடாது. அதிமுகவில் இப்போது உங்களுக்கு ஆதரவு இல்லை. அதனால் நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்பது போல பேசி இருக்கிறதாம். இரண்டாவது கண்டிஷன், உங்கள் மகன்கள், தேவர் சமூகத்தை சேர்ந்த உங்களின் ஆதரவாளர்கள் எங்கள் கட்சியில் இணைய வைக்கணும். அவர்களுக்கான பதவி குறித்து கவலைப்பட வேண்டாம்னு சொல்லி இருக்கிறதாம் டெல்லி. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆளுநர் பதவி ஆஃபர் என்பதை வெறுமனே ஐடியா போலவே கொடுத்துள்ளனர். அதனால் அதை ஓபிஎஸ் பெரிதாக கண்டுகொள்ளலை. இப்போதைக்கு ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகும் எண்ணம் கிடையாது. அதிமுகவில் இன்னும் எனக்கு ஆதரவு இருக்குதுன்னு பாஜக தரப்பிடம் ஓபிஎஸ் தெரிவிச்சிருக்கிறாராம். சென்னை வந்த பின்னாடி அவர் முக்கியமான சில ஆலோசனைகளை செய்ய இருக்கிறாராம்.டெல்லி தரப்பு ஓபிஎஸ்ஸை கழட்டி விட்டுடுச்சின்னு சொல்றாங்க.டெல்லியோட பார்வை எடப்பாடி பக்கம் திரும்பிடுச்சிங்கறாங்க.எடப்பாடிக்கு இந்த அளவுக்கு ஆதரவு கட்சிக்குள் இருக்கும்னு டெல்லியே நினைக்கவில்லையாம்.. கட்சியையும், நிர்வாகிகளையும், சீனியர்களையும் எடப்பாடி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை பார்த்து மிரண்டுதான் போயிருக்காம்.. எம்பி தேர்தல் வர இருக்கிற இந்த நிலையில், எப்படியும் அதிமுகவின் தயவுதான் பாஜகவுக்கு தேவைப்படும்ங்கிறதுனாலும், பெரும்பாலான அதிமுக, எடப்பாடி பக்கமே இருக்கிறதாலும், இந்த விஷயத்தில் படு ஜாக்கிரதையாக பாஜக காய் நகர்த்துவதாக சொல்லப்படுது. அதனால், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்துட்டா, அதிமுகவின் வாக்கு சதவீதத்தை இழக்க வேண்டி வரும்ங்கிற கலக்கமும் பாஜகவுக்கு இருக்குதாம்.. அதனால இப்போதைக்கு இந்த விஷயத்தில் அமைதியா இருப்போம்ன்னு பாஜக முடிவெடுத்திருக்காம்… ஆனால், எடப்பாடி பழனிசாமியோ வேறு கணக்கு போடுறாராம்.. ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு டெல்லி மேலிடம் பச்சை கொடி காட்டிட்டால் என்ன செய்றதுன்னு யோசிச்சு, அதற்காகவே காங்கிரஸ் தரப்பில் நெருக்கம் காட்ட துவங்கிட்டதாக சொல்றாங்க.. வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, அதற்கான காய்நகர்த்தலைதான் எடப்பாடி இப்போதே கையில் எடுத்துட்டாருங்கிறாங்க அதிமுக விசுவாசிகள்.. – இதுவும் பாஜகவுக்கு ஷாக்தானாம்.. அதிமுகவின் தயவு இல்லாமல் தனித்து எந்த ஒரு தேர்தலையும் சந்திக்க முடியாத நிலமை இருக்கும் போது, எடப்பாடியை நிச்சயம் பாஜக பகைத்து கொள்ளாது, அதேசமயம், காங்கிரஸ் பக்கமும் அதிமுகவை நழுவவிட்டுவிடாதுன்னும் சொல்றாங்க. அரசியல் நோக்கர்கள்.. டெல்லியை வைத்து, எடப்பாடிக்கு ஒரு செக் வைக்க ஓபிஎஸ் ஒரு கணக்கு போட்டால், டெல்லியையே அசைக்க எடப்பாடி ஒரு கணக்கு போட்டுவருவதுதான், இன்றைய ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்குது..!

ஓ.பன்னீர்செல்வத்துக்கான வாய்ப்புகள் என்னவாக இருக்கும்?

ஒற்றைத் தலைமை வருவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை.

அதிமுகவின் சொத்து என்பது பெயரும் இரட்டை இலையும் மட்டும்தான்.

அது யார் கையிலிருந்தாலும் அதே வாக்குகள்தான் கிடைக்கும்.

ஓபிஎஸ்-க்கான வாய்ப்பு என்பது தனக்குக் கிடைக்கும் பதவியைப் பெற்றுக் கொண்டு அங்கேயே இருக்கலாம்.

அவருக்குப் பொருளாளர் பதவி கொடுக்கப்படலாம்

என்ன நடக்க போகுதுன்னு தெரியலை..பொறுத்திருந்து பார்ப்போம்.