அலோபதி துறைக்கு பிடிக்காத 2 விஷயங்கள் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.

கொரோனா குணமாக வேண்டும் என்று உண்மையில் அரசோ அதிகாரிகளோ விரும்புகிறார்களா?

அலோபதி துறைக்கு பிடிக்காத 2 விஷயங்கள் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.

1. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த டாக்டர் என். வசந்தகுமார் 2 ரூபாய் விலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு மாத்திரையை பரிந்துரை செய்துள்ளார். அவர் சென்னை MMC கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர். நியூரோ சயின்ஸ் துறையில் எம்.பில். ஆராய்ச்சி முடித்தவர். வேலூர் சி.எம்.சி.யில் எம்.டி. முடித்தவர். ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் ஆராய்ச்சியாளர். அவர் தனது பரிந்துரை விஷயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, இதை ஆய்வு செய்து விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். அமைப்புக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இது ஜூன் 11 தேதியிட்ட பத்திரிகைகளில் வெளியான செய்தி.

2. தாம்பரத்தில் உள்ள தேசிய சித்தா ஆராய்ச்சி மையம், சித்த மருந்து கொடுத்தால் 3 நாளில் கொரோனா குணமாகிறது, நாங்கள் 160 பேருக்கு குணமாக்கிவிட்டோம், சென்னையில் உள்ள எல்லா கொரோனா நோயாளிகளையும் எங்களிடம் ஒப்படையுங்கள், 5 நாளில் கொரோனா இல்லாத சென்னையை உருவாக்கிடலாம் என்று அறிவித்தது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் வரும் ஆராய்ச்சி நிலையம். இதுதொடர்பாக அதன் இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி வெளிப்படையாக பேட்டியே கொடுத்தார். இது ஜூன் 15 ஆம் தேதி பத்திரிகைகளில் வெளியான செய்தி.

சித்தா மருந்து விஷயத்தில் தமிழக அரசோ, கிருஷ்ணகிரி மருத்துவர் மனு விஷயத்தில் டெல்லி ஐ.சி.எம்.ஆர். அமைப்போ இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது என தெரியாது.

இதற்கிடையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என்று வடநாட்டு நிறுவனம் அறிவிக்க, அப்படி எந்த லைசென்சும் தரவில்லை என அரசாங்கம் சொல்ல, அதற்கான விளம்பரம் மற்றும் விற்பனையை நிறுத்த அரசு உத்தரவிட்டது. இது ஜூன் 25 ஆம் தேதி செய்தியாக வெளியானது. அந்த மருந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக விற்கலாம் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி தந்திருப்பதால், அந்த வகையில் விற்கப் போகிறோம் என அதே நிறுவனம் அறிவிக்கிறது. இது ஜூலை 1 ஆம் தேதி செய்தியாக வெளியாகி உள்ளது.
முதல் 2 விஷயங்களில் காட்டப்படாத வேகம் 3வது விஷயத்தில் நடந்திருக்கிறது.

அடுத்தது இங்கிலீஷ் டாக்டர்களின் அலோ-பதி சமாச்சாரம். விலை குறைந்த மருந்துகளில் நோய் குணமாகிவிட்டால், பெரு நிறுவனங்களின் மருந்து வியாபாரம் பாதிக்கப்படும். அதனால் தான் முதல் 2 விஷயங்களுமே சவுகரியமாக கண்டு கொள்ளப்படாமல் உள்ளது என்கிறார்கள் இங்கிலீஷ் வைத்தியத் துறையினர். நாங்கள் மருந்து கண்டு பிடித்திருக்கிறோம் என ஒவ்வொருவராக அறிவித்து வருகிறார்கள். முதலில் அறிவித்தது அமெரிக்க பணக்காரரின் இந்திய நிறுவனம். இன்னொன்று புனே நிறுவனம். எங்கள் மருந்து வந்துவிட்டால், ஒரு ஊசி மருந்தை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்களாம். தமிழ்நாடு MGR medical university-யும் மருந்து பரிசோதனையில் இருப்பதாக கூறியுள்ளது. இந்த மூன்றுமே இங்கிலீஷ் பார்முலா அடிப்படையிலானவை.

ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டிய மருந்துக்கு உரிய நோயை வெறும் 2 ரூபாயில் தமிழ்நாட்டுக்காரங்க குணமாக்கிவிட்டால், பொழப்பு என்னாவது என்பது தான் காரணமா?
தமிழக அரசும் ICMR-ம் ஏன் தாமதம் செய்கின்றன?

இதை பத்திரிகையோ, டி.வி.யோ கேட்க முடியாது. ஏனென்றால் மருந்துக் கம்பெனிகளின் அழுத்தம் அவர்கள் மீது இருக்கும். உடலுக்கு கேடு விளைவிக்கும் மருந்துகளை விற்கும் சூழ்நிலை பற்றி எல்லாம் நீங்கள் எழுதிவிட்டால் பெரிய விஷயம் என்று 80 வயது டாக்டர் ஒருவர் நம்மிடம் சவால் விட்டார். முதலாளிகள் தரப்பில் அவ்வளவு கெடுபிடி இருக்குமாம்.அதனால் மறுபடி வேறு வழிமுறைகள் மூலம் அரசுக்கு அழுத்தம் தந்தால் தவிர, 2 ரூபாய் மருந்தோ அல்லது தாம்பரம் சித்தா ஆராய்ச்சி நிலைய மருந்தோ வெளியில் வராமலே போய்விடும்.

சென்னைல சித்த மருத்துவர் வீரபாபு சாலிகிராமத்தில் ஜவஹர் கல்லூரியை 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றி 200 நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினர். நிறைய பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.அவரது முதல் தடுப்பு மருந்தே கபசுர குடிநீர் தான்.இதத்தான் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாலம் காரடியா கத்தினாரு.கத்தாதன்னு சொல்லி அவரை புடிச்சு உள்ள போட்டுட்டாங்க. ஆனா அரசு கொரோனா நோயாளிகளுக்கு இப்ப கபசுர குடிநீர் தான் கொடுக்கணும்னு சொல்லுது. சித்த மருத்துவர் வீரபாகு அவருக்கு அதிக படுக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரயோஜனமில்லை.

இந்த விஷயத்தில் சட்ட வல்லுநர்கள் தான் கை கொடுக்க வேண்டும். முதலமைச்சர் பழனிச்சாமி சொன்ன மாதிரி அந்த ஆண்டவன் தான் மக்களைக் காப்பாத்தணும். வாழ்க வளமுடன்.

Related posts: