புள்ளி விவரங்களுடன் ஸ்டாலினுக்கு பதிலடி; அடித்து விளாசும் ஓபிஎஸ்…!

தமிழகமெங்கும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரம் செய்தார். பின்னர் இன்று சேலம் வந்து தனியார் ஓட்டலில் தங்கிய சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓட்டலுக்குச் சென்று நேரில் சந்தித்தார். அப்போது அவரை ஓ பி எஸ் பொன்னாடை போர்த்து வரவேற்றார். பின்னர் இருவரும் தனி அறையில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். அப்போது அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்துர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்திற்காக கரூர் புறப்பட்டு சென்றார்.]

அதே சமயம் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் .

சேலம் மாவட்டம், எடப்பாடியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “2006-2011 திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் அதிக முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று சொன்னேன். அதற்கு புள்ளிவிவரம் இருக்கிறதா என்று கேட்கிறார் ஸ்டாலின். அவரைப்போல புள்ளிவிவரம் இல்லாமல் பேசுகிறவன் நான் இல்லை. நானும், முதலமைச்சர் எடப்படி கே.பழனிச்சாமியும் புள்ளிவிவரத்தோடு தான் பேசுவோம்.

2015-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப் பட்டு, 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது 72% திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

 

அதேபோன்று, 2019-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், ரூ. 3 லட்சத்து 501 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது 89.46% திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன” என்று அதிரடியாக தெரிவித்தார்

மேலும், கடந்த பத்து ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 280.36 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இது திமுக ஆட்சியை விட 13 மடங்கு அதிகம் என்றும் ஸ்டாலினுக்கு புள்ளிவிவரங்களோடு பதிலடி கொடுத்துள்ளார். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் ஸ்டாலின். பொய் சொல்வதையே குறியாக வைத்திருக்கிறார். எப்படியாவது பொய்யை சொல்லி ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கிறார். அது முடியாது. மக்கள் அதை நடக்க விட மாட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.