பாமக தேமுக தனித்துப் போட்டி! அதிர்ச்சியில் அதிமுக ?

பாமக தேமுக தனித்துப் போட்டி! அதிர்ச்சியில் அதிமுக ? தேமுதிக தனித்துப் போட்டியிடுறதப் பத்தி அதிமுகவுக்கு கவலையேயில்ல.ஆனா கூட்டணியிலேருந்து பாமக விலகுனதுனால நஷ்டம் அதிமுகவுக்குத்தான்.
சட்டப்பேரவையில் பாமக தரப்பிலேருந்து எந்த ஒரு பிரச்சனையும் எழுப்பப்படலை. முழுக்க முழுக்க திமுகவிற்கு மிகவும் இணக்கமாகவே பாமக சட்டப்பேரவையில் நடந்துச்சு. இதுக்குக் காரணம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப்போகுதுன்னு தான் பேச்சுகள் ஓடிக்கிட்டு இருந்துச்சு
.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ராமதாஸ்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக நீடித்துவந்தது. கூட்டணியில் வேறு எந்த கட்சிகளுக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை பாமகவிற்கு அதிமுக தலைமை கொடுத்து வந்தது. இந்த காரணத்தினால தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தே விலகிய போது கூட பாமக இருக்குதுன்னு தெம்பா இருந்தாரு எடப்பாடியார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகும் கூட பாமக விவகாரத்தில் அதிமுக தலைமை மிகுந்த கவனமாகவே இருந்து வந்தது. அன்புமணி ராமதாசை விமர்சிச்சாருங்கிற ஒரே காரணத்திற்காக பெங்களூர் புகழேந்தியை அதிமுகவில் இருந்தே நீக்கினாரு எடப்பாடியார்.

இதற்கெல்லாம் காரணம் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டியது அவசியம்ன்னு எடப்பாடி பழனிசாமி நெனைச்சது தான். ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு வழக்கம் போல அதிமுகவிடம் இருந்து சற்று தள்ளியே இருந்தது பாமக. அதிலும் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் கூட சட்டப்பேரவை செயல்பாடுகளில் அதிமுகவுடன் பாமக இணக்கம் காட்டவேயில்லை. இதப் பத்தி ஏற்கனவே பாமக தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி பலமுறை புகார் பண்ணியும் கூட ராமதாஸ் கண்டுகொள்ளலை. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளும் கட்சி எம்எல்ஏக்களே தோத்துப் போகும் அளவுக்கு பாமக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் புகழ் பாடுனாங்க.

சட்டப்பேரவையில் பாமக தரப்பில் இருந்து எந்த ஒரு பிரச்சனையும் எழுப்பப்படலை. முழுக்க முழுக்க திமுகவிற்கு மிகவும் இணக்கமாகவே பாமக சட்டப்பேரவையில் நடந்து கொண்டது. இதற்கு காரணம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கப்போகுதுன்னு தான் பேச்சுகள் அடிபட்டுச்சு. இந்த நிலையில் அண்மையில் அன்புமணியின் மகள் திருமணமும் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, குடும்பத்துடன் சென்று சந்தித்து அன்புமணி அழைப்பிதழ் வழங்கினாரு. ஆனா முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பினார் அன்புமணி.

அன்புமணி மகள் திருமண வரவேற்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகிட்டாங்க. ஆனா சென்னையில் இருந்துகிட்டு எடப்பாடி பழனிசாமி திருமண வரவேற்பில் கலந்து கொள்ளலை. இத்தனைக்கும் அன்புமணி வீடு தேடிச் சென்று பத்திரிகை கொடுத்திருந்தாரு. இதுக்கு காரணம் பாமக மீதான எடப்பாடியாரின் அதிருப்தி தான்ங்கிறாங்க. சட்டப்பேரவையில் பாமகவின் செயல்பாடு திமுகவிற்கு சாதகமாக இருந்ததும் கூட உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அந்த கட்சி தலைமை பிடிகொடுக்கலை.

இந்த சூழலில் தான் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று பின்னிரவு திடீரென ஜி.கே.மணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தாரு. அதில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.கட்சியில் பெரும்பாலானோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளதாகவும், இதேநேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்றும் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்றும், அதிமுகவுடன் நட்புடன் பாமக இருப்பதாகவும் அக்கட்சியில் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 9 மாவட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என பாமக அறிவித்த நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகிவிட்டதாக செய்திகள் பரவியது. அத்துடன் அதிமுக ஓபிஎஸ்- இபிஎஸ் இன் கட்டுப்பாட்டில் இல்லாத போது அவர்களுடன் கூட்டணி வைத்து எப்படி வெற்றி பெற முடியும் என்றும், செல்வாக்கு இல்லாத  அதிமுகவுடன் போட்டியிடுவதால் பாமகவுக்கு ஒரு பலனும் இல்லை என 9 மாவட்ட பொறுப்பாளர்கள் பாமக தலைமையிடம் வலியுறுத்தியதால் தனித்துப் போட்டி என்ற முடிவை பாமக எடுத்ததாகவும் தகவல் வெளியானது. அதிமுக குறித்து பாமகவின் விமர்சனத்தைப் கடுமையாக பதிலடிகொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணியில் தொடர்வதும் தொடராததும் அக்கட்சியின் உரிமை, அதனால் பாமக அதிமுகவை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாமக அதிமுக விமர்சிக்கும் பட்சத்தில் நாங்களும் பதிலுக்கு விமர்சிக்க நேரிடும் என அவர் பகிரங்கமாக பாமகவுக்கு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாமக  செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, தற்போது வரை பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடருது என்றும், எதிர் வரும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து நேற்று நடைபெற்ற பாமக இணையவழி கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையானோர் கட்சியினர் அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இன்னமும் அதிமுக கூட்டணியில தான் இருக்கோம். ஆனா இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனிச்சி போட்டியிடுறோம்ன்னு பாமக சார்புல விளக்கம் குடுத்திருக்காங்க.அதுக்கு என்ன காரணம்னா தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் ஆகும். இந்த ஏழு மாவட்டங்களிலும் பாமக பலம் வாய்ந்த கட்சியாக இருக்குது. அதனால இந்த தேர்தலில் முழு பலத்தையும் காட்டினாத்தான்அடுத்து நடைபெறப் போகும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் பேரம் பேச முடியும்னு  ராமதாஸ் கணக்கு போட்டுருக்காரு.

இப்போதைய சூழலில் கூட்டணிக்கு வாங்கன்னு திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரலை. இந்த 9 மாவட்ட தேர்தலில் பாமக கணிசமான வெற்றிகளை பெர்றதோட வாக்கு வங்கியையும் தக்க வைச்சுகிட்டா நிச்சயம் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தரப்பிடம் இருந்து கூட்டணிக்கு அழைப்பு வரும்னு ராமதாஸ் நம்புறாரு. இப்போதைய நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதுன்னு ராமதாஸ் கணக்கு போடுறாரு. அதனாலத் தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பாத்துட்டு நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மீன் பிடிக்க ராமதாஸ் தூண்டிலை தற்போது போட்டுள்ளதாக சொல்றாங்க..இன்னொரு காரணமும் இருக்கு வன்னியர்கள் கல்வி அறக்கட்டளை சொத்துக்களைப் பாதுகாக்கணும்னா ஆளுங்கட்சியையும் அனுசரிச்சுத் தான் போகணும்.அரசியல்ல எப்படி காய் நகர்த்தணுங்கிறத ராமதாஸ் கிட்டத்தான் கத்துக்கணும்.கவுண்டமணி சொன்ன டயலாக் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. நமக்கெதுக்கு வம்பு.