ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!

ஒரு இயக்குனராக அகத்தியா திரைப்படத்தை பற்றிய எண்ணப் பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

மூன்றாண்டு கால தொடர் உழைப்பில் நேர்த்தியான தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியோடு vels film international limted டாக்டர் கே.ஐசரி கணேஷ் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் wide angle media அனீஸ் அர்ஜூன் தேவ் இணைதயாரிப்பில் , நடிகர்கள் ஜீவா, அர்ஜூன் ,ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் அகத்தியா திரைப்படத்தின் ஊடக நண்பர்கள் காட்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

ஒரு நிறையான படைப்பாக அகத்தியாவை உங்கள் முன் முதல் காட்சியாக திரையிடும் இந்நேரத்தில் தமிழ் மரபு சார்ந்த ஒரு முக்கியப் பதிவையும் நம் மண்ணும் நம் முன்னோர்களும் நமக்களித்த பெரும் ஆற்றலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியையும் அகத்தியா திரைப்படத்தில் கதைக்களமாக படைத்துள்ளோம்.

இந்நேரத்தில் ஒரு இயற்கையின் அதிசய ஆசீர்வாதமும் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது, நாசா விண்வெளி நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 28 ஆம் தேதி ஏழு கிரகங்கள் நேர் கோட்டில் சந்திப்பதாக அதிசய நிகழ்வை குறிப்பிட்டுள்ளது. அதே தேதியில் பிப்ரவரி 28 வெளியாகும் அகத்தியாவும் இந்த நிகழ்வில் இணைக்கிறது . மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இக்கதையை எழுதும் போது அகத்தியாவின் அடிநாதத்தில் வான்வெளியில் நிகழும் ஏழு கிரங்களின் நேர்க்கோட்டு கூட்டணியை ‘கிரக மாலை ’ என்று அழைப்பார்கள் அந்த கிரக மாலை என்கிற அதிசயத்தை இத்திரைப்படத்தின் ஆரம்பக்காட்சி முதலே எதேச்சையாக பதிவாகி கிளைமாக்ஸ் காட்சியே இந்த கிரக மாலை ஏற்படுகிற சம்பவத்தை நோக்கி படமாக்கப்பட்டுள்ளது . . இது இயற்கையின் ஆசிகளாகவே தோன்றுகிறது,ஒரு ஹாரர் ஃபேண்டஸி திரைப்படத்திற்குள் நாங்கள் சொல்ல முயற்சித்திருக்கும் நம் மண் சார்ந்த மரபு வழி அறிவை திரைப்படமாய் படைத்திருக்கிறோம்.மக்களின் ஜனரஞ்சக வெற்றியை பெறுவதற்கு ஒரு சக நண்பனாக உங்களின் இரு கரங்கள் பற்றி அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

 

Related posts:

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகி...

நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்"~ தீப்ஷிகா!

பாத்ரூமிற்குள் செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள் !

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்

கலாச்சாரம், சமூகம் மற்றும் விளையாட்டைக் கொண்டாட தமிழ்நாடு முழுவதும் 'தமிழ் திருவிழா' என்கிற பள்ளித் தொடர்பு திட்டத்தை போகோ சேனல் அறிமுகப்படுத்தியுள்ளத...

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ?

’குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

ஜிஎஸ்டி ரிட்டர்னை 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் தயார் தடை ? மத்திய அரசு திட்டம் !