பக்க பிளானில் களமிறங்கும் பாஜக !!

பாஜகவில் போட்டியிடுறதுக்கு ஆளே இல்லன்னு கிண்டல் அடிச்சாங்க.ஆனா நிறைய பேர் ஆர்வத்தோட வேட்பு மனுத் தாக்கல் பண்ணிட்டு வர்றாங்க. பாஜக தனித்துப் போட்டிங்கிறது விஷப்பரிட்சைன்னு பாஜக நிர்வாகிகள் புலம்புறாங்க.அண்ணாமலைய காலி பண்றதுக்காகத்தான் அவர உசுப்பேத்தி தனித்துப் போட்டின்னு அறிவிக்க வைச்சாங்கன்றாங்க.
இதுல கணிசமான இடத்தில் ஜெயிச்சா அண்ணாமலை மவுசு கூடும் கேவலமா தோத்தா அண்ணாமலை காலிங்கிறாங்க.பாஜகவில பழத்தின்னு கொட்டை போட்ட பழைய பெருச்சாளிகள்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இணைந்து தேர்தலைச் சந்தித்து வந்த அதிமுக – பாஜக நடக்கவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியாக களமிறங்குது.

மாநில அளவில் இரண்டு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படாததால், தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதேவேளை, பேச்சுவார்த்தைகள் முடிவதற்கு முன்பாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது அதிமுக. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற தமிழக பாஜகவின் அதிரடி முடிவு, அக்கட்சி தொண்டர்களை மட்டுமின்றி, அதிமுக விசுவாசிகளையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று ஆறு மாதத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் தற்போது பாஜகவின் வெயிட் என்ன என்பதை அறிய அண்ணாமலை ஆசைப்பட்டுவிட்டதன் விளைவு தான் இதற்கு காரணம்ங்கிறாங்க. பாஜகவினர். இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரிச்சா என்ன சொல்றாங்கன்னா ‘தமிழக பாஜக  தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னாடி மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்தி வருகிறார்.

இளைஞர்கள் உட்பட பலரிடமும் ஆதரவு கிடைச்சு வருது. இதனால் பாஜக ஓட்டு சதவீதம் அதிகரிச்சிருக்குது.அதற்கு ஏற்ப நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் 30 சதவீத இடங்கள் ஒதுக்குமாறு, அ.தி.மு.க.,விடம் பேச்சு நடத்தப்பட்டது. அக்கட்சி, 10 சதவீதம் மட்டுமே வழங்குவதாக தெரிவித்தது.

தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சு நடத்தினால் கூடுதலாக, 5 சதவீத இடங்களை வழங்க அதிமுக தயாராக இருந்தது. அந்த இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தினாலும், அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு குடுப்பாங்கங்களாங்கிறத உறுதியாக சொல்ல முடியாது.வரும் லோக்சபா தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்த, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுக ஒதுக்கிய இடங்களை ஏற்காமல், பாஜக தனித்து போட்டியிடுவது தான் நல்லதுன்னு மாநில தலைவர் அண்ணாமலை முடிவெடுத்தார்.மேலிடத்தில ஒப்புதல் இல்லாமல் அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

பாஜகவுக்கு தமிழகம் முழுதும் தொண்டர்கள் இல்லைன்னு, திராவிட கட்சிகள் கூறும் நிலையில், இதனை முற்றிலும் உடைக்கணும்ங்கிறதுதான் அண்ணாமலையின் எண்ணம். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், ‘மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக சார்பில், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்’ என்ற தன்னம்பிக்கையுடன், பாஜக வேட்பாளர்கள் வேலை செய்வாங்க. அவர்கள் வாயிலாக ஓட்டுச்சாவடி முகவர்களும் கிடைப்பாங்க. வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபடும் போதும், மக்களை சந்திக்கும் போதும், மேலும் பலர் பாஜகவில் சேருவாங்கன்னு எதிர் பார்க்கிறாங்க

அனைத்து வார்டுகளிலும் தாமரை சின்னத்தை கொண்டு சேர்க்க முடியும். தேர்தல் முடிந்ததும், அவர்களை வைத்து கட்சி பணியாற்றுவதன் வாயிலாக, அடிமட்ட அளவில் கட்சி வளர்ச்சி பெறும். பாஜக தனித்து போட்டியிட்டால், திமுக – அதிமுகவுக்கு அடுத்து, பாஜக தான் பேசும் பொருளாக மாறும். தமிழக அரசியலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும்’ என்ற கணக்கில் இருக்கிறார்கள் தமிழக பாஜகவினர்.

 இப்போ ADMK வெறும் கொங்கு வேளாளர் கட்சிதான். இனி சாதி கட்சிகள் பாஜக பின்னால் அணி திரளும்.?
ஆனால் நாடாருக்கு வாக்கு வங்கி இருக்குது, தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஓட்டு இருக்குது, முத்தரையர்களுக்கு ஓட்டு இருக்குது. பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் தான் அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு கிடைத்திருக்கும். இப்போது நினைத்தால் பாஜகவால் சாதிய சமூகங்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை, தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

கூட்டணியில் இருந்து பாஜகவை அதிமுக கழட்டிவிட்டுள்ள நிலையில் இப்போது அக்கட்சி வெறும் கொங்கு வேளாளர் கட்சியாகவே பார்க்கப்படும்ன்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க. பாஜக இல்லாமல் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவுச்சு. அதே பாஜக கூட்டணியில் இருந்ததால் தான் விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற முடிஞ்சதுன்னு சொல்றாங்க.

ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் திமுகவுக்கு எதிராக அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக இருந்து வந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்கள் ஆண்மை இல்லாதவர்கள் என பேசிய பேச்சுதான் முதன்மையான காரணம்னு சொல்லப்படுது. இந்நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இரு கட்சிக்கும் இடையே இழுபறி ஏற்பட்டது. கூட்டணியில் இருந்து கொண்டே தொடர்ந்து பாஜக தலைவர்கள் அதிமுகவினரை சீண்டும் வகையில் பேசி வருவதால் நீண்டகாலமாகவே அதிமுக தலைவர்கள் மத்தியில் பாஜக மீது மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில் நயினாரின் பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் ஆகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

இதனால்தான் இனி என்ன நடந்தாலும் சரி கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டிவிடுவதுன்னு அதிமுக முடிவு செய்து விட்டதாக கடந்த வாரமே செய்திகள் உலா வந்தன. இந்நிலையில்தான் இடப் பங்கீடு பேச்சு வார்த்தையில் இரு கட்சிகளும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறி கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக அறிவிச்சது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வந்தாங்க. நீண்டகாலமாகவே பாஜக கூட்டணி என்பது அதிமுகவுக்கு பெரும் சுமையாகவே இருந்துவந்தது என்றும், அதனால் அதிமுக இஸ்லாமிய- கிறிஸ்துவ வாக்குகளை இழக்க வேண்டியதாயிடுச்சுன்னும், பல நேரங்களில் அதிமுகவின் மூத்த அமைச்சர்களே வெளிப்படையாக விமர்சித்து வந்தாங்க. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அதிமுகவின் தோல்விக்கு காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் என வெளிப்படையாகவே சி.வி சண்முகம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

அதிமுக பாஜக கூட்டணியில் பல சாதகங்கள் இருந்தாலும் அதே அளவிற்கு பாதகங்களும் இருந்தது என்பதே அதிமுகவினரின் கருத்தாக இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிணைந்து பயணித்த அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு இருப்பது இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கூட்டணியில் இருந்து பாஜகவை அதிமுக கழட்டிவிட்டிருப்பது அதிமுகவுக்கு நன்மையை விட தீமையே அதிகம்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க.

அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்திருக்கும் பட்சத்தில் திருப்பூர், கோவை, சேலம் ஆகிய இடங்களில் திமுகவுக்கு சவால் கொடுத்திருக்க முடியும். கூட்டணி பிரிந்து இருப்பதால் அதற்கு இப்போது சாத்தியமில்லை. பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் அதிமுக கும்மிடிப்பூண்டி காஞ்சிபுரத்தில் வெற்றி பெற முடிந்தது. பாஜக கூட்டணியில் இல்லாததால்தான் ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் அதிமுக 27 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

பாஜக கூட்டணியில் தான் விக்கிரவாண்டி நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது, அதனால்தான் அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத அளவிற்கு வாக்குகளையும் பெற்றது. இப்போது அதிமுக 75 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது என்றால் அதற்கு பாஜக ஒரு காரணம். பாஜகவின் வாக்கு சதவீதம் குறைவு என்று கூறலாமே தவிர அதற்கு பலமே இல்லை என்று எவரும் கூற முடியாது. கூட்டணி முறிவு என்ற முடிவு அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு அல்ல, இது இபிஎஸ் ஓபிஎஸ் எடுத்த முடிவு. அதிமுக தொண்டர்கள் வெறும் கொடி பிடிக்கவும், அடிபட்டு சாகுவும்தான். இனி எல்லா முடிவுகளும் ஓபிஎஸ்- இபிஎஸ் மட்டும் தான் எடுப்பார்கள். இபிஎஸ் ஓபிஎஸ்தான் அதிமுக. அவர்கள் எடுப்பதுதான் இனி முடிவு, எடப்பாடி பழனிச்சாமி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டால் அவ்வளவு தான். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி கழட்டி விடுவதில் வல்லவர். அதைதான் இப்போதும் நிரூபித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி கழற்றிவிடுவதில் கில்லாடி என்பதை ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கிட்டு வர்றாங்க. இப்போ அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்பது திமுகவுக்கே சாதகமாக அமைந்துள்ளது. பாஜகதான் அதிமுகவுக்கு பெரும் பாதகமாக அமைந்து விட்டது என்று கூறுமளவிற்கு ஒன்றும் இல்லை அதேபோல அதிமுக நினைப்பதுபோல கிறிஸ்துவ- இஸ்லாமியர்கள் ஓட்டு அதிமுகவுக்கு இனி கிடைக்காது. பாஜக கூட்டணி இல்லாமல் போனால் அதிமுக வேளாள கவுண்டர் கட்சி மற்றும் மறவர் கட்சி என்ற நிலையிலேயே பார்க்கப்படும். அதனால் அந்தக் கட்சியில் நாடார்கள், முத்தரையர்கள், தேவேந்திரகுல வேளாளர்களுக்கு இடமில்லை என்ற வகையில் சாதி ரீதியான முரண்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத முரண்பாடு மட்டும்தான் அதிமுகவுக்கு பாதிப்பு என எடப்பாடி பழனிச்சாமி நினைத்துக் கொண்டிருக்கிறார். கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் வாக்கு மட்டும்தான் வாக்கு என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நாடாருக்கு வாக்கு வங்கி இருக்கிறது, தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஓட்டு இருக்கிறது, முத்தரையர்களுக்கு ஓட்டு இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் தான் அந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவிற்கு கிடைத்திருக்கும். இப்போது நினைத்தால் பாஜகவால் சாதிய சமூகங்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை, தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் அண்ணாமலை அது போன்ற ஒரு வழி தேவையில்லை, மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டுமென இதை அணுகி வருகிறார். இவை விரைவில் இபிஎஸ் ஓபிஎஸ் புரிந்துகொள்வார்கள். அப்படி இல்லை என்றால் சாதிய சமூக மக்களின் வாக்குகளை தங்கள் பின்னால் அணிதிரட்ட அண்ணாமலை களமிறங்குவார்.தமிழக அரசியலில் பாஜகவின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.