மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே தனது வாரிசாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அடையாளம் காட்டி விட்டுத்தான் மறைந்தார்.ஆனால் மறைந்த ஜெயலலிதா அம்மையார் எனக்கு பிறகும் அதிமுக இருக்கும் என்று சொன்னாரே தவிர யாரையும் வாரிசாக அறிவிக்கலை. ஓபிஎஸ்ஸை தற்காலிக முதலமைச்சராகத்தான் தேர்ந்தெடுத்தார். அவரை அரசியல் வாரிசாக அறிவிப்பதற்கு தகுதியானவரும் இல்லை.அதே சமயம் திருநாவுக்கரசு இன்றைக்கும் அதிமுகவில் இருந்திருந்தால் அவர் அதிமுகவை வழி நடத்தியிருப்பார்.ஆனால் சசிகலாவால் விரட்டப்பார்.
அப்படியானால் அதிமுகவை யார் வழிநடத்துவது ? இபிஎஸ்ஸுக்கு அடிச்சது யோகம் ! சந்தையில் மாட்டை ஏலத்தில் பிடிப்பதைப் போல் கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஏலத்தில் எடுத்து முதலமைச்சராக இபிஎஸ் பதவியேற்றார் எடப்பாடி சிறந்த நிர்வாகியும் கிடையாது, சிறந்த தலைவரும் கிடையாது ? அனைத்து தரப்புக்குமான தலைவரும் கிடையாது ! ஆனால், கடும் உழைப்பாளி என்பதை நிருபித்துவிட்டார் இந்த சட்டமன்ற தேர்தலில்ல. கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு கடுமையான போட்டியை தந்திருக்கிறார் ! இன்றைக்கு 65 இடங்களை அதிமுக கைப்பற்றி ஒரு கவுரவமான எதிர்கட்சி என்ற நிலைமையை தக்க வைக்க மிக முக்கிய காரணகர்த்தா இபிஎஸ் தான் ! பாஜகவுக்கு 20 இடங்களை மட்டுமே கொடுத்து சமாளிச்சதும், எந்தப் பயனுமில்லாத தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சிகளைக் கழட்டிவிட்டதும் புத்திசாலித்தனமான அணுகுமுறையாக பார்க்கப்படுது!
உண்மைய சொல்லணும்னா அதிமுகவிற்கு ஓபிஎஸ் இபிஎஸ் இரண்டு பேருமே நல்ல தலைவர்கள் இல்லை. கிட்டதட்ட ஒரு குறிப்பிட்ட சாதி செல்வாக்கு அப்புறம் ஏரியா செல்வாக்கு பெற்றவர்கள் தான் இருவரும்! இதை சரியாக புரிஞ்சிக்கணும்னா புதுச்சேரியில் 16% வாக்குவங்கியை வச்சிருந்த அதிமுக இப்போ நாலு சதவிகிதமா கொறைஞ்சு போனதோடு, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் போனதே சிறந்த அத்தாட்சியாகும். அதே சமயம் ஒன்றுமில்லாதிருந்த பாஜக இப்போ ஆறு எம்.எல்.க்களைப் பெற்று புதுவையின் இரண்டாவது பெரிய கட்சியாக தன்னை உருவாக்கிக்கிட்டாங்க.. இந்த நிலை தமிழகத்தில் உள்ள அதிமுகவிற்கும் நேராது என்பதற்கு என்ன உத்திரவாதம்..?< அதிமுகவில் இப்போ நடக்கிற எல்லா குழப்பங்களுக்கு மத்தியில சசிகலா அமைதியாகவா இருப்பார்? தற்போது அதிமுகவில் கை ஓங்கி இருக்கும் இபிஎஸ் அணியை அசைத்து பார்க்கும் அண்டர் கிரவுண்ட் வேலைகளை கொங்கு பெல்ட்டில் துரிதமாக நடத்தி கொண்டிருக்கிறதாம் சசிகலா கோஷ்டிகள். அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிவித்தாலும் எந்த நிமிடத்திலும் அதிமுக தன்னுடைய வசமாகும் என்கிற ஏதோ ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறாராம் சசிகலா. சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடந்து வரும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கும் சசிகலாவுக்கு இந்த நம்பிக்கையை அதிகரித்திருக்கிறதுன்னு சொல்றாங்க.< >அதேநேரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என எந்த அணியும் வலிமையாகி விடக் கூடாது; எல்லோரும் என்னைத் தேடியே வரணும்ங்கிற கணக்குகளோட சசிகலா அண்ட்கோ கவனமாக காய்நகர்த்தி வருகிறது. இதில் விழுந்த முதல் விக்கெட் ஓபிஎஸ்தான். ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரை தினகரன், சசிகலாவின் தயவு தேவை என்கிற நிலையில் இருக்கிறார். இதனை தேர்தலுக்கு முன்னர் இருந்தே பல்வேறு வகையில் பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
>தேர்தல் தோல்விக்கு பிறகு சசிகலா வந்தா மட்டும் தான் நிலைமை சரியாகும்.. இப்ப ஒவ்வொருத்தங்களும் தனித்தனியா இருக்காங்க.. இது கட்சிக்கு நல்லது இல்லை என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் பல பேரு புலம்ப தொடங்கிட்டாங்க ! அதிமுகவிற்குள்ள கடந்த சில நாட்களாக நடக்கும் சில விஷயங்கள் கட்சியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்னு சொல்றாங்க. அதிமுகவின் தற்போதைய நிலைமை ஆரோக்கியமானதா இல்லைன்னு கட்சிக்கு நெருக்கமான நிர்வாகிகள் சொல்றாங்க.. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் அதிமுக கட்சிக்குள் மூத்த தலைவர்களுக்கு இடையில் கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கு.
>அதிலும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில ஏற்பட்ட மோதல் காரணமா எடப்பாடி பழனிச்சாமி – ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பெரிய விரிசலே ஏற்பட்டது. அந்த விரிசல் இன்னும் வளர்ந்துகிட்டேதான் இருக்குது.
இந்த குழப்பமெல்லாம் பத்தாதுன்னு எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே கடுமையான அறிக்கை மோதல் நடந்து வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி அதிமுக லெட்டர் பேடில் தங்கள் பெயரை மட்டும் போட்டு, முன்னாள் முதல்வர் என்ற பெயரோடு அறிக்கை வெளியிட்டுகிட்டிருக்காங்க. வெளிப்படையாக இவர்களுக்கு இடையில் பெரிய மோதல் இருப்பது பகிரங்கமாக தெரிய தொடங்கி இருக்குது.. இரண்டு முக்கிய தலைவர்களும் கட்சிக்குள் மோதிக்கொண்டு இருக்கும் போது, இன்னொரு பக்கம் வேறு சில தலைவர்களும் கட்சிக்குள் மோதலில்தான் இருக்கிறார்கள்
கோவையில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் தவிர வேறு யாரும் பெரிய ஒற்றுமையாக இல்லை தெளிவாகத் தெரியுது. தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு கட்சிக்குள் பெரிய மதிப்பு இல்லாததால அவர்களும் அதிருப்தியில் இருக்கிறாங்களாம். ஜாதி ரீதியாகவும், ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவு ரீதியாகவும் எம்எல்ஏக்கள் பலர் அதிமுகவில் பிரிந்து கிடக்கிறார்கள். அதோடு இன்னொரு பக்கம் நிலோஃபர் கபிலை கட்சியில் இருந்து நீக்குனதுனாலும் சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்காங்களாம். நிலோஃபர் கபிலை நீக்க கே. சி வீரமணி ஒரு பக்கம் அழுத்தம் கொடுத்தார் என்று பேச்சுக்கள் அடிபட்டாலும், நிலோஃபர் கபில் மீது அவரது உதவியாளரே பணமோசடி புகார்கள் கொடுத்ததுதான் காரணம்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. இந்த பணமோசடி வழக்கில் நிலோஃபர் கபில் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்பதால் அவரைக் கட்சியை விட்டு நீக்கிக்கிட்டாங்க ! இதுதான் பல எம்எல்ஏக்கள் மத்தியில பயத்தையும் , அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்து. ஒருவேளை நமக்கு எதிராகவும் இப்படி புதிய அரசு நடவடிக்கை எடுத்தால், அதிமுக கட்சி நம் பக்கம் நிற்காமல், நம்மை நீக்கிவிடுமோ என்று சில மூத்த தலைவர்கள் கூட அச்சத்தில் இருக்காங்களாம். ஏன்னா சரியான வலுவான தலைமை இல்லை, எம்எல்ஏக்களை ஒன்றாக இணைக்கும் ஒருவர் கட்சியில் இல்லை, பிரச்சனை என்றால் கழட்டிவிடுகிறார்கள் என்று இப்போதே ஆங்காங்கே நிர்வாகிகள் எல்லாம் ஒருத்தருக்குள்ள ஒருத்தர் பேச ஆரம்பிச்சிட்டாங்க ?
இப்படி எம்எல்ஏக்கள் சிதறி தனி தனியாக வேலைகளை பார்த்தால் அது பாஜகவிற்குத்தான் சாதகமாக முடியும். இப்படியே போனால் பாஜக பக்கம் பல அதிமுகவினர் தாவ நேரிடும்.. இதே நிலமையில அதிமுக இருந்தா பிஜேபி நம்ம கட்சிக்கு உள்ள வருவதை தடுக்க முடியாதுன்னு அதிமுகாரங்க புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திதான் சசிகலா காய் நகர்த்தி கிட்டு வர்றார்ங்கிறாங்க.. கட்சியில் எம்எல்ஏக்கள் இடையே ஒற்றுமை இல்லை, தலைமையில் மோதல், முன்னாள் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல காரணங்கள் இருக்கிறதால, அதை பயன்படுத்தி, கட்சிக்குள் மீண்டும் அடியெடுத்து வைக்கும் வேலைகளை சசி தரப்பு செய்து வருதுன்னு அடிச்சி சொல்றாங்க. இன்னும் 2 மாசம் கழிச்சு பாருங்க.. ரொம்ப பெரிய மாற்றம் வரும். லாக்டவுன், கொரோனா காரணமாக சசிகலா வெளியே போகலை.. ஆனால் அவர் போனில் நகர்த்த வேண்டிய காய்களை எல்லாம் நகர்த்திக்கிட்டுதான் இருக்காராம். நான்தான் கட்சியை காப்பாற்ற முடியும், நான்தான் மோதலை சரி செய்ய முடியும் என்று சசிகலா இப்போதே தூது அனுப்ப தொடங்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.>
ஓபிஎஸ் தரப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்ததைப் போல ஈபிஎஸ் அணிக்கும் குறிவைத்திருக்கிறது சசிகலா தரப்பு, இபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரையில் தினகரனை விட்டு விட்டு சசிகலா, கட்சிக்கு திரும்பலாம்; அவரது வழிகாட்டுதல்களை ஏற்று செயல்பட தயார் என்கிற மனநிலையில் இருக்கின்றனர். சசிகலா சிறையில் இருந்த போதே இதை தெரியப்படுத்தியும் இருக்கின்றனர். தினகரனின் நடவடிக்கைகளை சசிகலா ஏற்காத போதும் அவரை விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறார். இதன்பின்னணியில் தொழில், குடும்ப உறவுகள் என பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுது. இன்னொரு பக்கம் இபிஎஸ் அணி என்பதையே கலகலக்க வைப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை அந்த முக்கியமான நபர் மூலம் செய்து கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு. அதிமுகவில் இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை தான் அதிகம். இதில் இபிஎஸ் அணியின் சில மூத்த தலைவர்களை வளைத்தாலே போதும்.. அவர்களை நம்பி இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஓடிவந்துவிடுவார்கள் என கணக்குப் போட்டு அந்த சீனியர்களுக்கு வலை விரிக்கிறார்களாம்.< அதிமுகவின் உயர் பொறுப்புகள் மீது நீண்ட நாட்களாக கண் வைத்திருக்கும் சில சீனியர்கள் மெல்ல மெல்ல சசிகலா தரப்புக்கு இணக்கமான சூழ்நிலையை காட்டி வருகிறார்களாம். இப்போதைக்கு இபிஎஸ் அணியில் 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருக்கிறாங்க. இவர்கள்ல சரிபாதியை கரைப்பது தான் சசிகலா தரப்பின் முக்கியமான பிளானாம். ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் சசிகலா பெரிய செக் வைப்பார் என்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ் இதற்கு அனுமதித்தாலும் சசிகலாவின் வருகையை இபிஎஸ் விரும்புவாரா என்பது சந்தேகம்தான். எப்படியாவது கட்சியை மொத்தமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் இபிஎஸ் இருக்கிறார். அதில் இதுவரை ஓரளவிற்கு வெற்றியும் கண்டுவிட்டார்... இதனால் சசிகலாவின் வருகை அவ்வளவு எளிதாக இருந்துவிடாது.. ஆனால் சசிகலாவும் அவ்வளவு எளிதாக இந்த வாய்ப்பை விட்டு விடமாட்டார்!