நாம் என்ன வணிகர் சங்கபேரமைப்பா ? இல்லை திமுகவின் வியாபாரிகள் அணியா ?

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஒரு சில விஷயங்களில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இதற்கு காரணம் அவரது மகன் பிரபாகர் ராஜா திமுகவில் இளைஞர் அணி பொறுப்பிற்கு வந்தது தான் . இப்போ விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் ஆயிட்டாரு. வெள்ளையனின் வணிகர் சங்கங்களின் பேரவை அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுதுன்னு புகார் வந்ததால சென்னை மாவட்டத்தில தலைவரா இருந்த விக்கிரமராஜா வெள்ளையனோட தொடர்ந்து ஏற்பட்ட மோதல்ல உருவானது தான் அவர் தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பு.

தமிழகத்தில் ஒரே ஒரு வணிகர் சங்கமாக வெள்ளையனின் வணிகர் சங்க பேரவை இருந்தது ஆனால் அதனை உடைத்து விக்ரமராஜா வணிகர் சங்க பேரமைப்பை உருவாக்கினார் வெள்ளையன் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்கிற புகார் அப்போது இருந்தது . திமுக ஆட்சியில் அதிமுக விற்கு அனுசரனையாக வெள்ளையன் செயல்பட்டதால் பல்வேறு இடங்களில் வணிகர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டது . இதனை பயன்படுத்திக் கொண்டு பேரவையை உடைத்து பேரமைப்பை உருவாக்கினார் விக்கிரமராஜா. வணிகர் சங்க பேரமைப்பு உருவான பிறகு வணிகர் சங்க பேரவை பழைய செல்வாக்கை இழந்ததுனால வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மத்தியில் செல்வாக்குள்ள நபராக மாறினார் . இதுக்கு என்ன காரணம்னா.. தலைவர் வெள்ளையன் யதார்த்தமாகப் பேசக்கூடியவர்.அவருக்கு வார்த்தை ஜாலங்கள் தெரியாது.அது இன்றைய சூழ்நிலையில் எடுபடலை.அவருடைய பலவீனத்தை விக்கிரமராஜா சரியா பயன்படுத்திக்கிட்டாரு. பக்கா அரசியல்வாதி மாதிரி பேசுறதுனால வியாபாரிகள் அவர் மேல் நம்பிக்கை வச்சாங்க.வணிகர்கள் சஙகபேரமைப்பை இந்திய அளவுல பிரபலப்படுத்தியதோட அகில இந்திய வணிகர்கள் சங்கத்தில முக்கிய பொறுப்பையும் வாங்கிகிட்டு தன்னோட இடத்தைத் தக்க வைச்சிகிட்டாரு.

இதற்கிடையே வணிகர் சங்க பேரவையை உடைத்ததில் திமுகவிற்கு பெரும் பங்கு இருந்ததாக அப்போது வெள்ளையன் குற்றஞ்சாட்டினார் . ஆனால் 2011 ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விக்கிரமராஜா பெரிய அளவில் திமுக ஆதரவை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார் ஆனால் ஒரு சில விஷயங்களில் விக்கிரமராஜா திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது . இதற்கு காரணம் அவரது மகன் பிரபாகர் ராஜா திமுகவில் இளைஞர் அணி பொறுப்பிற்கு வந்தது தான்.
இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜாவிற்கு திமுக தலைமை சீட் கொடுத்தது வணிகர் சங்க பேரமைப்புத் தலைவரான விக்கிரமராஜாவின் மகன் என்பதால் அந்த தொகுதி முழுவதும் வியாபாரிகள் அவருக்காக பிரச்சாரத்தை முன்னெடுத்தாங்க. பிரபாகர் ராஜாவும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் தமிழகத்தில் தற்போதுள்ள எம்எல்ஏக்களில் மிகவும் இளம் வயது எம்எல்ஏ பிரபாகர் ராஜாதான் . இவ்வளவு சிறிய வயதில் அவர் எம்எல்ஏ ஆனதற்கு காரணமாக அவரது தந்தை விக்கிரமராஜாவிற்கு திமுகவுடன் இருக்கும் நெருங்கிய தொடர்பு தான் காரணங்கிறது எல்லாருக்கும் தெரியும்.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது . அதற்கு வணிகர் சங்க பேரமைப்பு முழு ஆதரவு தெரிவித்தது இது வியாபாரிகளை மிகவும் டென்சன் ஆக்கியது . ஏன்னா எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடைசியாக ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்த போது அதற்கு வணிகர் சங்க பேரமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது . மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலான பிறகு கடைகளை திறந்திருந்த வணிகர்களுக்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி அதிகாரிகள் அபராதம் விதிச்சாங்க. . ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூ .50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது . சில கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது . ஆனா இதுக்கெல்லாம் வணிகர் சங்க பேரமைப்பு குரல் கொடுக்கலை.
ஆனா சமீபத்தில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா கடைகளை அடைத்து வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்றார். சரி ,கடந்த ஊரடங்கில பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வாங்கிக் கொடுத்தாரான்னா இல்லவே இல்லை ? கடந்த அதிமுக ஆட்சியின் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வணிகர்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வேண்டும் , மின் கட்டணத்தை ரத்து செய்யணும்னு வணிகர் சங்கம் குரல் கொடுத்தது .
ஆனால் இப்போ அதே வணிகர் சங்க பேரமைப்பு அமைதியா இருக்குது . மின் கட்டணத்தை ரத்து செய்யணும்னு எதிர்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலினும் வலியுறுத்தினார். அதனை எல்லாம் சுட்டிக்காட்டி வணிகர்களுக்கு உதவ வணிகர் சங்க பேரமைப்பு எந்த நடவடிக்கையும் எடுக்கலை.ஆனா விக்கிரமராஜா மகன் பிரபாகர் ராஜா எம்எல்ஏ ஆனதுக்கு பிறகு கோயம்பேடு சந்தையில் ஆய்வு செய்து அங்கு விதிகளை மீறியதாக சில கடைகளுக்கு சீல் வச்சதுதான் மிச்சம்னு சொல்லி வியாபாரிகள் கொதிக்கிறாங்க . நாம் என்ன வணிகர் சங்கபேரமைப்பா ? இல்லை திமுகவின் வியாபாரிகள் அணியா ? ன்னு பல நிர்வாகிகள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க ! எந்த நோக்கத்திற்காக சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அது விட்டு விலகி வேற ரூட்ல போய்கிட்டு இருக்கு . வியாபாரிகள் பொறுமையாக இருக்கிறாங்க.எப்போ பொங்கி எழப் போறாங்களோ..