வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையில் மூன்றாவது அணி ?

பாஜக தலைமையில் மூன்றாவது அணி ?  அதிர்ச்சியில் கழகங்கள்? நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமையும்ங்கிற கேள்வி எழுந்திருக்குது. பாஜக அண்மைக்காலமாக பெரும்பாலான மாநிலங்களில் அந்த மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒரு சில இடங்களை வென்று மற்ற கட்சி எம்எல்ஏக்களை நல்ல விலைக்கு வாங்கி ஆட்சியமைத்து வர்றதா எதிர்க்கட்சிகள் விமர்சனம் பண்ணிக்கிட்டு தான் வர்றாங்க.ஆனா பாஜக கவலைப்படுற மாதிரியே தெரியலை..தமிழகத்தில் ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே பாஜக வரவில்லை (வாஜ்பாய் அரசு கவிழ்ப்புக்கு பிறகு). மோடி ஒருமுறை மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதாவை போயஸ் கார்டன்ல சந்திச்சு கூட்டணி பத்தி பேசுனாரு.ஆனா அம்மையார் ஒத்துக்கலை.ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதும், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரானதும் நிலைமையே தலைகீழாக மாறிடுச்சி.. ஓபிஎஸ், இபிஎஸ் இணைஞ்சு பாஜகவுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைச்சாங்க.இந்த கூட்டணி 2021 சட்டசபை தேர்தல் வரை தொடர்ந்துச்சு. இந்த தேர்தலில் பாஜக சார்பில் 4 எம்எல்ஏக்கள் ஜெயிச்சாங்க.. அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கிற இடங்களை கேட்டு பெற்ற பாஜக அந்த இடங்களில் 4-இல் ஜெயிச்சதாகவும் விமர்சனங்கள் வந்தது.  பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால அதிமுக கூட்டணியில் இல்லாமல் பாஜக தனித்து போட்டியிட்டுச்சு. இருந்தாலும் கணிசமான இடங்கள்ல ஜெயிச்சதால் பாஜகவுக்கு தமிழகத்தின் ஒரு நம்பிக்கை பிறந்தது. இந்த நிலையில் அதிமுகவில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிரச்சினையை வைச்சு தமிழகத்தில் திமுக வெர்சஸ் பாஜகங்கிற நிலையை உருவாக்கணும்ங்கிறதுதான் பாஜகவின் திட்டமாக இருப்பதாக சொல்லப்படுது.ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி என, இரண்டு பிரிவுகளாக பிளவுப்பட்டிருக்கும் அதிமுகவை, பாஜக மேலிடத் தலைவர்கள் யாருமே ஏற்கலையாம். இப்படி இரண்டு அணிகளாக பிரிந்திருந்தால் அது, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுகவுக்கே சாதகமாக அமையும்ன்னு, அவர்கள் கணக்கு போடுறாங்களாம். அதனால ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இரண்டு பேரும் ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக மேலிடம் லைக் பண்றதாகவும் சொல்லப்படுது.  கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தலையிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைச்சு பன்னீருக்கு துணை முதல்வர் பதவியை பெற்று தந்தது. அது போல் இந்த முறையும் அதிமுகவின் இரு தலைவர்களும் பிரதமரையும் மத்திய உள்துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்கப்படவில்லை. செஸ் ஒலிம்பியாட்டுக்கு சென்னை வந்தப்போ கூட அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களே நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் தனியாக பேச நேரம் ஒதுக்கப்படலை.  அதிமுக பிரச்சினையில் இந்த முறை பாஜக தலையிடாததற்கு நிறைய காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுது.

எடப்பாடி மீது டெல்லி அப்செட்டில் இருக்க அப்படி என்னதான் காரணம்? ஏன் இப்படி டெல்லி பாஜக தலைகள் எடப்பாடியுடன் நெருக்கம் காட்ட மறுக்கிறார்கள்?.. இது தொடர்பாக அதிமுக – பாஜக வட்டாரத்தில் அவர்கள் பல விஷயங்களைச் சொல்றாங்க.. அதில் முதல் விஷயமே ஒரு பழைய கருத்து வேறுபாடுன்னு சொல்றாங்க.. கடந்த சட்டசபை தேர்தலில் எடப்பாடிக்கும் பாஜகவிற்கும் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடுதான் இந்த மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டதுங்கிறாங்க. அந்த சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டதாகவும்.. டிடிவி தினகரன், சசிகலாவுடன் சேர்ந்து செயல்பட எடப்பாடியை பாஜக அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி ஏத்துக்கலையாம்

அடுத்த விஷயம் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டாம்ன்னு பாஜக தரப்புல சொல்லியிருக்காங்க. ஆனா அதையும் மீறி எடப்பாடி செயல்பட்டதாக சொல்லப்படுது. பாஜகவை முதலில் அப்செட் ஆக்கிய விஷயம் இதுதாங்கிறாங்க. அதோடு இல்லாமல் தேர்தலுக்கு பின்னாடி வரிசையா கூட்டணி கட்சிகள் வெளியேறும் வகையில் எடப்பாடி செயல்பட்டார். பாமக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. பாஜகவையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கழட்டிவிட்டுடுச்சி. இதனால் எடப்பாடி மீது பாஜக கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுது. எடப்பாடியின் கட்டுப்பாட்டுக்கு கீழ அதிமுக இருந்தால் கூட்டணிகளை அரவணைத்து செல்ல மாட்டார். கேட்கிற இடங்களை கொடுக்க மாட்டாருன்னு பாஜக தரப்பு கடுப்பாகிறாங்களாம்.. அதிமுகவில் இரட்டை தலைமை அல்லது “சசி – ஓபிஎஸ் – இபிஎஸ்”ங்கிற மூணு பேரின் கீழ் பதவிகள் பிரிந்து இருந்தால் தான் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைச்சிருக்க முடியும்ன்னு பாஜக நினைக்குதாம். எடப்பாடியை டெல்லி நேரடியாக ஆதரிக்காமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணம்ங்கிறாங்க. பாஜகவிற்கு என்ன பயன்? அதோடு எடப்பாடி ஒற்றை தலைமையில் இருப்பதால் பாஜக தங்களுக்கு என்ன லாபம் என்றும் பார்த்து வருகிறதாம். எடப்பாடி ஒற்றை தலைமையில் இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் முக்குலத்தோர் வாக்குகளை நாமும் சேர்ந்து இழந்திருவோம்னு பாஜக தலைவர்கள் கணக்கு போடுறாங்களாம். அதோட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, பாமக இல்லாமல் எடப்பாடி மட்டும் தனியாக எவ்வளவு இடங்களை பாஜக கூட்டணிக்கு ஜெயிச்சுக் கொடுக்க போறாருங்கிற சந்தேகமும் பாஜக தரப்புக்கு வந்திருக்குதாம் . எடப்பாடி பெரிய தலைவர் தான்னாலும்.. அவர் தனியா அதிமுகவை வழிநடத்தும் அளவிற்கு வலுவானவர் இல்லைன்னு பாஜக நினைக்குதாம். எடப்பாடியின் “சீட் வின்னிங்” பலம் குறைவாக இருப்பதாக பாஜக கணக்கு போடுவதும் இதற்கு காரணம்ங்கிறாங்க. இப்படி பல விஷயங்களை பல்ஸ் பார்த்த பின்புதான் எடப்பாடியை இதுவரை டெல்லி பாஜக ஆதரிக்கலைன்னு டெல்லி சங்கிகள் சொல்றாங்களாம். தமிழ்நாடு பாஜக தலைவர்களும் எடப்பாடியை பெரிசா வாழ்த்தலை. முக்கியமான விஷயம் என்னன்னா ஸ்டாலின் பெரிய தலைவராக இருக்கிறார். அப்படி இருந்தாலும் கூட அவர் கூட்டணி கட்சிகளை அரவணைச்சுகிட்டு ஆட்சியை நடத்தறார். ஸ்டாலினை எதிர்க்கணும்னா எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா எல்லோரும் ஒண்ணா இருக்கணும்.அதாவது வலுவான கூட்டணி வேணும் அப்பதான் ஜெயிக்க முடியும்.. ஆனால் இதை எடப்பாடி ஏத்துக்க மறுக்கிறாருங்கிற அப்செட்டும் பாஜக தரப்பிற்கு இருக்கிறதா கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்குது. இதை எல்லாம் சரி கட்ட வரும் நாட்களில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. வெயிட் அண்ட் சீ ன்னு சொல்றாங்க கமலாலய சங்கிகள்.

. தமிழகத்தில் 2024 இல்தான் தேர்தல் வருது. ஆனால் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் தேர்தல் வருது. இதனால் அதிமுகவுக்கு பஞ்சாயத்து செஞ்சா தேர்தல் பிரச்சாரங்களில் கவனம் செலுத்த முடியாமப் போய்டும்ங்கிறதால அதிமுக விவகாரங்களில் பாஜக தலையிடாமல் இருக்காங்க..  மேலும் பன்னீரையும் எடப்பாடியையும் இப்போ இல்லன்னாலும் எப்போ வேணும்னாலும் ஒன்று சேர்த்துடலாம். தேர்தல் நேரத்தில் இவர்களை ஒன்று சேர்ப்பதற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறணும்னு திட்டம் போட்டிருப்பது தான் காரணம்.. இதை ஏற்கெனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேடை தோறும் முழங்கிகிட்டே வர்றாங்க. அதனால 2024 ஆம் ஆண்டு ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் சேர்த்து ஒன்றுபட்ட அதிமுகவை செயல்பட வைத்து இரட்டை இலைக்கான வாக்குகளை தங்கள் பக்கம் அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டிருக்குது. தமிழக பாஜக தலைமையில் மூன்றாவது அணி அதிமுகவில் இரட்டை தலைமையையே பாஜக விரும்புகிறது. ஒருவர் தலைமையில் அதிமுக சென்றால் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்க முடியாதுன்னு பாஜக கணக்கு போடுது. இதனால் ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் கடந்த 2017 போல் இணைத்து வைக்கவே பாஜக முயற்சிக்கும் ஒரு வேளை பன்னீரும் எடப்பாடியும் ஒன்று சேர மறுத்தால், தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி ஏற்பட வாய்ப்பிருக்கிறதா என அரசியல் நோக்காளர்களிடம் நாம் கேட்டோம். அதற்கு அவர்கள், அதிமுகவை ஒன்றிணைக்க தற்போது பாஜக ஆர்வம் காட்டாததற்கு காரணமே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவுக்கு அடுத்த கட்சியாக வளரணும்னு பாஜக முடிவு செய்துள்ளது.  எனவே இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறதால இப்போவே தமிழகத்தில் ஸ்டிராங்கா அதாவது திராவிடக் கட்சிகள் போல காலூன்ற பாஜக திட்டமிட்டுள்ளது. சென்னை வந்த பிரதமர் மோடியும் பாஜக நிர்வாகிகள் சந்திப்பில் இப்போதே களப்பணியாற்றுங்கள், எப்படியாவது தமிழகத்தில் பெரிய அளவில் உருவெடுக்கணும்னு அறிவுறுத்திட்டு போனாராம். அதனால 2024 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் பாஜக தங்களை வலுமையான கட்சியாக மாற்ற போராடும். ஒரு வேளை தோற்றால் அதிமுகவுடன் இணைந்து தேர்தல் சந்திப்பாங்க. இல்லாவிட்டால் அதிமுகவை கண்டும் காணாமல் விட்டுவிட்டு தங்கள் தலைமையில் ஒரு அணியை உருவாக்குவாங்க. அதாவது திமுக கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, பாஜக தலைமையில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது. தேமுதிக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை இணைத்து பாஜக தலைமையில் ஒரு அணி உருவாக வாய்ப்பிருப்பதாக தெரியுது.இந்நிலையில், அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், பாஜகவை, அதிமுக கூட்டணியில் இருந்து முன்கூட்டியே கழற்றி விட்டு விட்றலாம்னு, எடப்பாடி பழனிசாமிக்கு, அவரது ஆதரவாளர்கள் சிலர் யோசனை தெரிவிச்சு கிட்டு வர்றாங்களாம்.

கட்சி, அலுவலகம்,. மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என, எல்லா தரப்பினரும் நம்ம பக்கம் இருக்கும் போது நாம் ஏன் பாஜகவிடம் வலுக்கட்டாயமாக கூட்டணிக்கு போகணும்; பாஜகவுக்கு வேணும்னா நம்ம தலைமையிலான கூட்டணிக்கு வரட்டும்ன்னு சில முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் அழுத்தம் திருத்தமாக தெரிவிச்சதாகவும் சொல்லப்படுது. வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக மூன்றாவது அணியை உருவாக்கும் பட்சத்தில், அதை கழற்றி விட, எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இருந்தாலும் கடைசி நேரத்தில என்ன நடக்கப் போகுதுன்னு சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம்.