கனிமொழிக்கு தரப்படும் முக்கியமான டாஸ்க்.. திமுக பிளான்?

திமுக எம்பி கனிமொழிக்கு கட்சியில் விரைவில் முக்கிய பொறுப்பு ஒன்று வரப்போகிறது ஏற்கனவே பல தகவல்கள் வெளியான நிலையில்.. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் கசிந்து இருக்கின்றன. அதிமுகவில் நடக்கும் கோஷ்டி மோதலை வைத்து திமுக முக்கியமான சில திட்டங்களை போட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில்தான் கனிமொழிக்கு முக்கிய டாஸ்க் கொடுக்கப்பட உள்ளதாம்! முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தற்போது கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பு பணிகள் முடிந்த பின் திமுக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்கும் என்கிறார்கள்.

முக்கியமாக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்த சில தொகுதிகளில் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்த உள்ளனர். கட்சியில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டங்களும் உள்ளன. அதிலும் ஊராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து அதற்கு ஏற்றபடி சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் திட்டத்தில் திமுக இருக்கிறதாம். கனிமொழி இந்த நிலையில்தான் எம்பி கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது கொங்கு மண்டல பொறுப்பு கனிமொழிக்கு கொடுக்கப்படும், அங்கு திமுகவின் சரிவை கண்டறிந்து, ஏன் அங்கு திமுக சொதப்பியது என்பதை கண்டறிந்து அதை மீட்டு எடுக்கும், சரி செய்யும் பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் என்ன ஆனால் உண்மையில் கட்சியின் தோல்வியை ஆராய்வது மட்டுமில்லை, கனிமொழிக்கு வேறு ஒரு முக்கியமான பொறுப்பும் கொடுக்கப்பட உள்ளது என்கிறார்கள். அதிமுகவில் தற்போது மிகப்பெரிய அளவில் கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. சசிகலா – இபிஎஸ் – ஓபிஎஸ் என்று குழு குழுவாக பிரிந்து காய் நகர்ந்தி வருகிறார்கள். மறைமுகமாக நடந்து வந்த கோஷ்டி மோதல் தற்போது வெளிப்படையாக வெடித்துள்ளது. வெளிப்படையான மோதல் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் இபிஎஸ்ஸுக்கு எதிரான மனநிலையிலும், கொங்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் சசி, ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிரான மனநிலையிலும் உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதில் யார் கட்சியை மொத்தமாக கைப்பற்றினால் இன்னொரு குழு மொத்தமாக வெளியேறும் வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள். அதாவது ஒருவேளை சசிகலா கட்சிக்குள் வந்தால் கொங்கு மாவட்டங்களில் ஒரு சில அதிமுக தலைகள் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளன. சசி வரவில்லை, ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றால் டெல்டாவிலும், தென் மாவட்டங்களில் ஒரு சிலர் அதிமுக கட்சியில் இருந்து கழன்று கொள்வார்கள் என்று பேசிக்கொள்ளப்படுகிறது.  இங்குதான் கனிமொழி முக்கியத்துவம் பெறப்போகிறார் என்கிறார்கள்.

திமுகவில் கனிமொழி கட்சி கடந்த பல கட்சி நிர்வாகிகளிடம் அரசியல் ரீதியாக நல்ல தோழமை கொண்டவர். அதேபோல் அதிமுகவில் இருக்கும் சில பெண் தலைவர்கள், தென் மாவட்ட தலைவர்கள், ஒரு சில கொங்கு மண்டல தலைவர்களிடம் தோழமையுடன் இருக்க கூடியவர். ஒருவேளை அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, முக்கிய அதிகாரிகள் அதிருப்தியில் இருந்தால் அவர்கள் கட்சிக்குள் இழுக்கும் டாஸ்க்தான் கனிமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். திட்டமா? அதிருப்தியில் இருக்கும் முக்கிய அதிமுக புள்ளிகளை திமுகவிற்கு மடைமாற்றுவதுதான் திட்டமாம். அங்கு உங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கூறி.. “சிலரை” திமுக பக்கம் கொண்டு வரும் யோசனைகள் உள்ளதாம். தென்மாவட்டங்களில் திமுக இந்த தேர்தலில் வெல்ல கனிமொழியின் பங்கு மிக முக்கியம். அதேபோல் கரூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் செந்தில்பாலாஜி மூலம் திமுக எளிதாக வெல்ல முடிந்தது. நல்ல நிர்வாகி இருந்தால் எந்த மண்டலத்திலும் வெல்ல முடியும் என்பதை செந்தில்பாலாஜி, கனிமொழி நிரூபித்தனர்.. இதைத்தான் திமுக இந்த தேர்தல் மூலம் உணர்ந்து கொண்டு விட்டது.

இதனால் அதிமுகவில் இருக்கும் சில வலுவான நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் அக்கட்சி இருப்பதாகவும், இவர்களை உள்ளே கொண்டு வரும் டாஸ்க்தான் கனிமொழிக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். அதிமுகவிலேயே சிலர் திமுக பக்கம் போக ஆர்வமாகத்தான் இருக்கிறார்களாம். நம் மீது ஏற்கனவே சில புகார்கள் உள்ளது என்பதால், ஆளும் கட்சியில் சேர்ந்து தப்பித்து விடலாம் என்று.. சில அதிமுக நிர்வாகிகள் நினைக்கிறார்களாம். தொடர்ந்து மாற்றப்படும் அதிகாரிகள்.. சிலருக்கு அதிருப்தி.. சிலருக்கு ஏமாற்றம் ஆனால் கனிமொழி ஆனால் திமுகவோ எல்லோரையும் உள்ளே கொண்டு வர வேண்டாம். முக்கியமான சிலரை மட்டுமே கட்சிக்குள் இழுக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறதாம். இதில் மநீம நிர்வாகிகள் சிலரும் உள்ளனர். இதற்கான பேச்சுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்கிறார்கள்.

கனிமொழி களமிறங்குவார்? கனிமொழி இப்போதே இதற்கான திட்டங்களில் இறங்கிவிட்டார் என்கிறார்கள். சசிகலா அடுத்தடுத்து நகர்ந்தும் காய்களை பொறுத்து இந்த பக்கம் கனிமொழி முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்க போகிறார்.. கொரோனா பரவல் குறைந்ததும் தமிழ்நாடு அரசியல் கண்டிப்பாக இடி மின்னல் மழை இருக்கும் என்கிறார்கள்.