இது என்ன கட்சி அலுவலகமா.. கருணாநிதி படத்தை அகற்றுங்க.. மு.க.ஸ்டாலின் அதிரடி!

தலைமைச் செயலக வளாகத்தில் அரசு அதிகாரிகள் வைத்த மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் தனது படங்களை அகற்றுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டார்.

தமிழகத்தில் கடந்த 2011 ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடைபெற்றது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமை செயலக கட்டிடத்தின் வலது புறத்தில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் முழு உருவப்படம் வைக்கப்பட்டது. சட்டசபை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியே தொடர்ந்ததால் ஜெயலலிதாவின் படம் அப்படியே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் ஜெயலலிதாவின் படங்கள் அப்படியே வைக்கப்பட்டது. தமிழக சட்டசபை, முதல்வர் அறை உள்ளிட்ட இடங்களிலும் ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்பட்டது.

2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த போது சென்னை தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டது. அத்துடன் அதிமுக., அரசின் சாதனை விளக்க படங்களும் அகற்றப்பட்டன. தேர்தலுக்கு பிறகு அந்த படங்கள் மீண்டும் வைக்கப்பட்டன.  கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்த திமுக, சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து, சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்கு தலைமை செயலகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அறைகள் காலி செய்யப்பட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் சாமி படங்கள், அவர்களின் பொருட்களை எடுத்துச் சென்றனர். பெயர் பலகைகள் அகற்றப்பட்டு, அவற்றை அழிக்கும் பணியும் நடைபெற்றது.  ஸ்டாலின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து தலைமை செயலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் முழு உருவப்படம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப் படங்கள் வைக்கப்பட்டன. பதவியேற்ற பிறகு, தலைமை செயலகத்திற்கு ஸ்டாலின் வருவதற்கு முன் இதை செய்ய வேண்டும் என நினைத்து தலைமை செயலக அதிகாரிகளே இந்த மாற்றத்தை செய்துள்ளனர்.

ஆனால் தலைமை செயலகம் வந்த ஸ்டாலின், கட்டிடத்தின் முன்புறம் தனது ஃபோட்டோ இருப்பதை பார்த்து விட்டு அது பற்றி விசாரித்துள்ளார். பிறகு, இது தலைமை செயலகம். அரசு சார்ந்த பணிகளுக்கான இடம். கட்சி சார்ந்த இடமல்ல. அதனால் தனது படத்தையோ, கருணாநிதியின் படத்தையோ இங்கு வைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார். ஸ்டாலினே இப்படி சொல்லி விட்டதால், அதிகாரிகள் உடனடியாக அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் மற்றும் கருணாநிதி படங்களை அகற்றி விட்டனர். இதனால் அந்த இடம் தற்போது காலியாக காட்சி அளிக்கிறது.

Related posts: