அரசியலில் குதிக்கும் விஜய்! பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு? அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள் ?

தென்னிந்தியத் திரையுலகில் அதிகம் வசூலிக்கக்கூடிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் தளபதி விஜய். அவர் சிறு குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை பொறாமைப்படக்கூடிய ரசிகர்களை நீண்ட காலமாக தக்கவைத்து வருகிறார். சமீப காலங்களில் கவர்ந்திழுக்கும் நட்சத்திரம் அவரது ரசிகர்களாலும் மற்ற அரசியல் கட்சிகளாலும் ஒரு அரசியல் தலைவராக கருதப்படுறார்.

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கணிசமான வெற்றியைப் பதிவு செய்தது, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பெரும் சக்தியாக மாறக்கூடும் என்ற யூகங்கள் கிளம்பி வருது.

இதற்கிடையில், பிரபல அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரை விஜய் ரகசியமாக சந்தித்து அரசியலுக்கு வருவது குறித்து விவாதித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்குது. பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்ஆகியோருக்கு உதவிய புத்திசாலித்தனமான உத்திகளை உருவாக்கியதற்காக கிஷோரின் நிறுவனமான ஐ-பேக் நிறுவனம் புகழ் பெற்றது. ஸ்டாலின் ஆட்சியைப் பிடிக்க காரணமாக இருந்தாரு.
பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவனாகுவதை காலம்தான் முடிவு செய்யும்

நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அரசியலில் போட்டி போட்டு வெற்றிகளை குவிச்சிட்டு வர்றாங்க. ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். இந்தநிலையில் நடிகர் விஜய் அரசியல் பயணம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த போது தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக வேண்டுமா என்பதை ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என்று நடிகர் விஜய் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் நடிகர் விஜய் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சொல்லிகிட்டு வர்றாங்க
.

இந்த பரபரப்பான சூழ்நிலைல தெலுங்கானா முதல்வர்
சந்திரசேகர ராவவ நடிகர் விஜய் சந்திக்க காரணமென்ன.இதுதான் தமிழக அரசியல்ல ஹாட் டாபிக்கா ஓடிக்கிட்டிருக்குது.

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகள்ல உருவாகி வருது. வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவை நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக சமீபத்தில நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு சந்திரசேகர ராவின் மருமகன் சந்தோஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தாராம். இந்த சந்திப்பின்போது தமிழக திரைப்படங்கள் தொடர்பாகவும், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசித்தாக சொல்லப்படுது. இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் ஏற்பாட்டில் நடிகர் விஜய், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்தாக கூறப்படுது. ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் தமிழக சட்ட பேரவை தேர்தலின் போது திமுகவின் வெற்றிக்கு பணியாற்றினார். அப்போது நடைபெற்ற தேர்தல் வாக்கு பதிவின் போது நடிகர் விஜய் சைக்களில் வந்து வாக்களித்தது திமுகவிற்கு சாதகமாக அமைந்தது.

இந்தநிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசித்ததாக கூறப்படுது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருது. குறிப்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேற்று முன்தினம் சந்தித்தார்.. இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக பிரசாந்த் கிஷோரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.திராவிடக் கட்சிகளைப் பார்த்துப் பார்த்து சலிச்சுப்போன மக்களுக்கு புதிய தலைவர் ஒருவர் வரமாட்டாரான்னு தமிழக மக்கள் ஏக்கத்தோடு இருக்காங்க.நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்குனபபோ கூட இதே வரவேற்பு இருந்துச்சு.அதே மாதிரி விஜய்யு அரசியல் கட்சி துவங்குனா நிச்சயம் மாற்றம் ஏற்படும்னு சொல்றாங்க அரசியல் விமர்சகர்கள்.விஜய் அரசியல்ல குதிப்பாரா இல்ல ரஜினி மாதிரி பின்வாங்குவாராங்கதப் பொறுத்திருந்து தான் பார்க்கணும்