அன்வர் ராஜா எடுக்கும் அதிரடி முடிவு!

அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜாவை திமுகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

அதிமுவின் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி.யான இவர், தற்போது அதிமுகவில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக இருக்காரு.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய காலத்தில், சசிகலா பக்கம் இருந்தவர், பிறகு சசிகலா சிறைக்கு போன பிறகு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார். ஆனாலும், கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சிக்கவும் இவர் தயங்கியதில்லை. சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறிய மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும் கூட, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு, எம்.பி., பதவி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தற்போதைய அதிமுக இரட்டை தலைமை மீது அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுது. அதேசமயம், சசிகலா மீதான ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டவர். “தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சின்னம்மா வரணும்னு அண்மையில் இவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தற்போது கட்சித் தலைமை வலுவாக இல்லை என்றும், அதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் அன்வர் ராஜா கூறியதாகவும், அதனால் சிவி சண்முகம் அவரை தாக்க முற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இது உறுதிபடுத்தப்படாத தகவலாகவே உள்ளது. இருந்தாலும், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர், அன்வர் ராஜா குறித்த கேள்விக்கு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், கட்சிக்குள் கருத்து பரிமாற்றம் இருக்கும். அதற்கு வருத்தம் தெரிவிப்பது இயல்புதான் என்றார்.

இதனிடையே, அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜாவை திமுகவுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அசைன்மென்ட்டை கையில் எடுத்திருப்பவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் என்கிறது ராமநாதபுரத்து வட்டாரத் தகவல்கள். “கட்சியில் சீனியரான உங்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. கட்சித் தலைமையும் அத வேடிக்கை பாக்குது. பேசாம நீங்க திமுகவுக்கு வந்திருங்க; உங்களுக்கு முக்கியப் பொறுப்பு தருறோம். சிறுபான்மையினரை மதிக்குற கட்சி திமுக” என ராஜ கண்ணப்பன் தரப்பில் இருந்து தூது சென்றிருக்கிறதாம்.

இதுகுறித்து அன்வர் ராஜாவுக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்களிடம் பேசுகையில், “சி.வி.சண்முகம், அன்வர் ராஜாவை கடுமையாக பேசியது அவரின் ஆதரவாளர்களை கொதிக்க வைத்துள்ளது. இதனால், அவர்களும் பேசாமல் திமுகவுக்கே போயிறலாம்னு அவரிடம் பேசி வருகின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்” என்கிறார்கள் அவரது விசுவாசிகள். இதனிடையே, சசிகலா தரப்பும் அன்வர் ராஜாவிடம் பேசி கொஞ்சம் பொறுமையாக இருக்கச் சொல்கிறாதாம். கூடிய விரைவில் கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்ததும், உங்களுக்கான முக்கியத்துவத்தை உறுதி படுத்துகிறோம். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என அன்வரிடம் பேசி வருகிறதாம் சசிகலா தரப்பு.இந்த சூழ்நிலையில் அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கிக் டாங்க்.

ஏற்கனவே மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி மூலம் அதிமுக மூத்த தலைவர்கள் பலரையும் திமுக தட்டி தூக்கி வரும் நிலையில், அன்வர் ராஜா தொடர்பான இந்த தகவல்கள் அரசியல் அரங்கில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.