அண்ணாமலை ஆட்டம் குளோஸ் ? டெல்லி அவசர அழைப்பு ?

கே.டி.ராகவன்சம்பந்தப்பட்ட வீடியோவை காதும் காதும் வைத்தது போல் முடித்திருக்க வேண்டிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு முதல் காரணமே அண்ணாமலை தான்ங்கிற தகவல்கள் பாஜக மேலிடத்தை பயங்கரமா அதிருப்தி அடைய வைச்சிடுச்சாம்..

கே.டி.ராகவன் வீடியோ வெளியான சில நாட்கள்லேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்திருக்குது. ஆனா பல்வேறு காரணங்களைச் சொல்லி தட்டிக்கழிச்சிட்டே வந்தவரு இப்போ திடீர்னு புறப்பட்டுப் போயிருக்காரு.

காதும் காதும் வைத்தது மாதிரி முடித்திருக்க வேண்டிய கே.டி.ராகவன் வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கு முதல் காரணம் அண்ணாமலை தான்ங்கிற தகவல்கள் பாஜக மேலிடத்தை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதிலும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் தலைவர் பதவிக்கு அண்ணாமலை அன்பிட் என்கிற ரீதியில் டெல்லி பாஜக தலைமையகத்திற்கு அவசரமா கடந்த சில நாட்களுக்கு முன்னாடிகடிதம் எழுதியிருந்தார். இதே போல் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரும், கடந்த காலத்தில் செல்வாக்கில் இருந்த முன்னணியினர் சிலரும் கூட அண்ணாமலைக்கு எதிராக டெல்லி பாஜக தலைமைக்கு கடிதங்கள் எழுதியிருக்காங்க.
தலைவர் பதவிக்கான முக்கிய குணாதிசியமான பொறுமை துளியும் அண்ணாமலையிடம் இல்லை, இப்பவும் அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி போலத் தான் செயல்பட்டுக்கிட்டிருக்கிறார். அவரை தலைவர் பதவியில் வைத்திருப்பது ஆபத்துங்கிற ரீதியில் அந்த கடிதங்களில் வாசகங்கள் இடம்பெற்று இருந்ததாக சொல்கிறாங்க. இதே போல் கே.டி.ராகவன் வீடியோ வெளியான பிறகு சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு இருந்து வந்த ஆதரவு சுத்தமா கொறைஞ்சு போச்சாம். இதுக்கு காரணம் அவரது அமெச்சூர் தனமான செயல்பாடுகள்ங்கிறது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்திற்கு பிறகு கட்சி சார்பிலான நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாமல் அண்ணாமலை தவிர்த்து வர்றாரு.. கடைசியாக அவர் மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பினார். இதுக்கிடையே ராகவன் வீடியோ விவகாரம் தொடர்பான விசாரணைக்கு கடந்த சில நாட்களாகவே டெல்லி மேலிடம் அண்ணாமலையை அழைச்சும் போகலையாம். ஆனா அதற்குள்ள மதனிடம் உள்ள வேறு வீடியோக்களில் உள்ள பெண்களை தொடர்பு கொண்டு அந்த வீடியோ வெளியாகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பணியில் அண்ணாமலை தீவிரம் காட்டி வந்திருக்காரு.

அந்த வேலைகளை கிட்டத்தட்ட முடிச்சிட்டு டெல்லிக்கு புறப்பட்டுப் போயிருக்காரு. அண்ணாமலை. அதாவது ராகவன் வீடியோ விவகாரத்தை சரி செய்துவிட்டதாக ரிப்போர்ட்டுன் அவர் சென்றுள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் அண்ணாமலையின் விளக்கத்தை பாஜக மேலிடம் ஏற்பது மிக மிக கடினம்ங்கிறாங்க. அண்ணாமலைக்கு இந்த பதவி கிடைக்க முழுக்க முழுக்க அமித் ஷா மட்டுமே காரணமாம். வேறு எந்த பக்கத்தில் இருந்தும் அண்ணாமலைக்கு இப்போ ஆதரவு கிடைக்காதுன்னு பேசிக்கிறாங்க. தமிழக பாஜக நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக அண்ணாமலைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்காங்களாம்.

இந்த சூழலில் அமித் ஷா தொடர்ந்து அண்ணாமலையை ஆதரிப்பாரா? என்பது சந்தேகம் தான்ங்கிறாங்க. எனவே டெல்லியில் விசாரணை முடிந்து அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்பட 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தான் அடிக்கடி தான் பாஜகவின் கடைக்கோடி தொண்டன் என்கிற ரீதியில் ட்வீட்டுகளை அடுத்தடுத்து தட்டி விட்டுகிட்டே வந்தாராம். அதே சமயம் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மூலமாக தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அண்ணாமலை காய் நகர்த்துகிறார்னும் சொல்றாங்க.என்ன காரணம்னா அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியா பெங்களூருல வேலை செய்யும்போது நல்லபழக்கத்தில தான் அவரை பிஜேபில சேத்தாராம் .இப்ப அண்ணாமலை முழுக்க நம்பியிருப்பது சி.டி ரவியைத் தான்.

டெல்லியில் தற்போது சிடி ரவி புதிதாக வீடு கட்டியிருக்காரு. அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு போறதா சொல்லிட்டு த்தான் அண்ணாமலை டெல்லி போயிருக்காராம். அதனால் தமிழக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா? மாட்டாரா? என்கிற தகவல்கள் கமலாலயத்தில் ரெக்கை கட்டி பறக்குது.அண்ணாமலை சென்னைக்கு வந்ததும் திரும்பி வந்துட்டேன்னு சொல்வாரா இல்லை திரும்ப வரமாட்டேன்னு சொல்வாராங்கிறது இரண்டு நாள்ல தெரிஞ்சிடும்.அண்ணாமலைக்கு அரோகரா