ருத்ரம் சினிமாசின் முதல் படைப்பான சிங்கா-வை அறிவித்தது!

ருத்ரம் சினிமாஸ் தனது முதல் படைப்பாக சிங்கா திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது.

புகழ்பெற்ற இயக்குநர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றி அனுபவத்தைப் பெற்ற இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கும் இந்த படம், உணர்ச்சி, நம்பிக்கை, காதல், ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலவையாக குடும்பம் முழுவதும் ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் திறமையான நட்சத்திரக் குழு ஒன்றாகக் களம் இறங்குகிறது. தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த கயல் சந்திரன் கதையின் உணர்ச்சி மையத்துடன் இணையும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சிஜா ரோஸ், மலையாளத்தில் புகழ்பெற்ற புதுமுகம் மீனாட்சி, ஆதித்யா கதிர், மலையாளத்தின் பிரபல நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் இணைகின்றனர்.இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்க, அசோக் குமார்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கதையின் மையத்தில் இருக்கும் சிங்கா எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது.

முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், திரையுலக ரசிகர்கள் அனைவரையும் சிங்காவின் ஆத்மார்த்தமும், பொழுதுபோக்கும் கலந்த கதையை வரவேற்க அழைக்கிறோம்.

Related posts:

டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” – தமிழ் ட்ரெய்லர் வெளியீடு! ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா...

*நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!*

தீம் பார்க்கில் தடம் பதித்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்!

காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் 'சிக்னல் அட் 11.30'!!

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா : நெகிழும் 'புஜ்ஜி @ அனுப்பட்டி 'திரைப்பட இயக்குநர் ராம் கந்தசாமி !

மின்மினி -- விமர்சனம்.!

’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!