‘ஃபயர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி: அனைவருக்கும் இயக்குநர்-தயாரிப்பாளர் ஜெ எஸ் கே மனமார்ந்த நன்றி

‘ஃபயர்’ திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கொண்டாட்டம், நாயகன் பாலாஜி முருகதாசுக்கு தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார் ஜெ எஸ் கே

இரண்டாவது வாரத்தில் வெற்றி நடை போடும் ‘ஃபயர்’; திரையரங்குகள், காட்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கடந்த வாரம் வெளியான ‘ஃபயர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இயக்குநராகவும் அழுத்தமான முத்திரை பதித்துள்ள வெற்றிப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெ எஸ் கே, ‘ஃபயர்’ திரைப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் சென்னையில் உள்ள காசி டாக்கீஸில் நேற்றிரவு (பிப்ரவரி 19) கொண்டாடினார்.

வார நாளின் இரவுக் காட்சியிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிய ‘ஃபயர்’ திரைப்படம் நிறைவடைந்தவுடன் திரையரங்கு நிர்வாகிகளின் உற்சாக அனுமதியோடு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளுக்கு மத்தியில் படத்தின் வெற்றியை கேக் வெட்டி குழுவினர் கொண்டாடினார்கள்.

ஜெ எஸ் கே, பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், அனு, ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாயகன் பாலாஜி முருகதாசுக்கு ‘ஃபயர்’ திரைப்படத்தை ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாரித்து இயக்கியுள்ள ஜெ எஸ் கே தங்க சங்கிலியை பரிசாக வழங்கினார்.

படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெ எஸ் கே கூறியதாவது: “ஃபயர்’ திரைப்படத்திற்கு பேராதரவு வழங்கிய பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல கதைக்கும், கடின உழைப்புக்கும் மக்கள் எப்போதும் ஆதரவளிப்பார்கள் என்பதற்கு ‘ஃபயர்’ படத்தின் வெற்றி சாட்சி.

பார்வையாளர்கள் காட்சிக்கு காட்சி கைதட்டி ரசிக்கிறார்கள். யூகிக்க முடியாத கிளைமேக்ஸ் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வார நாட்களிலும் கூட்டம் குவிவதால் திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டாவது வாரத்திலும் காட்சிகள் மற்றும் திரைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். உண்மையான வெற்றிக்கு இது அடையாளம். சின்ன படத்தை பெரிய படமாக்கிய மக்களுக்கே இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.”

‘ஃபயர்’ படத்தின் வெற்றி தனக்கும் தனது குழுவினருக்கும் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளதாகவும், தரமான படைப்புகளை தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் ஜெ எஸ் கே தெரிவித்தார்.

Related posts:

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி' வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

நடிகர் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவாகி வரும் 'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

"அஜித் சார் ரசிகர்கள் அவரிடம் இருந்து எப்பொழுதும் சிறந்ததை எதிர்பார்ப்பார்கள் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தார்" - நடிகர் ஆரவ்!

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் YES BANK ? PHONE PE க்கு பாதிப்பு?

இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் திரைப்படம்  'கான்ஸ்டபிள் நந்தன்’!

போர்ட்டர் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை பெறுவதற்கும் தடையற்ற போக்குவரத்துக்கும் இன்டர்சிட்டி கூரியர் சேவையை தொடங்குகிறது!

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்களுக்கு ‘அக்யூஸ்ட்’ தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் மனமார்ந்...