நீதிமன்றம் அனுமதித்தாலும் காவல்துறை அனுமதிக்க மாட்டேங்குது ? நடன கலைஞர்கள் குமுறல் ??

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டேன் என்கிறார் அதேபோலத்தான் நீதிமன்றம் அனுமதித்தாலும் காவல்துறை அனுமதிக்க மாட்டேங்குது.நாங்க போலீஸ் ! நாங்க சொல்றது தான் சட்டம்!! நீதிமன்றம் சொன்னால் எல்லாம் ஏத்துக்க மாட்டோம்.? தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குமுறல்?

இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் தலைவர் சுஜாமுருகன் மற்றும் மல்டிபாஸ்கர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்த போது கூறியதாவது: எங்களது சங்கம் முறையான நடன கலைஞர்களை ஒன்றினைத்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சங்க கிளைகளை நிறுவியும் நடன கலைஞர்களின் வாழ்வாதாரம் காப்பதற்காக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது மட்டுமன்றி கடந்த 3 வருடங்களாக (ஆடல் பாடல்) நடன நிகழ்ச்சிகளிள் நடத்துவதற்கு (நீதிமன்றம் ஆணையம் இல்லாமல்) காவல்துறையின் மூலம் நேரடி அனுமதி வழங்கக் கோரி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இருக்கும் தருணத்தில் கடந்த 9 .4. 2019 ஆம் தேதி அன்று மதுரை உயர்நீதி மன்ற நீதியரசர் திரு பாரதிதாசன் ஐயா அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட 13 தென்பகுதி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் நடன நிகழ்ச்சிகள் (ஆடல் பாடல்) நடத்துவதற்கு (நீதிமன்ற ஆணையில்லாமல்) காவல்துறையினர் நேரடி அனுமதி வழங்கலாம் என்பதை பரிந்துரைத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது நீதிமன்றம் என தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேட்டி.