செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

420 குரல்களில் பேசும் மிமிக்ரி செந்தில் !

420 குரல்களில் பேசும் மிமிக்ரி செந்தில் !

ஒவ்வொரு கூட்டத்திற்கு வித்தியாசமான விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அசத்தும் சென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தின் நிறுவனர் டாக்டர் சேகர்தான் இந்த முறையும் இவரை கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்தார்.கையில் மைக்கை பிடித்தவர் அடுத்த முப்பது நிமிடத்திற்கு கூட்டத்தினரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்.நடிகர் விஜய் முதல் வைகோ வரையிலான பலரது குரல்களில் பேசி அசத்தினார், கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சம்பந்தப்பட்டவர்களே பேசுவது போல அச்சு அசலாக இருந்தது ஆனால் அத்தனை குரல்களிலும் நகைச்சுவை கலந்து இருந்ததால் வெடிச்சிரிப்பை வரவழைத்தது.கிங்காங் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு தெரியும், அதிகம் திகில் ஊட்டியது கிளைமாக்ஸ் காட்சியில் ‛கிங்காங்' என்ற மனிதகுரங்கு எழுப்பிய சப்தங்கள்தான் என்பது.அந்த சப்தங்கள் அனைத்தையும் ஒரே ஒரு மைக்கை வைத்துக்கொண்டு இவர் உருவாக்கிகாட்டி பார்வையாளர்களை மிரட்டிவிட்டார். இது போல பல்வேறு நிகழ்ச்சிகள், அவருக்கு கொடுக்கப்பட்ட முப்பது நிமிடங்களும் முப்பது வினாடிகளாக பறந்தது.மனதார அவரை பாராட்டி பேசியபோதுதான் ஒரு மனிதருக்குள் இவ்வளவு திறமையா? என வியக்கவும் வைத்தார்.அவர்தான்…
Read More
அமேசான்,பிளிப்கார்ட் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி சம்பாதித்துள்ளது!.

அமேசான்,பிளிப்கார்ட் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி சம்பாதித்துள்ளது!.

ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) நடத்திய பண்டிகை கால ஆன்லைன் சிறப்பு விற்பனையில் பல கோடிகளை சம்பாதித்துள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை ஆறு நாட்களில் மொத்தம் மூன்று பில்லியன் டாலர் (சுமார் ரூ. 19,000 கோடி) விற்பனை மூலம் பெற்றுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இதுக்குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் ஆன்லைன் விற்பனை ஆறு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.39,000 கோடி) வரை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ஸீர் கன்சல்டிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் கூறுகையில், "சவாலான பொருளாதார சூழ்நிலை இருந்தபோதிலும், பண்டிகை காலத்தின் முதல் சுற்றில் 3 பில்லியன் டாலர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கிய நுகர்வோர்கள் வருவதைக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.
Read More
வீடுகளில் சோல்மேட்  சூரிய மின் பலகைகள் !

வீடுகளில் சோல்மேட் சூரிய மின் பலகைகள் !

வீடுகளில் சூரிய மின் பலகைகளை நிறுவும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், அதை நிறுவ குறைந்தது இரண்டு பணியாளர்கள் வரவேண்டி இருக்கிறது.தவிர, வாடகை வீட்டில், அடுக்கு மாடிகளில் குடியிருப்போருக்கு வசதியாக, சூரிய மின் பலகைகள் வடிவமைக்கப்படுவதில்லை. இந்தக் குறைகளை போக்கும் விதத்தில் வந்திருக்கிறது 'சோல்மேட்' (Solmate). ஜெர்மனியைச் சேர்ந்த ஈ.ஈ.டி., தயாரித்துள்ள சோல்மேட்டை, எவரும் தங்கள் வீட்டில் காலியிடம் அல்லது பால்கனியில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைத்துவிடலாம். அதிலிருந்து வரும் மின்சாரத்தை சிறிய ஒயர் மூலம் சோல்மேட் மின்கலனில் சேகரித்து வைத்துக்கொள்ளாம். சோல்மேட் மின்கலனிலிருந்து ஒரு இணைப்பை நேரடியாக வீட்டின் பிளக்கில் செருகி வைத்தால் போதும். சூரிய மின்சாரத்தில் வீட்டுக் கருவிகளை இயக்கலாம்.சோல்மேட் சூரிய மின்பலகை எடை குறைவானது என்பதாலும், எளிய ஸ்டாண்ட்டைப் போட்டு நிறுவிடலாம் என்பதாலும், நடுத்தர குடும்பங்களில் சோல்மேட்டுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். Advertisement
Read More

தமிழகத்தின் ஆளுநராக தமிழிசை வந்திருக்க வேண்டும் ? சரத்குமார் ஆதங்கம் !

தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்துக்கு ஆளுநராக வந்திருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாடார் சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய சரத்குமார், தமிழிசை சவுந்தரராஜன் ஒரு கடின உழைப்பாளி என்றும், அவருடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் ஆளுநர் பதவி எனவும் தெரிவித்தார். தமிழிசையின் உழைப்பு தெலுங்கானா மாநிலத்தை வளர்ச்சியடைய செய்யும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும், தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்துக்கு ஆளுநராக வந்திருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும் எனவும் கூறினார்.சரத்குமாரை தொடர்ந்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரலாற்று…
Read More
மேகேதாட்டு அணை; மத்திய அரசு அனுமதி கூடாது! வைகோ வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை; மத்திய அரசு அனுமதி கூடாது! வைகோ வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டி முடிக்க வேண்டும் என்பதில் கர்நாடக மாநிலம் முனைப்பாக இருக்கின்றது. கர்நாடக அரசின் சார்பில் அதன் நிர்வாக நிறுவனம் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகத்தின் கருத்தையோ, அனுமதியையோ பெற வேண்டிய தேவை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. காவிரிநீர் பங்கீடு தொடர்பான 1892 ஆம்ஆண்டில் மைசூர் மாகாணத்திற்கும்-சென்னை மாகாணத்திற்கும் இடையே உருவான ஒப்பந்தம், 1924 இல் போடப்பட்ட ஒப்பந்தம் ஆகிய இரண்டுமே, காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்து இருக்கின்றன. 1892 ஒப்பந்தத்தின்படி மைசூர் மாகாணத்தின் முதன்மையான ஆறுகள் என்று ஒரு அட்டவணை உருவாக்கப்பட்டு, அந்த 'ஏ' அட்டவணையில் காவிரி, துங்கபத்ரா, ஹகரி அல்லது வேதவதி, பெண்ணாறு அல்லது வடபினாகினி, சித்திராவதி உள்ளிட்ட 15 ஆறுகள் சேர்க்கப்பட்டன.சென்னை மாகாண அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூர் அரசு மேற்கண்ட 'ஏ' அட்டவணை…
Read More
ஞாயிற்று கிழமையும் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி உண்டு.!

ஞாயிற்று கிழமையும் சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி உண்டு.!

சமையல் காஸ் பற்றிய கவலை, பெண்களுக்கு இனி வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும், 'காஸ் சிலிண்டர் டெலிவரி' உண்டு. இது பண்டிகை காலம் என்பதால், வாடிக்கையாளர்கள் வசதிக்காக, எண்ணெய் நிறுவனங்கள், இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளன. தமிழகத்தில், 'இந்தியன் ஆயில்' நிறுவனத்திற்கு, 1.34 கோடி, 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்திற்கு, 60 லட்சம், 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' நிறுவனத்திற்கு, 40 லட்சம் என, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேற்கண்ட நிறுவனங்கள் சார்பில், சிலிண்டர்களை, வீடுகளுக்கு டெலிவரி செய்ய, 1,600 காஸ் ஏஜென்சிகள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், கட்டணமில்லா தொலைபேசி எண், மொபைல் போன் செயலி, குறுந்தகவல் வாயிலாக, சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். பின், ஏஜென்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வந்து, சிலிண்டர்களை டெலிவரி செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காஸ் ஏஜென்சிகள் செயல்படுவதில்லை. இதனால், ஒரு சிலிண்டர் இணைப்பு மட்டும் பெற்றுள்ளவர்களின் வீடுகளில், ஞாயிற்றுக் கிழமை சிலிண்டர் தீர்ந்து விட்டால், சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.…
Read More
கும்பல் படுகொலைக்கு எதிராக பேசியவர்கள் மீது FIR ! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்  !

கும்பல் படுகொலைக்கு எதிராக பேசியவர்கள் மீது FIR ! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் !

நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் படுகொலைக்கு எதிராக தங்களுடைய அக்கறையை வெளிப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த மடல் எழுதிய 50 பிரபலங்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிந்துள்ளதாக வந்துள்ள செய்தி குறித்து தன்னுடைய அதிர்ச்சியையும் கோபத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளிப்படுத்தியுள்ளார். பிரபலங்களுக்கு எதிராக தேச விரோத செயல், பொதுமக்களுக்கு இடையூறு, மத உணர்வுகளை காயப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தெளிவாக மக்களை அச்சுறுத்தும் நோக்கில் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் நிகழ்வாகும். சுதந்திரமாக பேசுவது, எதிர் கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையை பாதுகாப்பது, சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறை குறித்து கேள்வி எழுப்புவது போன்றவை இப்போது நாட்டில் குற்றங்களாக கருதப்படும் நிலை கோபத்தை ஏற்படுத்துகின்றது. பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூர்…
Read More
தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் – கண்காட்சி !

தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் – கண்காட்சி !

உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது சென்னை மாநகரில் தியாகராய நகரில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நாகர்கோயில் ஷோரூமில் நடைபெற்றுவருகிறது . தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும் , அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 250 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது . தமிழ்நாட்டில் சென்னை , கோவை , மதுரை , நாகர்கோயில் , திருநெல்வேலி , சேலம் , ஈரோடு , தஞ்சாவூர் , இராமநாதபுரம் , தர்மபுரி , வேலூர் ஆகிய நகரங்களில் 13 கிளைகளை கொண்டுள்ளது . மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க . அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும் .…
Read More
சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை.!

சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை.!

சேதாரம் என்பது எல்லா பொருட்களுக்கும்உண்டு. வெறும் தங்கத்திற்கு மட்டுமில்லை. மற்ற பொருட்களில் நாம் கவனம் கொடுப்பதில்லை. உதாரணமாக நீங்கள் ஒரு ஆரஞ்சு ஜூஸ் வாங்குகிறீா்கள். அதற்கு சேதாரம் உண்டு. ஆரஞ்சு விலை கிலோ 50 தான். ஆனால் இரண்டு பழம் போட்ட ஜூஸ் ஏன் ஐம்பது ரூபாய் என்று கேட்பதில்லை. இட்லி மாவு அாிசி பருப்பு விலையுடன் இட்லி விலை பாா்த்தால் மிக அதிகமாக இரூக்கும். இதற்கு பெயா் மதிப்பு கூட்டுதல் என்று பெயா். பழமாக இருக்கும் போது ஒரூ விலை, அதே பழத்தை ஜூஸ் அல்லது சாசாக மாற்றும் போது அதன் விலை மாறு படுகிறது. அதன் விலை தரம் கடையின் புகழ் நீங்கள் குடிக்கும் இடத்தை பொறுத்து ஜூசின் விலை மாறும். இதைமதிப்பு கூட்டு விலை என்று பெயா். இரும்பும் அப்படித்தான் சாதாரனமாக கம்பி அல்லது தகரமாக வாங்கும் போது அதன் இன்றைய விலை 50 ரூபாய் தான்.…
Read More
மாற்றுத் திறனாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

மாற்றுத் திறனாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

மாற்றுத் திறனாளர்களுக்கான மாபெரும் பல்நோக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 150வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு , தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கமும் , சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை , ராகாஸ் பல் மருத்துவமனை , ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவசங்கத்துடன் இணைந்து, மாற்றுத் திறனாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு , மாபெரும் பல்நோக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ,ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமினை, பெருநகர சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவின் உதவி ஆணையர் முனைவர் ச.செல்வக்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு , முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வுச் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆவின் கி.கோபிநாத் பேசும்போது:மாற்றுத்திறனாளர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவர்களுக்குத் தேவையான…
Read More