செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் ! ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் நிதி திரட்டல் நிகழ்ச்சி !

வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் ! ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் நிதி திரட்டல் நிகழ்ச்சி !

2020 ஆம் ஆண்டுக்குள் வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதற்காக தங்களது வருடாந்திர நிதி திரட்டல் நிகழ்ச்சியை ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் நடத்தியது• சங்கீத கலாநிதி . அருணா சாய்ராம் , பல பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கிய இசை கச்சேரி இதன் மைய நிகழ்வாக இடம்பெற்றது. சென்னையை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகின்ற , லாபநோக்கற்ற சேவை நிறுவனமான ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் , அதன் முதலாவது வருடாந்திர நிதிதிரட்டல் நிகழ்வை மைத்ரி என்ற பெயரிலான தங்களது அமைப்பின் வழியாக மிகச்சிறப்பாக நடத்தியது . மூத்த குடிமக்களுக்கான ஆதரவுக் கரமாக செயல்படும் மைத்ரி , வயது வந்த முதியவர்கள் வாழ்க்கையை நடத்துவதில் எதிர்கொள்கின்ற கடும் சிரமங்களையும் , சவால்களையும் எளிதாக்குவதற்காக தொடங்கப்பட்டதாகும் . சென்னையிலுள்ள மியூசிக் அகாடமி வளாகத்தில் சங்கீத கலாநிதி அருணா சாய்ராம் அவர்களின் அற்புதமான இசைக் கச்சேரியின் வழியாக இந்த மாலை நேர நிகழ்வானது ,…
Read More
இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் ஆரம்பம் !

இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் ஆரம்பம் !

இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது . முதல் முறையாக சென்னைக்கு வந்திருக்கும் டைசன் டெமோ ஸ்டோரில் , டைசன் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் சோதனை செய்யலாம் . சென்னை அண்ணாநகர் வி ஆர் மாலில் டைசன் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது . டைசன் தொழில்நுட்பம் குறித்த முக்கிய தகவல்கள் டைசன் VII " கார்டு ப்ரீ வேக்கம் : டைசன் V111 - கார்டு ப்ரீ வேக்கம் தயாரிப்பு பணிகள் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வெற்றி கண்டுள்ளது . உங்களது இல்லங்களை சுத்தம் செய்யும் இந்த வேக்கம் , டைசனின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முக்கியமானது . டைசனின் பா மோட்டார் . 125 , 000rpm அளவில் சுழலும் தன்மை கொண்டது . முந்தைய வேக்கம் ப்ராடக்ட் டைசன் சைக்லோன் V10 - வேக்கமைவிட டைசன் VII " கார்டுயரி வேக்கம், 40 % அதிக பவர் கொண்டது…
Read More
பிரதமர் மோடிக்கு உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் புதிய விமானம்.!

பிரதமர் மோடிக்கு உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் புதிய விமானம்.!

பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக 2 புதிய அதிநவீன விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு மற்றும் மிரட்டலான பாதுகாப்பு வசதிகள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். இதனால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் மற்றும் விமானங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவின் பி747 (B747) விமானங்களில்தான் பிரதமர் மோடி பறந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் கூட பி747 விமானங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் மிக முக்கியமான நபர்கள் பயணிக்கும் இந்த பி747 விமானங்களை ஏர் இந்தியாவின் பைலட்கள்தான் இயக்கி வருகின்றனர். ஏஐஇஎஸ்எல் எனப்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் (AIESL - Air India Engineering…
Read More
தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.!

தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.!

முதலீடு நோக்கில் தங்கம் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தங்க முதலீட்டிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும்,அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகள்:தங்க சேமிப்பு பத்திரம், 8 ஆண்டு காலம் முதிர்வு கொண்டது. முதிர்வு காலம் வரை வைத்து இருந்தால், மூலதன ஆதாய வரி கிடையாது. முதிர்வு தொகைக்கு வரி கிடையாது.தங்க சேமிப்பு பத்திரங்கள் மீது கிடைக்கும் வருமான வரிச்சலுகை, தங்க ஈ.டி.எப்., மற்றும் தங்க மியூச்சுவல் பண்ட்களில் கிடையாது.தங்க நகைகள் மீது, 3 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் இல்லை.தங்க சேமிப்பு பத்திர முதலீட்டிற்கு ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இதற்கு டி.டீ.எஸ்., பிடித்தம் செய்யப்படுவதில்லை. வட்டி வருமானம், ஒருவரது வருமானத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். வேறு தங்க முதலீடுகள் எதுவும் வருமானம் அளிப்பதில்லை. தங்க சேமிப்பு பத்திரங்களில் இருந்து, 5 ஆண்டுக்கு பின்…
Read More
‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது.!

‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது.!

மின்னணு வர்த்தக நிறுவனமான, ‘பிளிப்கார்ட்’ உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனையிலும் ஈடுபட உள்ளது. இதற்காக, தனியாக புதிய நிறுவனம் ஒன்றை பதிவு செய்துள்ளது.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனைக்காக, ‘பிளிப்கார்ட் பார்மர்மார்ட்’ எனும் தனி நிறுவனம் ஒன்றை, துவக்கி பதிவு செய்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.இந்த புதிய நிறுவனம், தனியாக உணவுப் பொருட்கள் சில்லரை விற்பனைக்கான உரிமம் கோரி விண்ணப்பிக்க தயாராகி வருகிறது. இந்த சில்லரை விலை விற்பனை, ‘ஆன்லைன்’ மூலமாகவும், ‘ஸ்டோர்’கள் மூலமாகவும் செய்யப்படும் என தெரிகிறது.இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம், 1,845 கோடி ரூபாய் என, நிறுவன பதிவாளர் அலுவலகத்துக்கான விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது.கடந்த மாதம், சிங்கப்பூரில் நடைபெற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில், இந்த புதிய நிறுவனத்தை துவக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது.…
Read More

கொத்தடிமை ஒழிப்பில் தமிழக அரசு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது !

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புசட்டம் வெளிவந்து 44 ஆண்டுகள் ஆனபின்பும் இந்தக் கொடுமை இன்னமும் நம்நாட்டில் தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும் . 2016ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் மத்திய தொழில்துறை அமைச்சர் 2030 ம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 84 லட்சம் கொத்தடிமைகளை விடுவித்து மறுவாழ்வு அளிக்க போவதாக அறிவித்துள்ளார்.ஒரு மனிதன் கடனுக்காக அல்லது வேறு கடமைகளுக்காக குறைந்தபட்ச கூலி பெறாமலோ சுதந்திரமாக எங்கும் செல்வதற்கான உரிமையை இழந்தோ தனது வேலையை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்தோ வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டால் அவன் கொத்தடிமை தொழிலாளி என கொத்தடிமை முறை ஒழிப்புசட்டம்பிரிவு இரண்டு குறிப்பிடுகிறது . இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அரசுடன் இணைந்து செயலாற்றும் ஒரு சர்வதேச தொண்டு நிறுவன மாகும் . கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பில் தமிழக அரசு ஒரு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது . கொத்தடிமை முறை ஒழிப்பிற்காக மாநில அளவில் தனி அலுவலர் , மாநில செயல்திட்டம்…
Read More
அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தில் இருந்து, அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற்றப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா நகரில், 'டவர் கிளப்' உள்ளது. மாநகராட்சியின் இடம் மற்றும் கட்டடம் என, ௩௩ ஆயிரத்து, 255 சதுர அடி, டவர் கிளப் வசம் உள்ளதால், அதில் இருந்து வெளியேறும்படி, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை, சென்னை சிவில் நீதிமன்றமும் உறுதி செய்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம், மனு தாக்கல் செய்தது. மாநகராட்சி தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'குத்தகைக்கு விடப்பட்ட இடம், தங்கள் வசம் இருப்பதாக, டவர் கிளப் கூறியிருப்பது பொய்யானது.டவர் கிளப்பின் தென் மேற்கு மூலையில் உள்ள கலையரங்க கட்டடம் தான், மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது; 32 ஆயிரம் சதுர அடி இடம், குத்தகைக்கு விடப்படவில்லை. நீதிமன்றத்தில், பொய்யான மனு…
Read More
சிலிண்டர் டெலிவரி செய்ய டிப்ஸ் ? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ?

சிலிண்டர் டெலிவரி செய்ய டிப்ஸ் ? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ?

வீடுகள் மற்றும் கடைகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிலிண்டரை நேரடியாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ பதிவு செய்கின்றனர். சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அவரது மனுவில், “வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை விநியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நபர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர். நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து ஆயிரக்கணக்கானவர்கள் சிலிண்டர் நிறுவனங்களுக்குப் புகார்கள் தெரிவித்தும்,…
Read More
ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் – ஐ  கௌரவித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் !

ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் – ஐ கௌரவித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் !

தென்னிந்தியாவின் முன்னணி ஜுவல்லரி பிராண்டான உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் , ரஷ்யாவில் நடைபெற்ற 45வது வேர்ல்டு ஸ்கில்ஸ் கஸான் 2019 நிகழ்வில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று ஆபரண வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சஞ்சய் பிரமானிக் - ஐ பாராட்டி கௌரவித்திருக்கிறது . இந்த இளம் சாதனையாளரை பாராட்டுவதற்காக நடைபெற்ற நிகழ்வில் அமரேந்திரன் உம்மிடி அவர்களோடு ஜெம் & ஜுவல்லரி ஸ்கில் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குனரும் , தலைமைச் செயல் அலுவலருமான ராஜிவ் கார்க் பங்கேற்றார் . இந்திய குழுவானது , உலகின் மிகப்பெரிய சர்வதேச தொழில்முறைத்திறன் போட்டி நிகழ்வான இதில் , நான்கு பதக்கங்களையும் மற்றும் 15 நேர்த்தி நிலைக்கான மெடல்களையும் வென்றிருக்கிறது . ரஷ்யாவின் இந்த ஆண்டு நடைபெற்ற இந்த சர்வதேச திறன் சவால் போட்டியில் பங்கேற்ற 63 நாடுகளில் , இந்தியா 13 - வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது .…
Read More
இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்!

இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பிரஞ்சால் பட்டீல்!

மஹாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரை சேர்ந்தவர் பிராஞ்சால் பட்டீல்(31). இவர் தனது ஆறாவது வயதில் பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டார். சிறு வயது முதலே கல்வியின் மீது தீரா தாகம் கொண்ட பிராஞ்ஜல் பாட்டில் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவு கள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் யுபிஎஸ்சி தேர்வுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். விடா முயற்சியால் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தனது முதல் முயற்சிலேயே 773 வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவருக்கு இந்திய ரயில்வே துறையில் பணி கிடைத்தது. எனினும் இவருக்கு பார்வை குறைபாடு இருந்ததால் அந்தப் பணி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மனம் தளராத பிராஞ்ஜல் பாட்டில் மீண்டும் 2017ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார். இந்தத் தேர்வில் அவர் 124 வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் இந்திய ஆட்சிப் பணி…
Read More