செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்‌ஷிகா பெயர் பதிவு செய்ய நீதிபதி உத்தரவு..!

செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்‌ஷிகா பெயர் பதிவு செய்ய நீதிபதி உத்தரவு..!

திருநங்கை ராக்ஷிகா செவிலியர் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்த போது மூன்றாம் பாலின பெண் என தன்னை பதிவு செய்த விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறி திருநங்கை ராக்ஷிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாதிடும்போது மூன்றாம் பாலினத்தவர் பதிவு குறித்த கவுன்ஸில் விதிகளில் திருத்தம் செய்ய இருப்பதாகவும் , ராக்ஷிகா பெயரை மூன்றாம் பாலினத்தவர் என பதிவு செய்ய இடைக்கால ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தமிழ்நாடு கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர வரை திருநங்கை ராக்ஷிகா பெயரை தற்காலிகமாக செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
Read More
அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகம்  !

அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகம் !

அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அறிமுகமாகிறது ! முதல் ஆண்டிலேயே ரூ . 150 கோடி விற்பனை வருவாயை இலக்காக இது நிர்ணயித்திருக்கிறது ! ! ! சென்னை : இந்தியாவின் முதல் அடுத்த தலைமுறை நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் பிராண்டான Amstrad , தமிழ்நாட்டில் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது . Amstrad , புனே நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள OVOTPvt . Ltd - க்கு சொந்தமான பிராண்டாகும் . மகிழ்ச்சியும் , உற்சாகமும் கரைபுரண்டோடும் சுப வேளையான தீபாவளி திருநாளையொட்டி தமிழ்நாட்டில் தனது பயணத்தை தொடங்கும் Amstrad , முதல் ஆண்டிலேயே ரூ . 150 கோடி விற்பனை வருவாயை அடைவதை இலக்காகக் கொண்டிருக்கிறது . கட்டுபடியாகக்கூடிய மிதமான விலைகளில் இந்திய நுகர்வோர்களுக்கு உயர் தரத்திலான அடுத்த தொழில்நுட்ப சாதனங்களை வழங்க வேண்டும் என்பதே Amstrad -…
Read More
பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் போராட்டம் ?பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் போராட்டம் ?பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார். அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்காவிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலம் இருக்காது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Read More
நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் !

நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் !

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, அகில இந்திய அளவில் இன்று(அக்.,22) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் உட்பட, இந்திய அளவில் 3 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற முயற்சியை, மத்திய அரசு மேற்கொண்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இன்று(அக்.,22) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வி அடைந்தது. இதனையடுத்து, இன்று திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் 35,000 பேர்…
Read More
ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..!

ஆதாரில் முகவரியை மாற்ற வாடகை ஒப்பந்த பத்திரம் போதும்…..!

ஆதார் அட்டை, தற்போதைய நிலையில் அனைவருக்கும் இன்றியமையாததாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில், ஆதார் அட்டையில் உள்ள முகவரியே, முகவரி சான்று ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள் எனில், அவர்கள் முகவரி மாற்றம் அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கோ, ஒவ்வொரு வீடும் மாறும் போதும், ஆதார் அட்டையில் எவ்வாறு முகவரியை மாற்றுவது என்று விழிபிதுங்கிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இந்த தகவல் அமையும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை… வாடகை வீட்டில் வசிப்பவர்கள், ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மாறும்போது, அவர்களது முகவரி மாற்றம் பெறும். ஆதார் அட்டை, பல்வேறு இடங்களில் முகவரி சான்று ஆகவும் பயன்படுத்தப்பட்டு வருவதால், தற்போது வசிக்கும் இடத்தின் முகவரியை, ஆதார் அட்டையில் மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. UIDAI அமைப்பு, முகவரி மாற்றத்திற்கு 44 வகையான ஆவணங்களை அங்கீகரித்துள்ளது. வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரமும் இதில் அடக்கம்…
Read More
விரைவில் விற்கப்படும் Air India பங்குகள் ?

விரைவில் விற்கப்படும் Air India பங்குகள் ?

Air India-வின் 100% பங்குகளை விற்க அடுத்த மாதம் ஆரம்ப ஏலங்களுக்கு அழைப்பு விடுக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது!இதுகுறித்து தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கையில்., Air India பங்குகளை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும். சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிக்கும் Air India நிறுவனத்தை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ஏலத்திற்கான, ஏல ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதாக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்திற்குள் ஏலம் விடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. e-tendering தொழில்நுட்பம் மூலம் ஏலம் விடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இயக்குநர்கள் குழு அக்டோபர் 22 அன்று கூட்டப்பட உள்ள நிலையில், முன்னதாக நகர இயக்குநர் குழுவின் கூட்டத்திற்கு முன் நகராட்சி விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலா மறுஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்டார். இதனிடையே Air India…
Read More
இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்றது ! தலைமை தேர்தல் அதிகாரி !

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்றது ! தலைமை தேர்தல் அதிகாரி !

இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது .விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. நாங்குநேரி தொகுதியில் 66.10% வாக்குகளும், விக்கிரவாண்டி - 84.36% வாக்குகளும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Read More
ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் !

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் !

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க அரசு கண்டுபிடித்ததை அடுத்து, 33 ஆயிரம் பவுடர் டின்களை அந்நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது!! அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் உலகம் முழுவதும் குழந்தைகளை பராமரிப்பதற்கான பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. 130 ஆண்டுகள் பழமையான, அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன், அதன் பல்வேறு தயாரிப்புகள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. அதன் பேபி பவுடர் உள்ளிட்ட டால்கம் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளை நுகர்வோர் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருப்பதை, அமெரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட பவுடர் டின்னில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருந்ததை…
Read More
பேட்டரியை விட 30 மடங்கு அதிகம் சேமிக்கும்  மின்கருவி ! லண்டன் விஞ்ஞானிகள் சாதனை !!

பேட்டரியை விட 30 மடங்கு அதிகம் சேமிக்கும் மின்கருவி ! லண்டன் விஞ்ஞானிகள் சாதனை !!

லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பாலிமர் பிலிம்கள் மூலம் புதிய டைஎெலக்ட்ரிக் கெபாசிடர் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் பாலிமர் பிலிம்கள், டை எெலக்ட்ரிக் கெபாசிடரை சுற்றி பல அடுக்குகளாக சுற்றப்பட்டு அழுத்தப்பட்டுள்ளன. தற்போது, சந்தையில் கிடைக்கும் டை எலக்ட்ரிக் கெபாசிடரை விட, பாலிபர் பிலிம்கள் சுற்றப்பட்ட டை எெலக்ட்ரிக் கெபாசிடர் 30 மடங்கு அதிகமாக மின்சாரம் சேமிக்கிறது. பேக்கரிகளில் பப்ஸ் தயாரிக்க, மாவு, பல அடுக்குகளாக மடிக்கப்பட்டு அழுத்தப்படும். அதைப் பார்த்து பாலிமர் பிலிம்களை பல அடுக்குகளாக, டைஎலக்ட்ரிக் கெபாசிடர் சுற்றி, அதிக சேமிப்பு திறனுள்ள கருவியை உருவாக்கும் ஐடியா கிடைத்ததாக ராணி மேரி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த ஆய்வு கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. சூரிய மின்சக்தி, மற்றும் காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை, குறைந்த செலவில் சேமிக்க இந்த புதிய கண்டுபிடிப்பு வழிவகுத்துள்ளது. T
Read More
என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக பதிலடி கொடுக்கிறேன் !ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்பேச்சு!

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக பதிலடி கொடுக்கிறேன் !ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்பேச்சு!

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் நின்று பதிலடி கொடுக்கிறேன் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழா நடைபெற்றது. குழுமத் தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தேசிய கயறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கே.எம்.சி.ஹெச். மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் நல்லா ஜி.பழனிசாமி, பி.பி.ஜி. குழும அறங்காவலர் அக்சய் தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு உள்ளிட்டோர் பேசினர்.சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, கல்வி, கலை, விளையாட்டுகளில் சிறந்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், பல்துறை சாதனையாளர்கள், டாக்டர்களுக்கு விருதுகளும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றாலும், தமிழ் மண்ணுக்கு நன்றியுடையவளாக இருப்பேன். இரு மாநிலங்களுக்கிடையே பாலமாக செயல்படுவேன். மேதகு ஆளுநர் என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும், சகோதரி என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன். கோவையுடன் எனக்கு நெருங்கிய…
Read More