கொத்தடிமை ஒழிப்பில் தமிழக அரசு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது !

கொத்தடிமை தொழில்முறை ஒழிப்புசட்டம் வெளிவந்து 44 ஆண்டுகள் ஆனபின்பும் இந்தக் கொடுமை இன்னமும் நம்நாட்டில் தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும் . 2016ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் மத்திய தொழில்துறை அமைச்சர் 2030 ம் ஆண்டுக்குள் ஒரு கோடியே 84 லட்சம் கொத்தடிமைகளை விடுவித்து மறுவாழ்வு அளிக்க போவதாக அறிவித்துள்ளார்.ஒரு மனிதன் கடனுக்காக அல்லது வேறு கடமைகளுக்காக குறைந்தபட்ச கூலி பெறாமலோ சுதந்திரமாக எங்கும் செல்வதற்கான உரிமையை இழந்தோ தனது வேலையை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்தோ வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டால் அவன் கொத்தடிமை தொழிலாளி என கொத்தடிமை முறை ஒழிப்புசட்டம்பிரிவு இரண்டு குறிப்பிடுகிறது .

இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அரசுடன் இணைந்து செயலாற்றும் ஒரு சர்வதேச தொண்டு நிறுவன மாகும் . கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பில் தமிழக அரசு ஒரு முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது . கொத்தடிமை முறை ஒழிப்பிற்காக மாநில அளவில் தனி அலுவலர் , மாநில செயல்திட்டம் என பல்வேறு திட்டங்களை வகுத்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க செயலாற்றுகிறது . தமிழக அரசால் வெவ்வேறு மாவட்டங்களில் விடுவிக்கப்பட்டு மறுவாழ்வை பெற்ற கொத்தடிமை தொழிலார்கள் தங்கள் விடியலை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் பாலைவனபூக்கள் எனும் தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சங்கமித்தனர்.தங்களை விடுவித்து மறுவாழ்வளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாண்புமிகு தமிழ்மற்றும் பண்பாட்டுத்துறைதுறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் . தமிழக அரசு தொடர்ந்து கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்தும் விதமாக மாநில அளவில் கொத்தடிமைகள் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பதோடு கொத்தடிமை ஒழிப்பு சட்டம் 1976 நடைமுறைக்கு வந்த பிப்ரவரி 9ஆம்தேதியை கொத்தடிமை முறை ஒழிப்புதினமாக அறிவித்து அரசாணை வெளியிடதாழ்மையுடன் கேட்டுக்கொண்டோம் . கொத்தடிமை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழகஅரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக் கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம் எனதெரி வித்துக்கொள்கிறோம் .