அமேசான்,பிளிப்கார்ட் ஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி சம்பாதித்துள்ளது!.

ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) நடத்திய பண்டிகை கால ஆன்லைன் சிறப்பு விற்பனையில் பல கோடிகளை சம்பாதித்துள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை ஆறு நாட்களில் மொத்தம் மூன்று பில்லியன் டாலர் (சுமார் ரூ. 19,000 கோடி) விற்பனை மூலம் பெற்றுள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இதுக்குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி வரை பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் ஆன்லைன் விற்பனை ஆறு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.39,000 கோடி) வரை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்ஸீர் கன்சல்டிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் கூறுகையில், “சவாலான பொருளாதார சூழ்நிலை இருந்தபோதிலும், பண்டிகை காலத்தின் முதல் சுற்றில் 3 பில்லியன் டாலர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது ஆன்லைன் ஷாப்பிங்கை நோக்கிய நுகர்வோர்கள் வருவதைக் காட்டுகிறது எனக் கூறியுள்ளார்.

Related posts:

தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.!

நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குத்தகை ஏலத்துக்கு வரும் பல கோடி மதிப்பு நிலம்!

சென்னை சில்லறை வர்த்தக உச்சி மாநாடு 2025: புதுமை மற்றும் சில்லறை விற்பனையின் அடுத்த கட்டத்தை RAI காட்சிப்படுத்துகிறது!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தென் பிராந்தியத்தில் ‘மழைக்கால பிரச்சாரம் 2023’ ஐ அறிவித்தது!

Home sales in Chennai see a 6% YoY growth in 2019: Launches rises by 11%: Knight Frank India

இந்தியா முழுவதும் மாபெரும் 'தேடல்', 'திறத்தல்' மற்றும் 'பதிவிறக்கம்' பொத்தான்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மர்மம் தீர்க்கப்பட்டது!

மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.!

விழிஞ்சம் துறைமுகம் - கடல்சார் மேலாண்மைக்கான இந்தியாவின் நுழைவாயில்!