01
Aug
ஏப்., 1, 2018ல், சூரிய சக்தி உற்பத்தி திட்டத்திற்கான விலையை மேலும் குறைத்து, புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 1 -- 10 கிலோ வாட் வரை தயாரிக்கும், யூனிட் அமைக்க, 1 கிலோ வாட்டுக்கு, 60 ஆயிரம் என்ற விகிதத்தில் நிர்ணயித்துள்ளது; இதில், 30 சதவீதம் மானியமாக தரப்படும்.அதேபோல், 11- 100 கிலோ வாட் வரை உற்பத்தி செய்யும் புராஜெக்டுக்கு, 1 கிலோ வாட்டுக்கு, 55 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயம் செய்துள்ளது. இதற்கும், 30 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அரசு மானியம் தருவதுடன், மூன்றாண்டு வரை அந்த புராஜெக்டை பராமரிப்பதும், ஒப்பந்ததாரர்களின் பொறுப்பு என, குறிப்பிட்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கு பயன்படும் இன்வெர்ட்டர், பேட்டரி களுக்கு ஐந்தாண்டுகள் வரை உத்தரவாதம் உள்ளது.வீடுகள், அப்பார்ட்மென்டுகள், கூட்டுறவு சங்கங்கள், கிளப்புகள், அறக்கட்டளைகளும், இந்த மானியத்தை பெறலாம். வியாபார நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மானியம் கிடையாது; ஆனால் அவர்கள், வருமான வரி கட்டும் போது,…
