செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

மின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி?

மின்சார கட்டணத்தில் நூதனமான முறையில் மோசடி?

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒருவர் 200 யூனிட்டுகள் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் உள்ள 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5 என்ற வீதத்தில் ரூ.150 அத்துடன் நிலையான கட்டணம் ரூ.20 சேர்த்து மொத்தமாக ரூ.170 வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதுவே, ஒருவர் 510 யூனிட்டுகள் உபயோகித்தால், முதல் 100 யுனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் 101-200 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.1.5க்கு பதிலாக ரூ.3.50ஆக அதிகரிக்கும். அப்படிப்பார்த்தால் 101-200 யூனிட்டுகளுக்கு ரூ.350 என்று கணக்கில் கொள்ளப்படும். 201-500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.4.60 என்ற வீதத்தில் ரூ.1,380, 500-510 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டின் விலை ரூ.6.60 என்ற வீதத்தில்…
Read More
5 ஆயிரம் வகை உணவுகளை  சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ !

5 ஆயிரம் வகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொள்ளும் மோலி ரோபோ !

இதுவரை நமக்கு அறிமுகமான சமையல் செய்யும் ரோபோக்கள் எல்லாம் வெறும் உதவியாளர் ரகங்கள் தான். அதிகபட்சம், மது காக்டெயில்கள், காபி, தேனீர் பானங்களை கலந்து தரும் அளவுக்குதான் அவற்றுக்கு அறிவு உண்டு. ஆனால், பிரிட்டனை சேர்ந்த, 'மோலி' என்ற ரோபோ வித்தியாசமானது.ஆறு ஆண்டுகளுக்கு முன், உணவகங்களுக்கான ரோபோவாக மோலியை உருவாக்கி வருவதாக அதன் படைப்பாளிகள் அறிவித்தனர். தற்போது, ஒரு குடும்பத்திற்கு தேவையான சமையல்களை செய்யும் திறனுடன், வீடுகளுக்கு செல்ல மோலி தயாராகியிருப்பதாக, 'மோலி ரோபோடிக்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. மோலிக்காகவே மாடுலர் சமையல் அறை உருவாக்கப்படும். அந்த சமையலறையின் உத்தரத்தில் மோலியின் ஆக்டோபஸ் போன்ற ரோபோ கரங்கள் பொருத்தப்படும். அந்தக் கரங்கள் இடமும், வலமுமாக வேகமாக நகருவதோடு, நாலா பக்கமும் லாவகமாக அசையும் திறன் கொண்டவை. மோலியின் செயற்கை நுண்ணறிவு மூளை, கேமரா வழியேயும், அதன் விரல்களில் உள்ள உணரிகள் வழியாகவும் உணர்ந்து, உரிய இடத்தில் வைத்துள்ள பாத்திரங்கள், கரண்டிகள், உணவுப் பொருட்களை…
Read More
தலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் !

தலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் !

இந்துஸ்தான் யுனிலீவரின் சுதீர் சீதாபதி நிர்வாக இயக்குனர், தான் யுனிலீவர் நிறுவனத்தில் கற்றுக்கொண்ட நிர்வாக பாடங்கள் பற்றி எழுதியுள்ள புத்தகம் CEO FACTORY.இந்த புத்தகத்தில் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் வரலாறு, மார்க்கெட்டிங் விளம்பரத்துறை, விற்பனை பொருள்கள், செலவு மேலாண்மை , மனிதவளம், நிறுவனத்தின் மதிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற பல்வேறு செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களைக் காணலாம். இந்திய கார்ப்பரேட் சந்தைக்கு இந்துஸ்தான் யுனிலீவர் வழங்கியது போல் அதிகமான தலைமை நிர்வாக அதிகாரிகளை வேறு எந்த நிறுவனமும் கொடுக்கவில்லை. அதனால்தான் இந்த புத்தகத்திற்கு தலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை CEO FACTORY என பெயர் வைத்திருக்கிறார். இந்துஸ்தான் யுனிலீவரின் வெற்றிக்கான மந்திரங்களை புத்தகம் எங்கும் காணலாம். பொதுவாக விளம்பரம் என்பது சந்தைப்படுத்தலின் கவர்ச்சியான பகுதியாகும். விளம்பரம் என்பது வணிக மேலாண்மையில் ஒரு பகுதி. வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனம். இந்நிறுவனம் ஆண்டொன்றுக்கு சுமார் 3,500 கோடி ரூபாய்களை விளம்பரத்தில் செலவழிக்கிறது. யூனி லீவரின் மொத்த செலவினங்களில் 15…
Read More
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

இந்தியாவின் முன்னணி பொதுகாப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் முன்னணி பிராந்திய கிராமப்புற வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு கிராமவங்கியுடன் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சில்லறை தயரிப்புகளை அதன் விரிவான நெட்வொர்க் மூலம் .தமிழ்நாடு முழுவதும் விநியோகத்திற்காக- கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்த தருணத்தில் பேசிய  பி.சி.காண்ட்பால், எம்.டி மற்றும் சி.இ.ஓ, எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கூறியது" பிராந்தியத்தில் எங்கள் தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விநியோகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் பயணத்தில் தமிழக கிராமவங்கியுடனான எங்கள் கூட்டணி ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளை இன்னும் பரவலாகக் கிடைக்கச் செய்வதற்கான எங்கள் நிலையான முயற்சி ஆகும். இந்த கூட்டணி மூலம் தமிழ்நாட்டில் காப்பீடுகள் மேலும் அதிகரிக்கும் என்று நங்கள் நம்புகிறோம். ” அவர்மேலும்கூறுகையில், "இந்த கூட்டு நகர்ப்புறங்களில் ஊடுருவலை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் அடுக்கு II  மற்றும் அடுக்கு III நகரங்களுக்கும் உதவும், மேலும்…
Read More
இனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. !

இனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. !

  வேலைவாய்ப்பை தேடி அலையும் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு ஓர் நற்செய்தியை அறிவித்துள்ளது. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில், உங்கள் விவரங்களை பதிவுசெய்தால் போதும். தனியார் நிறுவனங்களிலிருந்து, உங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் உங்கள் வீடுதேடி வரும். இன்றைய போட்டி நிறைந்த காலக்கட்டத்தில், அரசுத் துறைகளில் வேலை பெறுவது என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு கனவாகி விட்டது. அப்படியே கிடைத்தாலும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. இந்நிலையில், இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்ப தனியார் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளன. இதனால் வேலைதேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களுக்கு அதிகமாக விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆனால், எந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்ற தகவல்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்பை நழுவவிட வேண்டியுள்ளது. இனி அந்தக் கவலை தேவையில்லை. #நேஷ்னல்கேரியர்சர்வீஸ் : ✅ வேலை இல்லா இளைஞர்களுக்காக, மத்திய அரசு 'நேஷ்னல்…
Read More
வாழ்க்கை வாழ்வதற்கே! தட்டிக் கழிக்க அல்ல !!

வாழ்க்கை வாழ்வதற்கே! தட்டிக் கழிக்க அல்ல !!

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் !... 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 5 அல்லது 10 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும். குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும். பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுய தொழில் செய்து வருகின்றனர்.சுய தொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை.பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும் !!. அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில்…
Read More
10 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி! டொயோட்டா உருவாக்குகிறது !!

10 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி! டொயோட்டா உருவாக்குகிறது !!

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா மோட்டார் நிறுவனம் ஸ்திரமான பேட்டரியை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. இது பேட்டரியில் ஓடும் வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். அத்துடன் இதை சார்ஜ் செய்ய 10 நிமிடம் போதுமானது என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பேட்டரியில் ஓடும் வாகனங்களுக்காக லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்துகின்றன. இதில் நிலவும் பாதக அம்சங்களை ஆராய்ந்து குறைகளை போக்கும் வகையில் புதிய பேட்டரி உருவாக்கத்தில் டொயோட்டா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறுகிய தூரம் பயணிப்பதற்கு, விரைவாக சார்ஜ் ஆகும் வகையில் புதிய பேட்டரியை இந்நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஸ்திரமான பேட்டரி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முதலில் மாதிரி வடிவத்தை அடுத்த ஆண்டு இந்நிறுவனம் வெளியிடும். இந்த பேட்டரியானது வழக்கமான லித்தியம் அயன் பேட்டரியை விட சிறப்பாக செயல்பட கூடியதாக இருக்கும்.…
Read More
ஆதார் அடிப்படையில் உடனடி இ-பான் கார்டு பெறுவது எப்படி ?

ஆதார் அடிப்படையில் உடனடி இ-பான் கார்டு பெறுவது எப்படி ?

2020-ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் பொது மக்களுக்காக அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதில் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து மக்களின் வீடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பல முக்கியமான ஆவணங்களை நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டு முடிவுக்கு வருவதால், அமைச்சகங்களால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களுடன் முக்கிய முயற்சிகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவின் மூலம் பார்க்கலாம் என்று நிதி அமைச்சகம் தனது ட்வீட்டர் பதிவில தெரிவித்துள்ளது. இதில் பான் பெறுவதற்கான செயல்முறையை இன்னும் எளிமையாக்குவதற்கு, குறிப்பாக கொரோனா பாதிப்பு காலத்தில், உடனடி பான் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி மே 28, 2020 அன்று, ஆதார் எண் அடிப்படையிலான இ-கேஒய்சியைப் பயன்படுத்தும் உடனடி நிரந்தர கணக்கு எண் (பான்) வசதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More
பத்திரிகைகளின் பி.டி.எப்.களை அனுப்புவோர் மீது நடவடிக்கை ?

பத்திரிகைகளின் பி.டி.எப்.களை அனுப்புவோர் மீது நடவடிக்கை ?

பெரும்பாலானோருடைய காலை நேரம், நாளிதழ்களுடன்தான் துவங்கும். காலத்துக்கு ஏற்ப, நாளிதழ்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இ - பேப்பர், ஆன்லைன் மூலமாக பத்திரிகைகளை, செய்திகளை பார்க்கும் வசதி, வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.அனைத்து மொழிப் பத்திரிகைகளும், இந்த மாற்றங்களை செய்து, உடனடி செய்திகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், பி.டி.எப்., எனப்படும் கையடக்க ஆவண முறையில், பத்திரிகைகள் உலா வருகின்றன. அதாவது, பத்திரிகைகளை, 'போட்டோ' எடுத்து அல்லது பக்கத்தை அப்படியே, 'டவுன்லோடு' செய்து, பகிர்ந்து கொள்வதாகும்.இந்த சட்ட விரோத பகிர்வு, சமூக வலை தளங்களில் நடந்து வருகிறது. 'கொரோனா' வைரஸ் பரவல் காலத்தில், இவ்வாறு பத்திரிகைகளின் பி.டி.எப்., பகிர்ந்து கொள்வது அதிகரித்தது. பத்திரிகைகளை வாங்குவதால், வைரஸ் தொற்றி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர்.'பத்திரிகைகளால் வைரஸ் பரவாது; அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்புடன்தான், பத்திரிகைகள் வீடுகளை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என, பத்திரிகை நிறுவனங்கள் தெரிவித்தன. அதற்காகவே, பத்திரிகைகளை அச்சடிக்கும் இயந்திரத்தில் வைத்தே துாய்மைப்படுத்தி, 'பேக்'…
Read More
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மின்னணு வடிவத்தில் மாற்றம் !

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை மின்னணு வடிவத்தில் மாற்றம் !

தேர்தல் ஆணையம் (EC) புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை மின்னணு வடிவத்தில் மாற்ற ஆர்வமாக உள்ளது. அதாவது, விமான பயணத்தின் போது, காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மிண்ணனு மூலம் காண்பிக்கும்  இ- போர்டிங் பாஸ் போன்ற ஒரு முறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்த விரும்புகிறது. தேர்தலின்போது வாக்குச்சாவடியில் வாக்காளர்களை அடையாளம் காண வேண்டியது கட்டாயமாகும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் புகைப்பட வாக்காளர்கள் அடையாள அட்டை மூலம் அடையாளம் காணப்படுவார்கள். எனவே, வாக்காளார்கள் தங்கள் அடையாள அட்டையை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வது முக்கியமாகும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஆதார், டிரைவிங் லைசன்ஸ் போன்ற  மாற்று புகைப்பட அடையாள ஆவணத்தைக் காட்டலாம். டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பெறுவது?  இந்த வசதியைப் பெற, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட்ட செல்பேசி எண் (அ) மின்னஞ்சல் முகவரியை வாக்காளார் பதிவு அதிகாரியிடம்…
Read More