இந்த கொரோனா நமக்கு உடல் ரீதியான பாதிப்பையும் மட்டுமல்ல நிதி நிலையிலும் நிறைய நெருக்கடியை கொடுத்துச் சென்று உள்ளது. கடந்த ஆண்டைப் போன்று தற்போது யாரும் கோலகலமாக திருமணங்கள் செய்வதில்லை, திருமண கூட்டங்கள், திருமண பயணங்கள் குறைந்துள்ளது என்றே கூறலாம். இந்த விளைவால் நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது. ஆடம்பர திருமணங்கள் காணாமல் போக வாய்ப்புள்ளதா வாங்க தெரிஞ்சுக்கலாம்.
நம் ஊரைப் பொறுத்த வரை திருமணம் என்றாலே படு சிறப்பாக கொண்டாட வேண்டிய விஷயமாக மக்கள் பார்க்கின்றனர். பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை திருமணத்திற்காக அந்தஸ்துக்காக செலவு செய்வது அதிகமாகி வருகிறது. திருமணம் என்றவுடன் மாளிகை மாதிரி மண்டபத்தில் இருந்து, பயணம் செய்ய விமான டிக்கெட்டுகள், இரவு விருந்து என்று பணத்தை தண்ணியாக செலவழித்து வருகிறார்கள். சில பேருக்கு தங்களுடைய கனவு இடங்களில் வைத்து திருமணம் செய்யும் ஆசை கூட இருக்கிறது. இவ்வளவு செலவுகள் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டாலும் இவையெல்லாம் எதற்காக என்று பார்த்தால் திருமணம் என்ற ஒற்றைச்சொல்லுக்கு மட்டுமே. ஆனால் தற்போதைய கொரோனா காலகட்டம் அவற்றை எல்லாவற்றையும் தற்போது மாற்றி உள்ளது. அதிகபட்ச தேவைகளை பயன்படுத்திய இந்திய திருமணங்கள் எல்லாம் தற்போது குறைபட்ச தேவைகள் நிறைவேறினால் போதும் என்று நினைக்கத் தொடங்கி விட்டனர்.
இந்த லாக்டவுன் மக்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து விட்டது. மேலும் திருமண கூட்டங்களை கூட்டுவது குறித்த அச்சுறுத்தல்களையும் உண்டாக்கி உள்ளது. இதனால் மக்கள் திருமண மண்டபங்களை புக் பண்ணி திருமணம் செய்வதை தவிர்த்து ஆன்லைனிலே திருமணம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். சிலர் ஒரு சில உறவினர்களை வைத்து வீட்டிற்குள்ளேயே திருமணத்தை முடித்து விடுவதும் உண்டு. கல்யாணத்திற்கு பொண்ணு, மாப்பிள்ளை மற்றும் ஆசிர்வதிக்க இரண்டு பேர் இருந்தால் போதும் என்று நினைக்கத் தொடங்கி விட்டனர். ஏன் இப்படி கொழுத்த திருமண கொண்டாட்டங்களை நாம் தவிர்க்க வேண்டும். ஏன் திருமணத்தில் அதிகமாக பணம் போடக் கூடாது. இந்த கொரோனா காலத்தில் செலவுகளை இழுத்து வைத்துக் கொண்டால் என்னவாகும், வாங்க தெரிஞ்சுக்கலாம்.
கொரோனா வைரஸ் நமக்கு சுகாதாரத்தை கற்பித்து கொடுத்ததை விட நிறைய வாழ்க்கை பாடங்களையும் நமக்கு புகட்டி சென்றுள்ளது. அது தான் சேமிப்பு. நிதி நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும், அநாவசியமாக செலவுகளை தவிர்க்க வேண்டும் என்று இந்த கொரோனா தொற்று நமக்கு கற்பித்து உள்ளது. நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் இந்த கொரோனா நமக்கு ஒரு பொருளாதார நெருக்கடியை இட்டுச் சென்று உள்ளது. எனவே எதிர்காலத்தில் ஒவ்வொரு இந்திய குடும்பமும் இந்த பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளிக்க முடியும். எனவே ஆடம்பரமான திருமண கொண்டாட்டங்களை தவிருங்கள். அது உங்க வீட்டு திருமணமாக இருந்தால் கூட ஆடம்பரமாக செய்வதை தவிருங்கள். குறைந்த பட்ச திருமணங்களை ஊக்குவியுங்கள்.
நிறைய பேருக்கு இயற்கை எழிலுடன் கூடிய இடங்களில் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். நீண்ட பயணம் மேற்கொண்டு வெளியூர்களில், ஹோட்டல் ரிசார்ட் போன்றவற்றில் தங்கி திருமணத்தை காண வேண்டியிருக்கும். ஆனால் இந்த கொரோனா கால கட்டத்தில் இந்த மாதிரியான சூழல் பாதுகாப்பானது கிடையாது.
நிறைய இந்திய மக்கள் இங்கிலாந்து, பாங்காக் போன்ற வெளி நாடுகளிலும், ராஜஸ்தான், கோவா, கேரளா போன்ற இயற்கை எழில் சூழ்ந்த மாநிலங்களும் திருமணம் நடைபெற ஏதுவான சூழலாக மக்களால் விரும்பப்பட்டது. ஆனால் தற்போது இது போன்று நாடு கடந்தோ பயணம் மேற்கொண்டோ திருமணத்தை நடத்துவது, திருமணத்திற்கு போவது போன்றவை பாதுகாப்பு கிடையாது. இது உங்களுக்கு தொற்றுநோய் ஆபத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பயணம் சார்ந்த திருமண ஏற்பாடுகள், திருமணத்திற்கு செல்வது போன்றவற்றை தவிருங்கள்.
பெரிய வீட்டு திருமணம் என்றாலே அங்கே கோலாகலத்திற்கு இடமில்லாமல் இருக்காது. அரண்மனை போன்ற மண்டபங்களில் இருந்து, விருந்து வரிசை வரை ஏன் மணப்பெண், மணமகன் ஆடை அலங்காரங்கள், மணமேடை அலங்கரிப்பு என்று எல்லாத்திலையும் பணம் விளையாண்டு இருக்கும். இந்த மாதிரியான ஆடம்பர திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இதில் யாருக்கு தொற்று இருக்கிறது இல்லை என்பது தெரியாது. எனவே இது போன்ற திருமண கூட்டங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்காலத்தில் முடிந்த வரை முக்கியமான குடும்ப உறுப்பினர்களை வைத்து திருமணம் செய்வது நல்லது. பாதுகாப்பும் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே இனி பெரிய திருமண விழாவில் இருந்து தள்ளி இருங்கள். இது ஒரு சமூக விலகல் மட்டுமல்ல. உயிர் காக்கும் நடவடிக்கையும் கூட என்கிறார்கள் மருத்துவர்கள்