செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் ? மாற்றுவது நன்மை பயக்குமா?

இந்திய தொழிலாளர் நலச் சட்டங்கள் ? மாற்றுவது நன்மை பயக்குமா?

1948 ஆம் ஆண்டு வருட குறைந்தப் பட்ச ஊதியச் சட்டம் ஒரு திருப்பு முனைச் சட்டமாகும். இச்சட்டம், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்குவதை உறுதி செய்கிறது. இந்திய பொருளாதாரம் கொரோனா பொது முடக்க நிலையோடு போராடி வருவதால், ஆயிரக்கணக்கான நிறுவனங்களும், தொழிலாளர்களும் எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளன. இதனை சமாளிக்கும் வகையில், சில மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொடங்கியுள்ளன. உத்திர பிரேதேசம்,மத்திய பிரேதேசம் குஜராத் ஆகிய மூன்று பாஜக ஆளும் மாநிலங்கள் தொழிலாளர் நலச்சட்டங்களில் சில முக்கிய திருத்தங்களை அறிவித்தது. அதிலும், குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட உத்திரபிரேதேசம், அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களும் அடுத்த மூன்று வருடங்களுக்கு தற்காலிகமாக அமல்படுத்தப்படாது என்று வெளிப்படையாக அறிவித்தது. இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் (ராஜஸ்தான்/பஞ்சாப்) மற்றும் பிஜேடி (ஒரிசா) ஆட்சி செய்யும் மாநிலங்களும் தொழிலாளர் சட்டங்களில் சிறு திருத்தங்களை அறிவித்தன. அந்தந்த மாநிலங்களில் பொருளாதார…
Read More
உலக வரலாற்றில் முதல் ஊரடங்கு ! மருத்துவ வரலாறு !!

உலக வரலாற்றில் முதல் ஊரடங்கு ! மருத்துவ வரலாறு !!

கோவிட்-19-க்கு தடுப்பூசியோ சிகிச்சை மருந்தோ இல்லாத நிலையில் தனிமைப்படுத்துதல், தனிமைக் கண்காணிப்பு மட்டுமே இந்தப் பெருந்தொற்றுக்குத் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இது நமக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம், ஆனால் முந்தைய நூற்றாண்டுகளில் அதிகம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு தீர்வாகவே இது இருந்திருக்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் கலை, இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் 17ஆம் நூற்றாண்டு. அப்போதுதான் கறுப்பு மரணம் எனும் பிளேக் நோய் பரவல், இத்தாலியில் அதிகரித்தது. உலக அளவில் கொள்ளைநோய்கள், பொது சுகாதாரப் பாதுகாப்பு என்றவுடன் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பிளேக்தான். வரலாற்றில் பிளேக் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையே இதுவரை அதிகம். இந்தப் பின்னணியில் முதன்முறையாக ஒரு மருத்துவ நெருக்கடி நிலைக்கு ஊரடங்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஹெண்டர்சன், 'Florence under Siege, Surviving Plague in an Early modern city' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மறுமலர்ச்சிக் காலம், நவீன…
Read More
தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?

தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?

இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது எப்படி? கடந்த ஓராண்­டாக சிறப்­பாக செயல்­பட்டு வரும் திட்­டங்­களில், தங்க ஈ.டி.எப்., திட்­ட­மும் ஒன்­றா­கும். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து இது­வரை இந்த திட்­டத்­தில், 2,414 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, ’ஆம்பி’ வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளின் படி, இத்­திட்­டத்­தில் ஏப்­ரல் மாதத்­தில், 731 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதுவே, இதற்கு முந்­தைய மார்ச் மாதத்­தில், 195 கோடி ரூபாய் இந்த திட்டத்­தி­லி­ருந்து வெளியே­றி­யுள்­ளது.இது குறித்து, மியூச்­சு­வல் பண்டு நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: கடந்த, 2011ம் ஆண்­டி­லி­ருந்தே இந்த திட்­டம் சிறப்­பாக செயல்­பட்டு வரு­கிறது. மிக­வும் பாது­காப்­பான இந்த திட்­டத்­தில், கடந்த ஏப்­ரல் மாதத்­தில் கொரோனா பாதிப்­பு­க­ளை­யும் மீறி அதிக முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதற்கு முக்­கிய கார­ணம், பிற நிதி சந்­தை­கள் மற்­றும் திட்­டங்­களில் கடு­மை­யான ஏற்ற தாழ்­வு­கள் காணப்­பட்­டது. இந்­நி­லை­யில்,…
Read More
இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு !

இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு !

கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப் படுகின்றன.இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்கவேண்டும் என அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை கேட்டுக்கொண்டன. இதனால் ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியது. இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும்…
Read More
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி !

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா நிதியுதவி !

உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்கு அமெரிக்கா 5.9 மில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 45 கோடியே 14 லட்சத்து 9 ஆயிரம் சுகாதார நிதியுதவி வழங்கியுள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு,பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு சிகிச்சை, அத்தியாவசிய பொதுச் சுகாதார செய்திகளைப் பரப்புதல், கரோனா நோயாளிகளைத் தடம் காணுதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றுக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் கரோனா உதவித்தொகையின் ஒரு பகுதியாகும் இது, இதில் 1.4 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவுக்கு மருத்துவ உதவியாக அமெரிக்கா 20 ஆண்டுகளாக அளித்து வரும் தொகையில் உள்ளடங்கியதாகும் என்று அமெரிக்கா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசுத்துறை மற்றும் அமெரிக்க பன்னாடு வளர்ச்சி முகமை தற்போது 508 மில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக மருத்துவம், மனிதார்த்த மற்றும் பொருளதார மேம்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளது. இது தவிர அரசு சாரா சமூக நல அமைப்புகளுக்கு உலகம் முழுதும் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராட நிதியுதவி…
Read More
சீன ரஷ்ய எல்லையிலுள்ள சூஃபென்ஹேயில் கொரோனா தொற்று அதிகரிப்பு ?

சீன ரஷ்ய எல்லையிலுள்ள சூஃபென்ஹேயில் கொரோனா தொற்று அதிகரிப்பு ?

இன்றுவரை அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக அளவில் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூஃபென்ஹேயில் கொரோனா மீண்டும் பரவத் துவங்கி உள்ளது. சீனாவில் இன்று மட்டும் புதிதாக 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,500 ஆகி உள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் சீனாவில் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. சீன ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள சூஃபென்ஹேயில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அது மற்றொரு வூகானாக மாறி வருவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.கொரோனாவின் பிறப்பிடமான வூகானில் கொரோனா கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டாலும், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ள சீனர்களிடம் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தவிர, கொரோனா…
Read More
மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ? எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி ?

மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ? எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி ?

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி. * கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை. * மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி. * தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம். * பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம். * ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும். * கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம். * அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை. * ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி. * 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை…
Read More
பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்க பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன.பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, மோபெட்களும் மோட்டாரைஸ்டு சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய வாகனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. உற்பத்தி பணிகள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பவர்டு டு வீலர் சிட்டம் பைரெர் மொபிலிட்டி குழுமம் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் துவங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் 3 முதல் 10 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன. பஜாஜ்…
Read More
ஊடரங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி உறுதி

ஊடரங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி உறுதி

கரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தொழில்களை மீண்டும் முழுவீச்சில் தொடங்குவதற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று தொழில்துறை நிறுவனங்களுக்கு கட்காரி உறுதி அளித்துள்ளார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நிதி சார்ந்த முடிவுகள் குறித்து தெரிவித்தார்.குறித்த கால கடன்கள் மற்றும் தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கான பணி மூலதனக் கடன்கள் ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது என்றும் கட்காரி தெரிவித்தார். சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் பற்றி பேசிய கட்காரி, அவர்களின் சிரமங்கள் குறித்தும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் அரசு அறியும் என்றும் கூறினார். அரசு மற்றும் வங்கித் துறையுடன் இணைந்து,…
Read More
சீனாவை விட்டு வெளியேறும் பெரிய நிறுவனங்கள்! ஜப்பான் நிவாரண நிதி !!

சீனாவை விட்டு வெளியேறும் பெரிய நிறுவனங்கள்! ஜப்பான் நிவாரண நிதி !!

கொரோனா' பிரச்னையால் உலகமே துவண்டு போய் கவிழ்ந்து கிடக்கிறது. நித்தம் நித்தம் ஒரு பொருளாதார பிரச்னை உருவாகி கொண்டிருக்க, இப்போது, சீனாவுக்கு எதிராகவே சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன. 'கொரோனா' பிரச்னையால், உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டியிருக்கிறது. நியூயார்க், மும்பை, பெய்ஜிங் உட்பட பல்வேறு பங்கு சந்தைகள், கடும் வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்தி, சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம் வாங்கி குவித்தன. இதனால், அந்த நிறுவனங்கள், சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீனாவுக்கு எதிராக சில காய்களை நகர்த்த துவங்கியிருக்கிறது ஜப்பான். உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக சீனா விளங்குகிறது. உலகின் அதிகமான உணவு பொருட்களை அதுதான் உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த ஆண்டு, சீனா 'கொரோனா' வைரஸ்களை ஏற்றுமதி செய்து விட்டது என்று உலக…
Read More