நீங்கள் நினைப்பதுபோல் இந்திய நாட்டின் ராணுவப் பணி பிறநாட்டின் ராணுவத்தினரைப் போன்று எளிதானதல்ல.இந்திய ராணுவத்தைப் பற்றி. தெரிந்துகொள்ளுங்கள். உலகின் வலிமையான ராணுவங்களான.அமெரிக்கா சீனா, ரஷ்யாவே அஞ்சும் சீதோஷ்ண நிலையும்,போரினால் ஏற்பட்ட சேதத்தை விட இயற்கை. சீதோஷ்ண மாறுபாடுகளால் ஏற்பட்ட வீரர்களின் உயிரிழப்புகள் தான் அதிகம்.கரணம் தப்பினால் மரணம்.என்ற நிலையில்…உலகின் மிகப் பெரிய மலைச் சிகரங்களின் மேல் உள்ள போர்க்களத்தையும் . அதற்கான பயிற்சியையும் கொண்ட. திறமையான பலம் வாய்ந்த உலகின் மிகப்பெரிய ராணுவம் நமது இந்திய ராணுவம்தான். … ஐ.நா.சபையே….பல போர்களில் இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளன.. நம் இந்திய ராணுவம் முன்னிலையில் நின்று ஐ.நா. படைகள் வெற்றி பெற உதவியிருக்கிறது..
இந்திய ராணுவம்… தெரிந்துகொள்ளுங்கள். .
அந்நிய சக்திகளின் காசுக்காக. பதவி வெறிக்காக. இங்குள்ள அரசியல்வாதிகள் பிரிவினைவாதிகள், கம்யூனிச நக்சல்கள், தீவிரவாதிகளின் உதவியுடன் செய்யும். தீவிர விஷமமான பிரச்சாரத்தால் மக்களில் சிலர் ராணுவ வேலையை எண்ணற்ற வேலைகளில்….அதுவும் ஒரு சாதாரண வேலை என்பது போல நினைக்கின்றனர்….நமது ராணுவத்தினர் மிக உயரமான பனிப்பிரதேசங்களுக்கு (Hi Altitude) போய் வருவது மிக சுலபமான வேலை போல் நினைக்கிறார்கள்,…..இந்த பகுதிகள் நீங்கள் நினைப்பது போல் ஊட்டி, கொடைக்கானல், குலுமணாலி, சிம்லா போல் அல்ல. …. இரண்டு நிமிடம் தெரிந்துகொள்ளுங்கள். .
அங்குள்ள தட்பவெட்பநிலை மைனஸ் 40 (Minus 40 degree) வரை சென்றுவிடும்….. அங்கு நினைக்கும் நேரத்தில் சென்று வரமுடியாது…. அதுபோல் அங்கிருந்து நினைத்த நேரத்தில் விடுமுறை எடுத்து ஊருக்கெல்லாம் வர முடியாது….. பனி பிரதேசங்களுக்கு போகும் முன்னர் 90 நாட்கள் அடிவாரத்திலிருந்து நமது உடல்நிலையை அந்த தட்பவெட்பத்திற்கு பழக்குவார்கள் (acclimatization), அங்கே ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சமாளிப்பது, வீரர்கள் தங்களது உடல்நிலையை எப்படி பாதுகாப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும், பின்பு மருத்துவ தகுதி பெற்றபின் மிக உயரிய பனிப்பிரதேசங்களுக்கு அனுப்புவார்கள்.
அங்கே அவர்கள் 90 நாட்கள் மட்டுமே பணிபுரிவார்கள், நாம் அங்கே சென்றுவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் ? சூரிய வெளிச்சம் 10மணிக்குமேல் வரும்.. 3 மணிக்கு இருட்டிவிடும். நமக்கு வேண்டிய அனைத்து சத்தான விலையுர்ந்த உணவுப்பொருட்கள் இருக்கும்,ஆனால் சாப்பிட முடியாது, குளிரில் பசியெடுக்காது, மதியம் மட்டும் வேண்டா வெறுப்பாக உயிர்வாழ்வதற்காக சாப்பிடுவார்கள் மிக உயரம் என்பதால் காற்றின் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும், மூச்சு திணறல் ஏற்படும் தினமும் டெண்டை சுற்றி குழி தோண்டி நிலக்கரியை போட்டு எரிப்பார்கள், இருந்தும் குளிர் அடங்காது, தீ எரியும் இடத்தில வாளிகளில் பனியை போட்டு தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும், அதை பாட்டில்களில் நிறைத்து முன்பகுதியில் இரண்டு பாட்டில், பின் பகுதியில் இரண்டு பாட்டில் கட்டிக்கொண்டு படுக்கவேண்டும், இதன் சூடு பத்து நிமிடம் கூட இருக்காது, அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சென்று சுடுதண்ணீரை பாட்டிலில் மாற்றி வந்து படுக்கவேண்டும்…. இது தான் இரவுமுழுவதும் டைம் பாஸ்.
சவப்பெட்டி போல் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்லீப்பிங் பேக்கில் தூங்கவேண்டும், பனிப்பாறைகளை வெறும் கண்களால் பார்த்தால் கண் எரியும், கலர் பிளைண்ட்னஸ் வந்துவிடும். 11 மணிக்குமேல் வெயில் அடிக்கிறது என்று வெயிலில் நின்றால் உடம்பில் கொப்புளங்கள் வந்துவிடும், மதியம் ஒரு மணிக்குமேல் சுழல் காற்று வீசும், அது உடலில் படும்பொழுது உயிர்போய்விடும் வேதனை, சில சமயம் இந்த சுழல்காற்று பனிச்சரிவை ஏற்படுத்திவிடும், பனிச்சரிவு மணிக்கு 80 கிமீ வேகத்தில் நகரும். தப்பிப்பது என்பது இயலாத காரியம், அங்கே பணிபுரியும்போது ஏதாவது உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் சண்டிகருக்கோ அல்லது டெல்லிக்கோ அவர்களை அழைத்து வர முடியாது. வெப்பநிலை மாறும்போது ஸ்ட்ரோக் வந்து இறந்து விடுவார்கள்….. ஏதாவது காயங்கள் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும், சில பள்ளமான இடங்களில் பனிக்கு கீழ் தண்ணீர் இருக்கும்….. கால்தவறி அதனுள் விழுந்துவிட்டால் உயிர் பிழைப்பது மிக கடினம்.
அதிகப்படியான பனி என்பதால் உடல் கருத்துவிடும். 90 நாட்கள் பனிமுடிந்த பின் மலை அடிவாரத்திற்கு சென்று 30 நாட்கள் கீழ இருக்கும் தட்பவெட்பத்திற்கு உடலை பழக்கவேண்டும் (de acclimatization) பின்பு விடுமுறை கிடைக்கும். ஏழு மாதங்களுக்கு வீரர்கள் குடும்பத்தில் என்ன நடந்தாலும் விடுமுறைக்கு வரமுடியாது. இங்க பணிபுரிந்து விட்டு வந்த பிறகு பலவித உடல் உபாதைகள் ஏற்படும், சிலருக்கு நினைவு தப்பிவிடும். ஒரு ராணுவவீரன் நாட்டை காக்க இவ்வளவு தியாகங்கள் செய்யவேண்டியிருக்கிறது.
இங்கே உட்கார்ந்துகொண்டு பேசுவது மிகவும் சுலபம், அங்கிருக்கும் சூழலை அனுபவித்தவர்களுக்கு தெரியும் ,அதன் வேதனை என்னவென்று, ஒருமுறை அங்கே சென்றுவிட்டு வந்தபின். உடல் பழைய நிலைக்கு வர பல வருடங்கள் பிடிக்கும், சர்வ சாதாரணமாக எல்லாரும் என்ன சொல்றாங்கன்னா ?அதான் கைல துப்பாக்கி இருக்கும் நல்லா சுட வேண்டியது தானேன்னு ? அதாவது 1996, 2005 சீனா இந்தியாவுக்கிடையே ஒரு ஒப்பந்தம் போட்டிருககாங்க.அதாவது எல்லையில் இருந்து 2 கி மீ தூரம் வரை ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாதுன்னு.
முதல் ஒப்பந்தம் 1962ல் நடந்த போருக்கு பின் 1972ல் வாய் வழியாக போடப்பட்ட ஒப்பந்தம். அதன்பின் 1993-ம் ஆண்டு முறையாக இரண்டு நாட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், இந்தியா – சீனா ஆகிய இரண்டு நாட்டு வீரர்களும் எல்லையில் எதிரி நாட்டு வீரர்களை தூண்டும் விதமாக செயல்பட கூடாது. அதேபோல் உங்களுக்கு எதிராக படைகளை பயன்படுத்துவேன், போர் தொடுப்பேன் என்று கூற கூடாது.
அந்த ஒப்பந்தம் ஒரு நாட்டின் வீரர்கள் தவறுதலாக அல்லது தெரிந்தே எல்லையை கடந்து சென்றால், அவர்களை தாக்காமல் திரும்ப அனுப்ப வேண்டும். மீண்டும் எல்லையில் சென்று அவர்களை விட வேண்டும். பேச்சுவார்த்தை மூலமே இதை சரி செய்ய வேண்டும் என்று இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அதன்பின் 1996ல் முழுமையான இன்னொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் அந்த ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளுக்கும் எல்லையில் சின்ன சின்ன சண்டை வந்தால் உடனே படைகளை வாபஸ் பெற்று அமைதியை நிலைநாட்ட வேண்டும். எல்லையை சுற்றி 2 கிமீ தூரத்திற்கு இரண்டு நாட்டு ராணுவமும் துப்பாக்கி, குண்டுகள், வெடிபொருட்களை பயன்படுத்த கூடாது. சண்டை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட இரண்டு நாடுகளும் துப்பாக்கிகளை பயன்படுத்த கூடாது. ஒரு கேள்வி இந்த ஒப்பந்தம் காரணமாகத்தான் எல்லையில் துப்பாக்கிகளை பயன்படுத்தாமல் குச்சிகளை, கம்புகளை வைத்து இரு நாட்டு வீரர்களும் தாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் உயிர் போகும் அளவிற்கு தாக்கப்பட்ட போதும் கூட ஒப்பந்தத்தை மதித்து வீரர்கள் துப்பாக்கிகளை எடுக்கவில்லை.
அதனால தான் கைகளால் தாக்குதல் நடத்துவார்கள்.நம்ம சினிமாலெல்லாம் பார்த்திருப்போம்.ஒரு கம்புல இரும்பு வேலிய சுத்தி வைச்சிருப்பாங்க.அந்த கம்பி வேலிய வைச்சு தான் தாக்கி இருக்காங்க.அதனால காயம் பட்டாலும் காப்பாத்தறது கஷ்டம்.
இந்த உண்மையை நீங்கள் எல்லோரும் தெரிஞ்சுக்கணும்ணு தான் விழிப்புணர்விற்காக இந்த பதிவு.முடிந்தளவு தமிழ்நாட்டிலுள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் பிரித்தாளும் அரசியலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சென்று சேரும்வரையில் பகிருங்கள் !