பிளிப்கார்ட் அமேசான்  நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

பிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி !

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மூலம் பொருட்களை வாங்குவதில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர், செல்போன் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்வது எளிதாகவும், விலை குறைவாகவும், டோர் டெலிவரி செய்யப்படுவதுமே ஆன்லைன் ஆர்டர் குவிய காரணமாக உள்ளது. இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நாள்தோறும் ஆன்லைனில் ஆர்டர்களை பெற்று பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனமும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகமாகி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்தது. அதேபோல் ஜியோ பிரெளசர் அறிமுகமாகி கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ் ஆகிய பிரெளசர்களுக்கு ஆப்பு வைத்தது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கி அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More
உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!!

உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!!

தற்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 4ஜி தொடங்கி தற்போது 5ஜி என தனது எல்லையை பரப்பிக்கொண்டுவரும் இந்த சுழலில் இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது.ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது. இந்த பகுதி முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது மற்றும் சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில்…
Read More
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்  இனி அதிரடி சலுகைகள் தொடருமா?

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இனி அதிரடி சலுகைகள் தொடருமா?

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக முறை பிரபலமாகி இருக்கிறது. இந்த வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் களம் இறங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.அதே நேரத்தில் உள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. ஆனால், உள்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதாவது சில குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே விற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்கின்றன. எனவே அந்த நிறுவனத்தில் மட்டுமே குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் சில பொருட்களுக்கு இஷ்டத்துக்கு விலை வைக்கிறார்கள். மேலும் உற்பத்தி நிறுவனங்களையும் தங்களுக்கு மட்டுமே அந்த பொருளை தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.இதுபோன்ற காரணங்களால் உள்ளூர் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களுக்கு…
Read More
ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது ?

ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது ?

ஆன்லைன் விற்பனை தொடர்பாக லோக்கல் சர்க்கிள் என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆன் லைன் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவீத வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் போலியான பொருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர்.ஆனலைன் விற்பனையில் ஒவ்வொரு ஐந்து பொருட்களுக்கும் ஒன்று போலியாக உள்ளது என கூறப்படுகிறது இதில் அதிகமானவை ஒப்பனை மற்றும் வாசனை திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும். குறிப்பாக நறுமணம் மற்றும் ஒப்பனை பொருட்கள் 35 சதவீதம் போலியானவை என்றும் 22 சதவீதம் விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் என்றும், 5…
Read More
ஆன்லைன் ஆதிக்கத்தால் ஆட்டம் காணும் ‘மால்’ கலாச்சாரம்

ஆன்லைன் ஆதிக்கத்தால் ஆட்டம் காணும் ‘மால்’ கலாச்சாரம்

ஒரு காலத்தில் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் பல்பொருள் அங்காடி வைத்திருக்கும் அண்ணாச்சிக் கடைகள்தான் பிரபலம். அதன்பிறகு, பொருளாதார வளர்ச்சி காரணமாக முதலீடுகளும் வருமானமும் அதிகரிக்க, மெல்ல பொருள்கள் வாங்குவது மால் கலாச்சாரத்துக்கு மாறியது. மால்கள் வந்தபின் நகரங்களில் இருந்த அண்ணாச்சிக் கடைகளை எல்லாம் காலி செய்தன. இப்போது அதே நெருக்கடி மால்களுக்கும் வந்திருக்கிறது. இ-காமர்ஸ் துறை நாளுக்கு நாள் ஆக்டோபஸ் போல தன் கரங்களை நீட்டி வர்த்தக உலகை ஆக்கிரமித்து வருகிறது.அதிரடி ஆஃபர்கள், விளம்பரங்கள் எல்லாமே மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இதனால். நினைத்துப் பார்க்க முடியாத விலையில் பொருள்கள் என ஆசையைத் தூண்டி புதுப்புது வாடிக்கையாளர்களை இழுத்துக்கொண்டே இருக்கின்றன. ஒருமுறை இ-காமர்ஸ் தளத்துக்குள் போய் பார்த்துவிட்டால் நிச்சயம் பொருளை வாங்காமல் வெளியே வரமாட்டீர்கள். அந்த அளவுக்கு ‘டேட்டா அனாலிட்டிக்ஸ்’ மூலம் வாடிக்கையாளர்களின் மனநிலையை அலசி ஆராய்ந்து வைத்திருக்கிறது. இதனால் மால்களில் கூட்டம் குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பொருள்கள் வாங்குவது குறைந்தது…
Read More
ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்?

ஸ்மார்ட்போன் மூலம் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்?

ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தினால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலைமை நம் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் உள்ளது. இந்நிலையில் பிரபல வங்கிகள் கூடிய விரைவில் ஸ்மார்ட் போன் மூலம் பணம் எடுப்பது பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளன. அதாவது ஏடிஎம்களில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர்.குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் எடுப்பதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. ஸ்மார்ட் போன் வாயிலாக ஏடிஎம்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் யூபிஐ செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தெரியும் கியூ ஆர்(QR) குறியீட்டினை யூபிஐ மூலம் ஸ்கேன் செய்து அதற்கேற்ற பாதுகாப்பான பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகுவதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தற்போது முழு வீச்சில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் இதற்கு…
Read More
ஜியோ களமிறங்கிய “வாட்ஸ் ஆப்” டியூஷன் திட்டம் !

ஜியோ களமிறங்கிய “வாட்ஸ் ஆப்” டியூஷன் திட்டம் !

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அண்மையில் தனது ஜியோபோன் 2 என்ற பியூட்சர் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த சில நிமிடத்திலேயே அனைத்து யூனியட்களும் விற்று முடிந்தது. இந்த புதிய ஜியோபோன் 2 இல் வாட்ஸ் ஆப் இணக்கம் மற்றும் யூடுப் இணக்கம் என பலதரப்பட்ட சேவைகள் ஜியோ பயனர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! பயிற்சி பிரச்சாரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஜியோ நிறுவனம் வாட்ஸ் ஆப் உடன் இணைந்து இந்திய மக்களுக்கு ஜியோபோன் 2 இல் மொபைல் மெசேஜிங் தளம் பற்றிய பயிற்சி வழங்கும் பிரச்சாரத்தை நேற்று துவங்கியுள்ளது. சிம்பிளா சொன்ன மக்களுக்கு வாட்ஸ் ஆப் பற்றிய டியூஷன் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்து முயற்சி செய்துள்ளது. அக்டோபர் 9 அக்டோபர் 9 ஆம் தேதி, வாட்ஸ் ஆப் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து…
Read More
தொழில் சிறப்பான உயர்வை அடைய செய்யும் கன்டெனட் விளம்பரம்!

தொழில் சிறப்பான உயர்வை அடைய செய்யும் கன்டெனட் விளம்பரம்!

சிறு, குறு தொழில் முனைவோரோ! பெரிய தொழில் அதிபரோ! யாராக இருந்தாலும் விளம்பரம் கொடுத்தால்தான் வியாபாரம் செழிக்கும் என்பது உண்மை. இதை கன்டென்ட் விளம்பரம் வாயிலாக உலகம் முழுவதும் கொண்டு சென்று உங்கள் தொழிலை மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்கிறது .தயாரிப்பு பொருட்களை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க முடியாவிட்டால் முன்னேற்றம் என்பது எப்படி கிடைக்கும். சிறுதொழில் முதல் வளர்ந்த தொழில்கள் வரை அனைத்தும் விளம்பரங்களால்தான் முன்னேற்றம் அடைந்துள்ளது. புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் முழுமையாக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது.அதுவும் சரியான முறையில் விளம்பரங்கள் செய்யாவிடில் உங்கள் பணம் வீண்தான். அப்படிப்பட்ட சரியான விளம்பரம்தான் விவேகம் செய்திகளின் கன்டென்ட் விளம்பரங்கள்.பல கோடி வாசகர்களை கொண்டு டிஜிட்டல் உலகில் தனக்கென்று தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டுள்ள விவேகம் செய்திகளின்…
Read More
ஆன் லைன் வர்த்தகராக ஆசையா – இந்த பத்தும் இருந்தால் போதும்

ஆன் லைன் வர்த்தகராக ஆசையா – இந்த பத்தும் இருந்தால் போதும்

ஆன் லைன் வர்த்தகம் உலகத்தில் புதிய புதிய அவதாரங்களை எடுத்து வருகிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், உலக வணிக மேலாதிக்கவாதிகளோடு மல்லுக்கு நிற்கிறது. போட்டி போட்டு அறிவிக்கும் அதிரடிச் சலுகைகளும், தள்ளுபடிகளும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் ஆன் லைன் வர்த்தகம் ஒரு டிரென்ட்டாக பரிணாமம் பெற்றுவிட்டது. ஆன்லைன் வர்த்தகத்துக்கு இணைய வழியில் மேதாவித்தனங்கள் தேவை தான். ஆனால் ஆரம்பத்தில் அள்ளி இறைக்கும் அளவுக்கு ஆடம்பரம் தேவையில்லை. உங்களுக்கு ஒரு நல்ல வலைத்தளம்(வெப்சைட) கிடைத்து விட்டால் நீங்கள் வெற்றிகரமான வர்த்தகர்தான். விமர்சனங்கள் தேவைநீங்கள் தயாரித்து வழங்கும் பொருட்களின் தரத்தை வாடிக்கையாளர்களால் ஆய்வு செய்ய வேண்டும், அதன் மீது உள்ள முறையீடுகளையும் உறுதி செய்ய வேண்டும். உங்கள் பிராண்டுகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு ஆரோக்கிய விமர்சனங்கள் உங்களுக்கு உதவும். உங்கள் தயாரிப்புகளுக்கு நம்பகமான, வசதியான மற்றும் மேம்பட்ட வழிகளைக் கண்டறிய வேண்டும். உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களை…
Read More
கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

கிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ?

தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது. சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள். முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு…
Read More