எஸ்.பி.ஐ வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ?

எஸ்.பி.ஐ வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம் ?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, தனது ஏடிஎம் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு தொகை, டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. அதிலும் இவ்வங்கியின் இணைய சேவைகளான மொபைல் வங்கி பரிவர்த்தனைகளுக்கு இவ்வங்கி மாதாந்திர வரம்புகளை முற்றிலுமாக நீக்கியுள்ளது.இதன் மூலம் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் இனி வரம்பற்ற சேவையை பெற முடியும் என்றும், முந்தைய மாதத்தில் 25,000 இருப்பு தொகை வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்சம் 40 பரிமாற்றங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மாதத் சராசரியான இருப்பு தொகை 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 3,000 இருப்பு தொகையில் 50 சதவிகிதம் பராமரிக்காதவர்களுக்கு, 10 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியும், இதே 75 சதவிகிதம் இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு 15 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்…
Read More
பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

பணமதிப்பு நீக்கத்தின் பின்விளைவு !நொறுங்கும் சூரத் வைரக் கோட்டை!

வைரச் சந்தையில் 25-30 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.சிறு நிறுவனங்கள் 20 சதவீதம் வரை பணியாட்களை குறைத்துவிட்டன.பொருளாதார மந்தநிலையின் பாதிப்பில் சிக்கியுள்ள மற்றொரு துறையான வைரச் சந்தை 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. சூரத்தைச் சேர்ந்த பெரிய வைர ஏற்றுமதி நிறுவனமான ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளன.தீபாவளி முன்னிட்டு நடக்கும் விற்பனையின்போதும் போதிய அளவு விற்பனையாவது கடினமாகவே இருக்கும் என்றும் நிலைமையை சமாளிக்க மிகவும் எளிதாக இருக்காது எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.இந்த மந்தநிலையை கருத்தில் கொண்டு சிறிய வைர வியாபார நிறுவனங்கள் பணியாட்களைக் குறைப்பது, பணி நேரத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. "25-30 சதவீதம் வைர சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பாலிஷ் செய்யப்பட்டு ஏற்றுமதியாகும் வைரங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் சீனாவும். இந்த இரு நாடுகளிடையே நிலவும் வர்த்தக மோதல், இறக்குமதி வரியில் நிலையற்ற தன்மையை தக்கவைக்கிறது"…
Read More
ஸ்விக்கி,ஸொமாட்டோ வேண்டாம்! விலகிய 1200 உணவகங்கள்?காரணம் இதுதானாம்?!

ஸ்விக்கி,ஸொமாட்டோ வேண்டாம்! விலகிய 1200 உணவகங்கள்?காரணம் இதுதானாம்?!

சமீப காலத்தில் மதரீதியான சில சிக்கல்களை ஸொமாட்டோ, ஊபர் போன்ற உணவு ஆப் நிறுவனங்கள் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய தேசிய உணவு கழகத்தை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட உணவகங்கள் ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற உணவு டெலிவரி சேவைகளிலிருந்து  விலகியுள்ளன. உணவு அப்ளிகேசன்களினால் கஸ்டமர்களுக்கு சலுகைகள் நிறைய கிடைத்தாலும் உணவகங்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. உணவு சேவை அப்ளிகேசன்கள் ஒன்றன்பின் ஒன்றாக பல உருவானதால் பலரும் வெவ்வேறு அப்ளிகேசன்களை உபயோகிக்கின்றார்கள். அதனால் உணவகங்களும் பல்வேறு ஆப் நிறுவனங்களோடு தங்களை இணைத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி இணைத்து கொள்ளும்போது கஸ்டமர்களை ஈர்க்க பல்வேறு சலுகை விலைகளை வழங்க வேண்டியதிருக்கிறது. அதுவும் ஒவ்வொரு அப்ளிகேசனிலும் ஒவ்வொரு சலுகை. இதனால் உணவுப்பொருட்கள் சலுகை விலையில் மட்டுமே விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஸொமாட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் கோல்டு மெம்பர்ஷிப் என்னும் திட்டத்தை…
Read More

இந்தியப் பொருளாதார நெருக்கடி – விற்பனை சரிவு, ஆட்குறைப்பு பார்லே-ஜி கவலை ?

இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தியாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று தெரிய வருகிறது, ஜிஎஸ்டி வரி அமலாகும் முன்னால் இருந்த வரி விதிப்பில் கிலோவுக்கு 100 ரூபாய் பிஸ்கட்டுகளுக்கு 12-14% வரியே இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட பின், கிலோவுக்கு 100 ரூபாய் விலையுடைய பிஸ்கட் 18% ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ளது. குறைவான விலையுடைய பிஸ்கட்டுக்கு கலால் வரி இல்லாமல்,…
Read More

சென்னையில் 24,000 சதுர அடியில்அமேசான்.இன் விநியோக நிலையம் !

அமேசான்.இன் தனது மிகப்பெரிய விநியோக நிலையத்தை தமிழகத்தில் தொடங்குவதாக  அறிவித்திருந்தது. சென்னையில் உள்ள புதிய நிலையம்அமேசானுக்கு அதன் கடைசி மைல் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், நகரம் முழுவதும் விரைவான விநியோகங்களை உறுதி செய்யவும் உதவும். டெலிவரி நிலையங்கள்அமேசான் லாஜிஸ்டிக்ஸை திறனை நிரப்பவும், வாடிக்கையாளர் ஆர்டர்களின் வளர்ந்து வரும் அளவை ஆதரிக்க அமேசானின் விநியோக திறன்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கவும் உதவுகின்றன.நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்களில் தனது விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதாக அமேசான் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், அமேசான்.இன் 120 க்கும் மேற்பட்ட பிரபலமான மற்றும் விநியோக சேவை கூட்டாளர் நிலையங்களையும், மாநிலம் முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட ‘எனக்கு இடம் உள்ளது’ கூட்டாளர்களையும் கொண்டிருக்கும்.டெலிவரி நெட்வொர்க்கின் இந்த 2x வளர்ச்சியானது அமேசான் தமிழ்நாடு முழுவதும் சிறியநகரங்களுக்குள் மேலும் ஊடுருவி, மாநிலத்தின் 1200 க்கும் மேற்பட்ட பின் குறியீடுகளில் நேரடிவிநியோக இருப்பைக்…
Read More
டிஜிட்டல் பண பரிவர்த்தனை!இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் ! சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை!இந்தியாவில் 80 ஆப்ஸ்கள் ! சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள 80 ஆப்ஸ்கள் இருந்தாலும் கூட, இரண்டே இரண்டு ஆப்ஸ்களை கொண்டுள்ள சீனாவுடன் போட்டி போட முடியவில்லை.கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ரொக்கப் பண பரிவர்த்தனையை முற்றிலும் போக்கும் வகையில், பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் எளிதான  டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள யுபிஐ வசதி கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில் பேடிஎம், அமேசான், கூகுள் பே என 80க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்ஸ்கள் செயல்படுகின்றன.இதுதவிர, பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதளத்திலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் முழுமையாக கொண்டு வரப்பட உள்ளது. இவ்வளவு இருந்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் சீனாவுடன் இந்தியா போட்டி போட இன்னும் வெகு தூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சீனா டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.  அங்கு இந்தியாவைப்…
Read More
கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் பணம் செலுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்

கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் பணம் செலுத்துகிறீர்களா? கவனமாக இருங்கள்

உ.பி மாநிலத்தில் தில்லி அருகே உள்ள நொய்டா நகரில் கிரேட் இண்டியன் பேலஸ் ஷாப்பிங் மால் உள்ளது. இங்கு தினமும் பலர் வந்து செல்வர். இங்கு உள்ள பர்கர் கிங் உணவு விடுதியில் சுமித் என்ற சேல்ஸ் மேனேஜர் ஏடிஎம் பணத் திருட்டுல் ஈடுபட்டு கைதாகியுள்ளார். ஸ்கிம்மிங் என்ற பழைய முறையை கையாண்டு கிட்டத்தட்ட 500 கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து ஐம்பது லட்சம் ரூபாய்வரை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக ஸ்கிம்மிங் முறையில் கார் மெஷினில் இந்த மென்பொருள் பொருத்தப்படும். பணம் செலுத்த காட்டை உள்ளே நுழைத்ததும் கார்ட் தகவல்கள் அனைத்தையும் இது வாங்கிக்கொள்ளும். மேலும் கஸ்டமர் அழுத்தும் 4 டிஜிட் பின் நம்பரையும் கார்ட் மெஷினில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவேற்றிக் கொள்ளும். இந்த தகவல்களைக் கொண்டு ஒரிஜினல் கார்ட் போலவே அச்சு அசலாக போலி கார்ட் தயாரிக்கப்படும். இதனைக் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஏடிஎம்-ல் அவர்களது வங்கிக் கணக்கில்…
Read More
மனித உயிருடன் விளையாடும் ஆன்லைன்  மருந்து விற்பனை ?

மனித உயிருடன் விளையாடும் ஆன்லைன் மருந்து விற்பனை ?

ஸ்மார்ட்போன்களின் பெருக்கத்தால் எல்லாமே இணையவழி பரிவர்த்தனை என்றாகிவிட்டது. ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல், பதிவும் செய்யாமல், கண்காணிப்புக்கும் உட்படாமல் ஒரு தொழிலை புரியலாம் என்ற அளவுக்கு இந்தியா உள்ளது. ஆம், இணையதளம் மூலமான மருந்துகள் வர்த்தகத்துக்கு இது நாள் வரை எந்த ஒரு நிறுவனமும் முறையான பதிவை செய்யவில்லை. ஆன்லைன் மருந்து வர்த்தகத்துக்கு (இ-பார்மசி) தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக மருந்து விற்பனையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மிகப் பெரிய கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை அரசின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர். இதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காத அரசு, இணையதள மருந்து விற்பனைக்கு உரிய கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31-ம் தேதிக்குள் வகுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்ததாகத் தெரிகிறது. அதுவரையில் நாடு முழுவதும் ஆன்லைன் மூலமான மருந்து விற்பனைக்கு தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும்…
Read More
டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம். !

டெலிவரி வாகனங்களில் பிளிப்கார்ட் செய்யவிருக்கும் அதிரடி மாற்றம். !

பிளிப்கார்ட் நிறுவனம் அதன் டெலிவரி வாகனங்களில் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் முன்னணி நிறுவங்களாக பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இ-காமர்ஸில் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும், இந்த இரு நிறுவனங்களே இந்தியாவின் பிரபலமான நிறுவனங்களாக இருக்கின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும், அவர்களின் வீட்டின் வாசலுக்கே கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகின்றன. இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் மட்டும் அதன் டெலிவரி வாகனத்தில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, அந்நிறுவனம் பயன்படுத்தி வரும் டெலிவரி வாகனங்களில், 40 சதவிகிதம் மின்சார வாகனங்களைப் பயன்பாட்டுக் கொண்டு வரவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகயை வருகின்ற 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யவிருப்பதாக அது இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக, எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக…
Read More
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வரம்பு தளர்வு !

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வரம்பு தளர்வு !

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. அத்துடன் முதலீட்டு வரம்பை ரூ. 25 கோடியாக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும். இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சலுகையாக அமைந்துள்ளது.இதற்கு முன்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை ரூ. 10 கோடியாக இருந்தது.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் முதலீடுகளுக்கு 1961-ம் ஆண்டைய வருமான வரிசட்டம் 56 (2) பிரிவின் கீழ் வரி விலக்கு அளிப்பதற்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து 7 ஆண்டுகள் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இத்தகைய வரிச் சலுகை கிடைக்கும் என முன்னர் இருந்த விதிமுறை தற்போது 10 ஆண்டுகள் வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதேபோல ஸ்டார்ட் அப் நிறுவனமாக பதிவு செய்த நிறுவனத்தின்…
Read More