23
Sep
தற்போது பல துறைகளில் நைட்-ஷிப்ட் பொதுவான ஒன்றாக உள்ளது. சொல்லப்போனால் பலரது வாழ்க்கையே நை-ஷிப்ட்டில் தான் போகிறது. ஆனால் சில ஊழியர்கள் டே-ஷிப்ட், நைட்-ஷிப்ட் என்று மாறி மாறி வேலை செய்வதால், பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள். அனைவரும் தூங்கும் இரவு நேரத்தில் வேலை செய்வதால், இயற்கைக்கு எதிராக உடலின் செயல்பாடுகள் இருப்பதால், அதன் விளைவாக பல அபாயகரமான நோய்களால் பாதிக்கப்பட நேரிடுகிறது. நைட் ஷிப்ட் வேலைகள் உடலின் இயற்கை கடிகாரத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதால், நாம் நினைத்திராத பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வைக்கிறது. நீங்கள் நைட்-ஷிப்ட்டில் வேலை செய்பவரா? அப்படியானால் உங்களுக்கும் இப்பிரச்சனையெல்லாம் வர வாய்ப்புள்ளது. சரி, இப்போது நைட்-ஷிப்ட்டில் வேலை செய்வோரைத் தாக்கும் அபாயகரமான பிரச்சனைகள் எவையென்று காண்போம். சர்க்கரை நோய் ஜப்பானிய ஆய்வு ஒன்றில் நைட்-ஷிட் வேலை பார்ப்போரில் 50 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோயின் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 16 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வோருக்கு…
