ஆரோக்யம்

சர்க்கரை நோய்க்கு சுரைக்காயை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறையும்..!

சர்க்கரை நோய்க்கு சுரைக்காயை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறையும்..!

சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத ஒரு கோளாறு. இப்பிரச்சனையை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது சற்று கடினம் தான். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ அறிவியலில், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவை மேம்படுத்தவும் உதவும் சில வழிகள் உள்ளன. அதில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பான நன்மை அளிக்கும் ஒரு காய் தான் சுரைக்காய். சர்க்கரை நோய் இருப்பவர்கள் சுரைக்காயை சாப்பிட்டால் அல்லது சுரைக்காய் ஜூஸ் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். சுரைக்காயில் 92 சதவீதம் நீர்ச்சத்து மற்றும் 8 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது. சுரைக்காய் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின்…
Read More
நவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பாதிப்பு ? விஞ்ஞானிகள் அதிர்ச்சி !

நவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பாதிப்பு ? விஞ்ஞானிகள் அதிர்ச்சி !

நவீனத் தொழில்நுட்ப உலகில் அனைவரும் இயற்கை, சுற்றுச் சூழலைக் காட்டிலும் செல்போனுடன் தான் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே ஸ்மார்ட் போன்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் பல.செல்போன்களால் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், வெளியுலகு தொடர்பு இல்லாமல் கணினி, செல்போன் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் உலகில் 220 கோடி பேருக்குப் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மருத்துவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காஸ் சீசா, உலகெங்கிலும் உள்ள 220 கோடி மக்கள் ஒருவித கண் பிரச்சனையால் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.பல நாடுகளில் வயதான மக்கள்தொகை மற்றும் கண் மருத்துவத்திற்கான போதிய அணுகல், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், இந்த எண்ணிக்கை அதிகளவு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உட்கார்ந்த தன்மை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்நிலை…
Read More
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்..?

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்..?

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2, டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும். நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாட்கள் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் 4 முதல் 7 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும்…
Read More
கண் பார்வை பற்றி தெரியாத  உண்மைகள்!

கண் பார்வை பற்றி தெரியாத உண்மைகள்!

டெக்னாலஜி வளர்ந்த நிலையில் மொபைல் போன்களில் பலவிதமான கேமராக்களின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. எவ்வளவு மெகா பிக்சல் கொண்ட கேமராக்கள் வந்தாலும் மனித கண்களுக்கு சமமான விஷுவல் அது கொடுக்காது மனிதக் கண் ஆனது வெறும் ஒரு இன்ச் அளவு கொண்டது.மேலும் நமது கண்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேலான நிறங்களைப் பிரித்தறியலாம். நமது கண்களின் மொத்த பார்வைத்திறனை மெகா பிக்சல்(MP) அளவிற்கு கணக்கெடுத்தால் 576 மெகாபிக்சல் ஆகும். இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகிப்பதால் மெலடோனின் என்னும் திரவம் கண்களில் சுரப்பது நிறுத்தப்படும் இதனால் தூக்கமின்மை கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது மேலும் ஸ்லீப்பிங் டிப்ரஷன் எனும் நோய்க்கு ஆளாகலாம். நமது கண்களை ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாள சுமார் 17 முறை சிமிட்டுகிறோம் நாம் பொதுவாக நமது கண்களை ஏன் சிமிட்டுகிறோம் என்று நினைத்துப் பார்த்ததுண்டா? கண்களில் உள்ள அழுக்குகள் தூசிகள் வெளியேற்றுவதற்காகவே கண் தன்னிச்சையாக சிமிட்ட படுகிறது.…
Read More
பாலில் ஒரு பூகம்பம் ! பூச்சிக்கொல்லி தீவனத்தால் புற்றுநோய் வரும் !!

பாலில் ஒரு பூகம்பம் ! பூச்சிக்கொல்லி தீவனத்தால் புற்றுநோய் வரும் !!

தாய்ப்பால் இன்றி கூட குழந்தைகள் வளர்ந்திருக்கலாம். ஆனால் பசும்பாலை ருசிக்காமல் எவரும் குழந்தை பருவத்தை கடந்திருக்க முடியாது. பிறப்பு தொட்டு இறப்பு வரை பாலும், பால் பொருட்களும் நம் முக்கிய உணவுகளாக தொடர்கின்றன. அமுதாய் கிடைத்த இப்பால் சில நேரங்களில் ஆபத்தை தரும் என்றால், அது எத்தனை அதிர்ச்சி. அப்படியொரு பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது அக்.18 ல் வெளியான மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வறிக்கை. 2018 மே முதல் டிசம்பர் வரை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 1,103 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை வளர்ப்போர், பால்காரர், விற்பனையாளர், நிறுவனங்களின் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் 6,432 மாதிரிகள் எடுக்கப்பட்டன.பகுப்பாய்வு கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தி, பாலின் தரத்தை அறிய அதில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட 13 வகை பொருட்களின் அளவு கணக்கிடப்பட்டது. அதில் அனுமதிக்கக்கூடியஅளவை விட சில…
Read More
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்க  வெந்தயம் போதும்.!

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்க வெந்தயம் போதும்.!

நீரிழிவைக் கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பைக் கூட்ட இது ஒண்ணு போதும்... கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, தொடரும் இன்சுலின் ஊசி இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா என்கிறீர்களா? இருக்கவே இருக்கு இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இயற்கை தந்த அற்புத கொடை வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்தபிறகு வெந்தயத்தின் கசப்பை பிடிக்காதவர்கள் முளைகட்டி சாப்பிடுங்கள்.இன்சுலின் சுரப்பு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு கட்டுக்குள் வரும்.இன்சுலின் ஊசியுடன் போராடுபவர்கள் வெந்தயத்தையும் எடுத்தால் இன்சுலின் சுரப்பு அபரிமிதமாக அதிகரிக்கும்.நீக்கமற நிறைந்திருக்கும் நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீரிழிவை இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும் என்பதும். சாப்பிடும் உணவு பொருள்கள் உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் தரும் வகையில் சர்க்கரையாய் மாற்றப் பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது.இந்த இன்சுலின் போதிய அளவு…
Read More
கோவைக்காய்  நீரிழிவு நோயாளிகளின்  சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.!

கோவைக்காய் நீரிழிவு நோயாளிகளின் சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.!

கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதைத்தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்டநேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது. தண்ணீர் அதிகம் அருந்தாமல் இருப்பது, உப்பு தன்மை அதிகமான நீரை, நீண்டநேரம் சிறுநீரை அடக்கி வைப்பது, மது பழக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரக கற்கள் உருவாகும். வாரத்தில் இருமுறை கோவைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள்,மலச்சிக்கல் பிரச்னை தீரும். உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்னை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவைக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.சர்க்கரை வியாதி ஒரு மனிதனின் பரம்பரை காரணமாகவும் மற்றும் அவனது தவறான உணவு பழக்கங்களாலும் ஏற்படும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில்…
Read More
வர்மக்கலை  மருத்துவத்தின் மகத்துவம்..! வர்மக்கலை ஆசான் பாமோ வெங்கடேசன் !

வர்மக்கலை மருத்துவத்தின் மகத்துவம்..! வர்மக்கலை ஆசான் பாமோ வெங்கடேசன் !

நம்மில் பலரும் பல வகையான நோய்களுக்காக பல மருத்துவரை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம், ஆனாலும் நோய் மட்டும் குணமான பாடில்லை.. முதலில் நோய் என்றால் என்ன? நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் கூட்டுக்கலைவையே நம் உடல் ஆகும், இதில் ஏதாவது ஒரு பூதத்தின் சக்தி குறையும் போது நம் உடல் நோயுறும்.உதாரணமாக நீர் சக்தி குறையும் போது, சிறுநீரக கல், ஹார்மோன், மூட்டுவலி, முதுகுத்தண்டு பிரச்சனை, பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.நோய் என்பது இரு காரணங்களால் ஏற்படலாம்.பரு உடலில் ஏற்படும் நோய்.பிராண உடலில் ஏற்படும் சக்தி குறைவால் ஏற்படும் நோய். வர்மக்கலை தத்துவப்படி நமக்கு பரு உடல் மற்றும் பிராண உடல் ஆகிய இரு உடல் உள்ளது, பிராண உடலில் ஏற்படும் சக்தி குறைபாடானது நம் பரு உடலில் நோயாக பிரதிபலிக்கிறது. மற்றும்,உணவுமுறை மாற்றத்தால் பரு உடலில் நோய் ஏற்பட்டு அது பிராண உடலில் சக்தி குறைவை…
Read More
அதிக இனிப்பு கொண்ட பானங்கள் விளம்பரம் செய்ய தடை ?

அதிக இனிப்பு கொண்ட பானங்கள் விளம்பரம் செய்ய தடை ?

உலக அளவில் 42 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் 20 வருடத்தில் 63 கோடியாக உயரும் என சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து சிங்கப்பூர் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதாவது அதிக இனிப்பு கொண்ட பானங்களை விளம்பரங்கள், பத்திரிகை, இணையதளம், வானொலி மற்றும் டிவி போன்றவைகளில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக இனிப்பு கொண்ட பானங்களின் விளம்பரங்களால் மக்கள் கவரப்பட்டு அதை சாப்பிடுகின்றார்கள்.இதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக , சிங்கப்பூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.மேலும் விரைவில் அதிக இனிப்பு கொண்ட பானங்களுக்கு கூடுதல் வரி அல்லது தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More
அப்பல்லோ கேன்சர் மையம் சார்பாக ரோஸ் தின கொண்டாட்டம்.!

அப்பல்லோ கேன்சர் மையம் சார்பாக ரோஸ் தின கொண்டாட்டம்.!

உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்துச் சொல்வதை வழக்கமாக நடத்தி வருகின்றனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகும் என்கிற நம்பிக்கையில் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ கேன்சர் மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா., நடிகர் சதீஷ், நடிகர் தர்ஷன்., நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் புற்றுநோய் மையத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரோஜா பூவைக் கொடுத்து பரிபூரணமாகக் குணமாகி வீடு திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.குறிப்பாக கனடா நாட்டைச் சேர்ந்த மெலிண்டா ரோஸ் என்கிற 14 வயது பெண் குழந்தையிடம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் சதீஷ், நடிகர் தர்ஷன்,நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் பேசினார்கள். அப்பல்லோ கேன்சர் மையம் சார்பாக ரோஸ் தினம் நிகழ்ச்சிகொண்டாடப்பட்டது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நோய் குணமாகும் என்கிற நம்பிக்கையிலும் வாழவேண்டும் என்ற எண்ணத்துடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில்…
Read More