சினிமா

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தினை தயாரித்து வரும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியை உங்கள் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த அதிரடி களியாட்டம் பெரிய திரைகளை ஒளிர செய்யும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ், 'சலார் - பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் டீசரை வெளியிட்டதிலிருந்து பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த அதிரடி பொழுதுபோக்கு திரைப்படத்திலிருந்து மேலும் கூடுதலான அம்சங்களை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அந்த டீசர் - பார்வையாளர்களுக்கு சலார்…
Read More
தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ள  ‘மார்கழி திங்கள்’ படக்குழு !

தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ள ‘மார்கழி திங்கள்’ படக்குழு !

மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளித்துள்ள 'மார்கழி திங்கள்' திரைப்பட குழுவினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளித்த சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்களுக்கு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன் அவர்கள் பாராட்டு அக்டோபர் 5 அன்று 'மார்கழி திங்கள்' திரையரங்குகளில் வெளியாகிறது.உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் 'மார்கழி திங்கள்' திரைப்பட குழுவினர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளனர். மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் அவர்களை இன்று சந்தித்த 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு சுசீந்திரன்,…
Read More
இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் !

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் !

தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் சி வி குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்கத்தில் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம். முதல் காட்சியை இயக்கி படத்தை துவக்கி வைத்தார் தயாரிப்பாளர்-இயக்குநர் சி வி குமார் தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர்-இயக்குநர் சி வி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். முதல் காட்சியை சி வி குமார் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று இனிதே தொடங்கியது. எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. இப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகராக அறிமுகம்…
Read More
இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும்  “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.   படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர்…
Read More
‘முசாசி’ படக்குழுவினரைப் பாராட்டிய  இலங்கை பிரதமர் !

‘முசாசி’ படக்குழுவினரைப் பாராட்டிய இலங்கை பிரதமர் !

பிரபுதேவா நடிக்கும் 'முசாசி' படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர் இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் 'முசாசி' படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார்.‌ ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில்…
Read More
‘கொலைச்சேவல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார் !

‘கொலைச்சேவல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார் !

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா தயாரிப்பில் வி ஆர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் 'கொலைச்சேவல்' பரபரப்பு நிறைந்த காதல் கதையான 'கொலைச்சேவல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளையும் வெற்றியும் பெற்ற 'லவ்' திரைப்படத்தை தொடர்ந்து ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது திரைப்படத்திற்கு 'கொலைச்சேவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரையும் இயக்குநர் பா ரஞ்சித் இன்று வெளியிட்டார். அறிமுக இயக்குநர் வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதைநாயகனாக நடிக்க, யூடியூப் குறும்படங்கள் புகழ் தீபா பாலு நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆகிறார். பால சரவணனும் அகரன் வெங்கட்டும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மிகவும் வலுவான எதிர்மறை வேடத்தில் இதுவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த…
Read More
நடிகர்கள் விமல், சூரி   ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

நடிகர்கள் விமல், சூரி ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

நடிகர்கள் விமல், சூரி நீண்ட நாட்களுக்கு பிறகு இணைந்துள்ள 'படவா' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் 'படவா' திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், 'கேஜிஎஃப்' புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர். சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர். 'படவா' ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அதன்…
Read More
‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு!

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு!

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: வரவேற்புரை வழங்கிய சுசீந்திரன் பேசியதாவது... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை ஒன்று சேர்த்து படம் தயாரிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. நடிகர் கார்த்தி பேசியதாவது... அனைவருக்கும் வணக்கம், பாரதிராஜா ஐயா அவர்களுக்கு பெரிய வணக்கம். மனோஜ் பாரதிராஜா இவ்வளவு சீக்கிரம் திரைப்படத்தை இயக்குவார் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு காரணமான‌ சுசீந்திரன் அவர்களுக்கு நன்றி. இளையராஜா…
Read More
கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநர் சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழா !

கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநர் சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழா !

கோபுரம் பிலிம்ஸ்,கோபுரம் சினிமாஸ் உரிமையாளர் G.N. அன்புசெழியனின் மகளும் கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநருமான சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழாவில் நடிகர் R. சரத்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி S. தாணு, நடிகர் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் S. கதிரேசன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, கட்டா குஸ்தி இயக்குநர் செல்லா, ராஜ்கமல் பிலிம்ஸ் டிஸ்னி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த நாளுக்கும் எதிர்கால திரைப்பட திட்டங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
Read More
சச்சின் டெண்டுல்கர், ‘800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!

சச்சின் டெண்டுல்கர், ‘800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், '800' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று படமாக ‘800’ உருவாகி இருக்கிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், '800' என்ற தலைப்பில் விளையாட்டு சார்ந்த பிரம்மாண்ட படமாக இதைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இந்தப் படத்தை புக்கர் பரிசு (2022) பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலகா இணைந்து எழுதியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் விழா செப்டம்பர் 5-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். வரலாற்று…
Read More