தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘கோட்’. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை இப்படத்திற்கு இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். மேலும், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் (காந்தி), களம் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே தாய்லாந்திற்கு தனது மனைவி (சினேகா) உடன் செல்லும் காந்தி, தனது மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் கடைசியில், அவனை காந்தி ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சனை என்ன? காந்திக்கு வில்லனாக ஜீவன் (விஜய் மகன்) மாறியது எப்படி? என்பதுதான் படத்தின் மீதி கதை. – Advertisement – நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றி வந்த விஜய் இந்தப் படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அனைவருக்கும் ஒரு கூஸ்பம்சாக இருக்கிறது. சிறிய வயது விஜயை காட்டிய டி-ஏஜிங் டெக்னாலஜியில் சில குறைபாடுகள் இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தில் விஜய் தன் நடிப்பால் அதை சரி செய்துள்ளார். தளபதி விஜயை, இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தில் மங்காத்தா அஜித் போல காட்ட முயற்சி செய்துள்ளார். நடிகர் மோகனை இப்படத்தில் வில்லனாக காட்டியது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நடிகை சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா முடிந்தவரை படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள். அதே போல் படத்தின் பாடல்கள் வெளியான போது சில விமர்சனங்கள் வந்தாலும், யுவனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது. -விளம்பரம்- மேலும், படம் குறித்த தகவல்கள் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில், அவை அனைத்தும் படத்தில் அப்படியே இருக்கின்றன. அதனால், படம் பார்ப்பவர்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்பா-மகன் சண்டையை திரைக்கதையில் சொல்ல நினைத்த இயக்குனர், அதில் சிறிது கவனம் செலுத்திருக்கலாம். அதாவது சண்டைக் காட்சிகளில், காந்தியுடன் மோதுவது அவரின் மகன் ஜீவன் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்ததை, SAT ஸ்குவாடில் பணிபுரியும் திறமை வாய்ந்த காந்தி கண்டுபிடிக்க மாட்டார் என்று சொல்வதில் லாஜிக்கே இல்லை. படத்தின் முதல் பாதி சிறிது மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதையில் இயக்குனர் அதை சரி செய்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் நடிகர் யோகி பாபுவின் கவுண்டர்கள் ரசிகர்களை சிரிக்க வைக்க தவறவில்லை. மற்றபடி திரைக்கதையில், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக கிளைமாக்ஸில் ஐபிஎல் போட்டியையும், திரைக்கதையையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

Read more at: https://tamil.behindtalkies.com/the-goat-movie-review-in-tamil/

 

Related posts:

யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..!
தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.!
அஃப்ரிஞ்ச் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது!
வ.கௌதமன் இயக்கி நடிக்கும் "மாவீரா" படத் தலைப்பு "மாவீரா படையாண்டவன்" என பெயர் மாறுகிறது.
’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் திரைப்படம்  'கான்ஸ்டபிள் நந்தன்’!
கோழிப்பண்ணை செல்லதுரை -- விமர்சனம்.!
சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' பத்திரிகையாளர் சந்திப்பு. !