சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்!

குழந்தைக் கண்ணனை ஒன்பான் மணிகளோடு ஒப்பிட்டுக் கொஞ்சும் “முத்தம் தூறும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் அன்னமையாவின் “முத்துகாரே யசோதா” என்ற தெலுங்குப் பாடலின் தமிழாக்கமாகும்.
புகழ்பெற்ற இந்தத் தெலுங்குப் பாடலைப் பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனைப் பாடகி சுவேதா மோஹன் பாடியுள்ளார். குழந்தைக் கண்ணனின் சிறுவயது துணிவுமிக்க செயல்களை அழகாக எடுத்துரைத்து, வரிக்கு வரி முத்தே மணியேயென்று கண்ணனை விளிக்கும் இப்பாடல் சுவைமிக்கது. வரிகளின் பொருள் மாறாமல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள “முத்தம் தூறும்” பாடலுக்குச் சாம் லாரன்ஸ் இசைக்கோர்ப்பு செய்துள்ளார். இப்பாடலின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியான நிலையில், பா மியூசிக் யூடியூப் தளத்தில் இப்போது இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இசைச் சீரோடைகளிலும் வெளியிடப்படும்

Related posts:

’கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின் ?

சரத்குமார்‍‍-அமிதாஷ் நடிக்கும் 'பரம்பொருள்' டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !

போரூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் டிரை ஐ சூட் சாதன தொகுப்பு ! அமைச்சர் D. ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். !!

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடுகிறார்!

நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் - உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

‘ஷாட் பூட் த்ரீ’-விமர்சனம்.!