சினிமா

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’ !

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’ !

புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றது. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன. இதற்கு ஒரு தீர்வாக வந்தவைதான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது. இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி…
Read More
இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது நிகர இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1447 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹2247 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 55% வளர்ச்சி கண்டிருக்கிறது.வரிக்கு முந்தைய இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1452 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹3057 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 111% உயர்ந்திருக்கிறது.செயல்பாட்டு இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹4016 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹4305 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 7% உயர்ந்திருக்கிறது நிகர வட்டி வருவாய், மார்ச்’23-ல் பதிவான ₹5508 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹6015 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 9% உயர்ந்திருக்கிறது கட்டணம் சார்ந்த வருவாய், மார்ச்’23-ல் பதிவான ₹914 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹970 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 6% உயர்ந்திருக்கிறது சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA),…
Read More
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’13’ படத்திற்கு  டப்பிங் பேசி தொடங்கிவைத்தார்!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’13’ படத்திற்கு டப்பிங் பேசி தொடங்கிவைத்தார்!

இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று (4.5.2024) 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார். படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, "'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை…
Read More
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'இங்க நான் தான் கிங்கு'. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மே 10 அன்று பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வினில்….எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தன் பேசியதாவது... கோபுரம் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமான 'வெள்ளக்கார துரை' எழுத்தாளரும் நான் தான். 10 வருடம் கழித்து அடுத்த வெற்றிப்படமான 'இங்க நான் தான் கிங்கு' படத்திற்கு எழுதியுள்ளேன். அன்புசெழியன் சாரிடம் கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது, உடனே எல்லாம் ஆரம்பித்துவிட்டது. என்னுடன் இக்கதைக்காக…
Read More
விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது.!

விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது.!

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்து அவரது தொண்டர்களை மீளாத் துயரில் ஆழ்த்தினார். அவரது மறைவுக்கு பல ஊர்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். இன்று வரையிலும் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது நினைவிடத்தை கேப்டன் கோயிலாக அவரது தொண்டர்கள் வழிபட்டு வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில்தான் அவரது நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது. அதாவது, கடந்த 125 நாட்களில் தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சென்றுள்ளனர். அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பசியாற இங்கு உணவும் கொடுக்கப்படுகிறது. அதனால், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவுச் சின்னமாக இதனை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அறிவித்து அதற்கான சான்றிதழையும் கொடுத்துள்ளது. இந்த விஷயம் விஜயகாந்தின் தேமுதிக தொண்டர்கள் மத்தியில்…
Read More
‘ஹரி ஹர வீர மல்லு பாகம்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

‘ஹரி ஹர வீர மல்லு பாகம்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

பவன் கல்யாண் நடிப்பில், மெகா சூர்யா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கரியரில் முதன்முறையாக 'ஹரி ஹர வீர மல்லு' என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் இதுவரை கண்டிராத கேன்வாஸில் இப்படத்தை தயாரித்துள்ளார். 17 ஆம் நூற்றாண்டில் நடக்கும் ஆக்‌ஷன் அட்வென்சர் கதை என்பதால் அதற்கேற்றவாறு சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்ற பிரம்மாண்டமான செட்களை சமரசமற்ற பிரமாண்டத்துடன் சர்வதேச தரமான தயாரிப்பு மதிப்புகளுடன் ஆடம்பரமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளனர். தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தின் புதிய அதிரடி அவதாரத்தை பெரிய திரையில் பார்த்து ரசித்து கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இரண்டு பாகங்களாக படம் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 'ஹரி…
Read More
நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'. இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. இதில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் எழுத்தாளர் ராசி அழகப்பன், "இந்தப் படத்தின் கதை ஆறு வயதில் எனக்கும் என் அப்பாவுக்கும் நடந்த ஒன்று. அதை படமாக்கிய இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நன்றி. சைக்கிள் கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலும் இதைப் பார்க்கலாம். எல்லோருமே சைக்கிள் ஓட்டியிருப்பீர்கள். அதனை நினைவுப்படுத்தும் வகையில் இந்தப் படம் இருக்கும். உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார். வசனகர்த்தா பிரபாகரன்,…
Read More
அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’!

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி அல்கெமிஸ்ட்’!

மௌனகுரு', 'மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது! திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல வசனங்கள் சமூகவலைதளங்களிலும் வைரலானது. இவரது அடுத்தப் படைப்பான ‘ரசவாதி - தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படம். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு…
Read More
நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!

ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான 'பில்லா' படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார். 'பில்லா' படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக இது உள்ளது. இப்போது, 'பில்லா' ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ​​​​ ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். ஜிபி என்டர்டெயின்மென்ட் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி 'பில்லா' படத்தை மீண்டும் வெளியிடுவதில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். "இந்தத் திரைப்படம் வெற்றிகரமான ரீமேக்குகளில் ஒன்றாக சினிமாத் துறையில்…
Read More
‘சூது கவ்வும் 2’ படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் ‘சூரு’ பாடல் வெளியீடு !

‘சூது கவ்வும் 2’ படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் ‘சூரு’ பாடல் வெளியீடு !

ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர் தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி வி குமார் தயாரிப்பில் எஸ் ஜே அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சூது கவ்வும் 2' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து 'மண்டைக்கு சூரு ஏறுதே' எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.ஏ ஆர் ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடலைப் பற்றி பேசிய இசையமைப்பாளர் எட்வின்,…
Read More