விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது.!

நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்து அவரது தொண்டர்களை மீளாத் துயரில் ஆழ்த்தினார். அவரது மறைவுக்கு பல ஊர்களில் இருந்து மக்கள் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். இன்று வரையிலும் சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது நினைவிடத்தை கேப்டன் கோயிலாக அவரது தொண்டர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில்தான் அவரது நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது. அதாவது, கடந்த 125 நாட்களில் தமிழகம் முழுவதும் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சென்றுள்ளனர். அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பசியாற இங்கு உணவும் கொடுக்கப்படுகிறது.

அதனால், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவுச் சின்னமாக இதனை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அறிவித்து அதற்கான சான்றிதழையும் கொடுத்துள்ளது. இந்த விஷயம் விஜயகாந்தின் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related posts:

அவனே ஸ்ரீமன் நாராயணா...அதிக திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். !

*திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான 'ஆஃப் தி ரெக்கார்ட்'டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!*

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், "படை தலைவன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டார் !!

நான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் ! நடிகை நயன்தாரா !!

மைத்ரி மூவி மேக்கர்ஸின் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!

மில்லியன் ஸ்டுடியோ வழங்கும் ‘மெட்ராஸ்- தி கனெக்டிங் த்ரெட்’ !

நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன்.! வசந்த் ரவி !!