சினிமா

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம் !

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம் !

சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும். திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் ஆனந்த், "கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு பெரும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து செய்து சமீபத்தில் முடித்துள்ளோம். சிறுவர்கள் முதல்…
Read More
விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’ செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !

விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’ செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே. மாணிக்கம் தயாரிப்பில் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் 'ரெட் ஃப்ளவர்' ஆக்ஷன் திரில்லர் படப்பிடிப்பு நிறைவு விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் 'ரெட் ஃப்ளவர்' செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரிக்கும் 'ரெட் ஃப்ளவர்' ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச மாற்றங்களின் பின்னணியில் ஒரு பரபரப்பான கற்பனை கதையை உருவாக்கி அதை 'ரெட் ஃப்ளவர்' என்ற பெயரில் ஆக்ஷன் திரைப்படமாக இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ பாண்டியன். இப்படத்தில் ‘கிழக்கு சீமையிலே’, ‘ராமன் அப்துல்லா’, ‘ஆச்சார்யா’ புகழ் நடிகர் விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். திரைப்படம் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசுகையில், "நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப‌ குழுவினரின் அயராத அர்ப்பணிப்பின்…
Read More
இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் ‘கூழாங்கல்’ தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ‘ஜமா’!

இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் ‘கூழாங்கல்’ தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ‘ஜமா’!

இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் 'கூழாங்கல்' தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி 'ஜமா'! பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக, இதுபோன்ற திரைப்படங்கள் நாடு மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டு வருகின்றன. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions, தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடக்கும்படி படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக்…
Read More
யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2 !

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2 !

யூ-டியூப் இசை தளத்தில் அகில இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களில் GOAT - இந்தியன் 2. இரண்டு பாடல்களையும் எழுதியவர் கபிலன்வைரமுத்து. நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் GOAT. இந்த படத்தின் இரண்டாவது பாடலாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் கடந்த வாரம் வெளியானது. பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் இதில் பயன்படுத்தப்பட்டது. நடிகர் விஜயும் பவதாரணியும் பாடிய இந்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை வருடும் இதமான பாடல் என்று இசை ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து calendar song என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இதில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த இரண்டு பாடல்களும் யூ டியூப் அகில இந்திய இசை வரிசையில் முதல்…
Read More
டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!

டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!

டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது! சமீபத்திய புரோமோ, இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் அதிரடி சண்டையை ரசிகர்களுக்குக் காட்டியுள்ளது. சூப்பர் வில்லன் சப்ரெடூத் மீண்டும் வால்வரினை எதிர்கொள்ளும்படி இந்த ஆக்‌ஷன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. டெட்பூல் கூறியது போல், நாங்களும் மிகப்பெரிய ரசிகர்கள்! புரோமோவை விட பல மடங்கு பிரம்மாண்டமாக நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வால்வரின்' ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
Read More
நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி, இணையற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கியவர் மற்றும் தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றவர். 'மங்காத்தா' படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் - த்ரிஷா - ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர்…
Read More
‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்". இயக்குநர் விஜய் மில்டன், " இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 'கருடன்', 'மகாராஜா' என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்". தயாரிப்பாளர் டி. சிவா, "படங்களின் வசூலை பொருத்தவரை தமிழ் சினிமா…
Read More
நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா…
Read More

Anna Nagar Celebrates with Joyalukkas New Showroom Opening !

 Joyalukkas, the world-renowned jeweller is delighted to announce the grand reopening of its brand new showroom in Anna Nagar, Chennai on 22nd June 2024. Known globally for its exquisite jewellery and impeccable service, Joyalukkas promises an enhanced shopping experience with this world-class showroom. To mark this special occasion, Joyalukkas is offering an inaugural offer of flat 50% off on all making charges for gold, diamonds, precious, and silver jewellery. This exclusive offer is valid till 14th July 2024, providing customers with an exceptional opportunity to purchase stunning jewellery at unbeatable prices. The Anna Nagar showroom has been meticulously designed to…
Read More
தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் ‘டைம்லெஸ் வாய்சஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம் !

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் ‘டைம்லெஸ் வாய்சஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம் !

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பவதாரிணி குடும்பத்தினரின் இதயம் தொட்ட 'சின்ன சின்ன கண்கள்' பாடல் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இடம்பெறும் 'சின்ன சின்ன கண்கள்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான‌ டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின்…
Read More