நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ்சினிமா உலகில் கிராமிய மணம் கமழும் வகையில் ஒரு காதல் கதை படமாக வந்துள்ளது.எழுத்தாளர் ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனத்தில் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மையல்.ஊரில் உள்ள ஆடுகளை திருடுபவர் நம் நாயகன் சேது. ஒரு இரவில் ஆட்டை திருடி செல்லும் போது ஊர் மக்களில் சிலர் சேதுவை துரத்துகிறார்கள். உடனே சேது ஊரில் ஒதுக்கு புறமாக உள்ள ஒரு மந்திரவாதி வீட்டில் அடைக்கலம் புகுகிறார்.அங்கே மந்திரவாதி கிழவியின் பேத்தியான நம் நாயகி சம்ரிதா சேதுவுக்கு அடைக்கலம் தருகிறார். இந்த அடைக்கலம் அன்பாக மாறி காதலாக உருவெடுக்கிறது. தான் ஊருக்கு சென்று பணம் ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வந்து கரம் பிடிப்பதாக சேது சம்ரிதாவுக்கு வாக்கு தருகிறார் .மைனா படத்தில் நடித்த சேது தான் இந்தப் படத்தின் கதாநாயகன். ஹீரோயினாக சம்ரிதி தாரா நடித்துள்ளார். இவர்களுடன் பிஎல்.தேனப்பன், சமீபத்தில் மறைந்த சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா உள்பட பலர் நடித்துள்ளனர். கிராமிய கதையை அம்சமாக இயக்கியுள்ளார் ஏபிஜி ஏழுமலை. படத்திற்கு பால பழனியப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அமர்கீத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் மனதுக்கு இதமாக இருக்கிறது.
‘மந்திரவாதி பெண்ணிற்கும், திருடனுக்கும் காதல்’ என்ற ஒன் லைன் கதை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் கதையை நகர்த்தி செல்லும் திரைக்கதை very weak. படம் நகரும் விதமும், காட்சியமைப்பிலும் ஒரு யதார்த்தமோ, உண்மைதன்மையோ இல்லை.நாயகனும் நாயகியும் காதலிக்கும் காட்சிகள் மட்டும் ஒகே ரகம். “என்னை விட்டு போய்டமாட்டியே” என்று நாயகி சம்ரிதா தாரா கெஞ்சும் போது காதலிக்காக உருகும் காட்சியில் ஹீரோ சேது நம் மனதை உருக்கி விடுகிறார்.