30
Nov
தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல சிறைச்சாலை படங்களை பார்த்திருக்கிறோம். விருமாண்டி, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை சிறைக்குள் சிறை பிடித்து திகிலூட்டியிருந்தது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 படமும் சிறைச்சாலை படம் தான். அந்த வரிசையில் ஆண்டு இறுதியில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிறைச்சாலை படமாக ரொம்ப ராவாக சொர்க்கவாசல் படம் வெளியாகி இருக்கிறது. 1999ம் ஆண்டு சென்னை மத்தியச் சிறையில் நடைபெற்ற கலவரத்தில் துணை ஜெயிலரை எரித்தே கொன்று விட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற விசாரணை தான் இந்த படத்தின் கதை. துணை ஜெயிலரை எரித்துக் கொன்றது யார்? அங்கே நடைபெற்ற கலவரத்துக்கு யார் முக்கிய காரணம் என்பதை செம சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட்டுடன் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில்…
