சினிமா

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' குறித்த…
Read More
மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

’ஹார்ட் பீட்’ வெப்சீரிஸில் தேஜூ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பிரேக்அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு தேதியை தற்செயலாக வெளியிட்டுள்ளார். ஜியோஹாட்ஸ்டாரால் நடத்தப்பட்ட ரசிகர்கள் உரையாடலின் போது வெளியீட்டுத் தேதியை யோகலட்சுமி தெரியப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீசன் 2 டீசர் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாகவும், படக்குழுவினருடனான உரையாடலாகவும் இருக்கும்படியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதில் யோகலட்சுமி வெளியீட்டு தேதியை மே 22 என்று குறிப்பிட்டபோது ரசிகர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இந்த செய்தி வைரலானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஜியோஹாட்ஸ்டார் வெளியீட்டு தேதியுடன் புதிய டைட்டில் டிராக் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள ’ஹார்ட்பீட் சீசன் 2’ பல புது கதாபாத்திரங்கள், தீர்க்கப்படாத புதிர்கள் மற்றும் புதிய கதைக்களத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. ஜியோஹாட்ஸ்டார்…
Read More
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’ படம் பூஜையுடன் தொடங்கியது!

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’ படம் பூஜையுடன் தொடங்கியது!

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவது எளிதானது கிடையாது. அதற்கான சரியான திரைக்கதையும் அதை சரியாக படமாக்குவதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'LCU' (Lokesh Cinematic Universe) என்ற புதிய சினிமா உலகத்தை உருவாக்கியுள்ளார். அதை சுற்றி சிறு செய்திகள் வந்தால் கூட ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்த புதிய என்ட்ரிக்கான நேரம் இது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (MAY 12, 2025) சென்னையில் தொடங்கியது. நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினர் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் மற்ற இரு முக்கிய கதாபாத்திரங்களில்…
Read More
வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் பிறந்த நாள் சென்னை பரணிபுதூர் ரொஹாபாத் பெண்கள் மனநலம் பாதுகாப்பு இல்லத்தில் உதவிகள் வழங்கி அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது...பின்பு ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு மோர், பிரியாணி வழங்கப்பட்டன...இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் நடிகர் மோகன் அவர்கள் நேரில் வருகை தந்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்... நிகழ்வில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் திரு. ஆர்.தமிழ்ச்செல்வன், முன்னால் தமிழக அரசவை கவிஞரும் மோகன் அவர்களுக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களை தந்த கவிஞர் முத்துலிங்கம் மற்றும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்...நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெள்ளிவிழா நாயகன் மோகன் ரசிகர் குழுமத்தினர் செய்து இருந்தனர்...
Read More
*மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!*

*மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!*

'லவ் டுடே' படத்தில் நடிகராக அறிமுகமான பிறகு நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கடுத்து அவர் நடித்த 'டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றிடயடைந்தது. அடுத்தடுத்து வெற்றிகளுக்குப் பிறகு அவர் இப்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்திய படம் ஒன்றில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியையும் இன்று படக்குழு அறிவித்துள்ளது. இளைஞர்களைக் கவரும்படி 'Dude' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. முகத்தில் காயங்களோடு கையில் தாலி வைத்துக் கொண்டு பிரதீப் முதல் பார்வை போஸ்டரில் இருக்கிறார். மாடர்ன் ட்விஸ்ட்டோடு கதை இருக்கும் என்பதை போஸ்டர் தெளிவாகக் காட்டுகிறது. இந்த வருடம் 2025 தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் பல திறமையாளர்களை…
Read More
முன்னெப்போதும் காணாத முன்னோட்டம்: மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 'பிளாக் ரோஸ்' திரைப்படத்தின் பைலட் மூவி திரைப்பட விழாக்களிலும் ஓடிடியிலும் வெளியீடு லண்டன் தொழிலதிபர் SJ சரண் இயக்கத்தில் மதன் கார்க்கி வசனத்தில் பிரித்விராஜ், சாந்தினி தமிழரசன் நடிக்கும் இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரைம் திரில்லர் 'பிளாக் ரோஸ்' சிறு வயது முதல் இங்கிலாந்தில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான SJ சரண், லண்டனில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழந்து வருகிறார். திரைத்துறை மீது தீராத தாகம் கொண்ட இவர், இயக்குநர் ஏ எல் விஜய் உடன் 'மிஷன்' திரைப்படத்திலும், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடித்த 'மோகினி' திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் கே பாக்யராஜிடமும் பயிற்சி பெற்ற இவர், 'பிளாக் ரோஸ்' எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். நிழல்கள் ரவி, பிரித்விராஜ் (பப்லு), சாந்தினி தமிழரசன், நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் பேரன் விஜேஷ்,…
Read More
’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படிப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது எளிது. முரண்பாடுகளை சரிசெய்தால் மட்டுமே வேலைகள் சரியாக நடக்கும். சங்கத்தில் பிரச்சினைகள் வரும்போது அதை…
Read More

“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

'ஒரு அடார் லவ்' படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் அவர் இப்போது அதைவிட வைரலான தருணத்தில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார். நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜூன் தாஸூடன் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் தாஸூடன் நடித்தது டபுள் தாமாக்கா என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருப்பவர் ரசிகர்களின் அன்பிற்கு நெகிழ்ச்சியாக நன்றியும் தெரிவித்திருக்கிறார் பிரியா. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக சொல்லி இருப்பவர் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் சொல்கிறார். இந்தப்…
Read More
 சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு!

 சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு!

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும்…
Read More
வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் ‘யுகம்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.!

வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் ‘யுகம்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.!

M/s. வெர்டிகிள் லா சினிமாஸ் & ட்ரீ புரொடக்‌ஷன் தயாரிப்பில், குழந்தை வேலப்பன் இயக்கத்தில் குழந்தை வேலப்பன், நர்மதா பாலு மற்றும் கவிதாபாரதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஷார்ட் வெர்டிகிள் வெப்சீரிஸ் 'யுகம்'. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா, "இந்தக்கதை ஒரு புதிய முயற்சி. உண்மையான குடும்பப்படம் இதுதான். புது உலகத்தை இந்தக்கதை காட்டும். உங்கள் ஆதரவு தேவை". எடிட்டர் சாபு, "சினிமாவில் நான் எடிட்டர் ஆவேன் என்று நம்பிய முதல் மனிதர் குழந்தை வேலப்பன் தான். அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு. வெர்டிகிளாக படம் செய்யவதற்கான ஸ்கிரிப்ட் இது. பல சவால்களைக் கடந்துதான் படமாக்கி இருக்கிறோம். குழந்தை வேலப்பன் வெற்றி பெற வாழ்த்துக்கள்!". இசையமைப்பாளர் ஜோவன், "குழந்தை வேலப்பன் வேலை செய்வதற்கு எளிதான இயக்குநர். வெர்டிகிள் சினிமா எனும்போது திரையில் முழுதும் வராதோ என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், அந்த எண்ணம் வராத அளவுக்கு…
Read More