சினிமா

*வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!*

*வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!*

நடிகை வரலட்சுமி சரத்குமார், இலங்கையின் பிரமாண்டமான Cinnamon Life – City of Dreams இடத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் தனக்கே உரிய சீரான அழகையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். புகைப்படக் கலைஞர் கேசரா எடுத்த இந்த போட்டோக்கள், 'கருப்பு வெள்ளை' மற்றும் 'பேஸ்டல்' நிறங்களில் வரலட்சுமியின் இயல்பான பிம்பத்தையும், தன்னம்பிக்கையையும் அழகாகப் பதிவு செய்கின்றன. (Instagram: @kesara_art) மெல்லிய நிறங்களில் கட்டமைக்கப்பட்ட ஆடைகளில் தோன்றும் அவர், சினிமாவின் ஆழத்தையும், எக்காலத்திலும் மறையாத ஃபேஷனையும் கலந்து சுமந்திருக்கிறார். “கம்பீரமாக இரு , ஒவ்வொரு புகைப்படமும் ” எனும் அவரது விளக்கம், வெறும் வார்த்தையல்ல – திரைத்துறையிலும், வாழ்க்கையிலும் அவர் கட்டியெடுத்த தனி அடையாளத்தின் பிரதிபலிப்பாகும். ‘The Verdict’ போன்ற படங்களில் அவரின் அடக்கமும் ஆழமும் கலந்த நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. பல பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு, தன்னிச்சையான தேர்வுகளால் இன்று வரலட்சுமி, தனது தலைமுறையின் மிகவும் தைரியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.…
Read More
அக்யூஸ்ட்– விமர்சனம் !

அக்யூஸ்ட்– விமர்சனம் !

முன்னணி இயக்குநர் AL விஜய்யின் சகோதரரும், தயாரிப்பாளர் AL அழகப்பன்  மகனுமான AL உதயா ஹீரோவாக நடித்து வந்திருக்கும் படம் அக்யூஸ்ட். பிரபல கன்னட இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். கொலை வழக்கு குற்றவாளியான நாயகன் உதயா, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்துவதற்காக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அவரை அழைத்துச் செல்லும் காவலர்கள் குழுவில் கான்ஸ்டபிள் அஜ்மல் இணைந்துக் கொள்கிறார். காவல்துறை வாகனத்தில் பயணிக்கும் போலீஸார், சில பிரச்சனைகளால் அரசு போக்குவரத்து பேருந்தில் செல்ல நேரிடுகிறது. இதற்கிடையே, கைதி உதயாவை கொலை செய்ய வேறு மாநில கும்பல் ஒன்று துரத்துவதோடு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் கொலை செய்வதற்கு திட்டம் போடுவதோடு, அதற்கு முட்டுக்கட்டையாக போலீஸ் கான்ஸ்டபிள் அஜ்மல் இருந்ததால், அவரையும் கொலை செய்ய முடிவு செய்கிறார். கொலை வழக்கு குற்றவாளி உதயா யார்?, அவரது பின்னணி என்ன ?, உதயாவை கொலை செய்ய துரத்தும்…
Read More
ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘மீஷா’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘மீஷா’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!

எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷாவின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது கேரளா மற்றும் தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. 'பரியேறும் பெருமாள்', 'சுழல்: தி வோர்டெக்ஸ்' மற்றும் 'விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்ததற்காக கதிரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது மலையாளத்திலும் 'மீஷா' படம் மூலம் அறிமுகமாகிறார். இது தமிழ் ரசிகர்களுக்காக தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. டிரெய்லரின் ஆரம்ப காட்சிகளில் கதிரின் நடிப்பு பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், தமிழ் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகள் உயர்ந்துள்ளன. யூனிகார்ன் மூவீஸ் பேனரின் கீழ் சஜீர் கஃபூர் தயாரித்த 'மீஷா' திரைப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ (குட் பேட் அக்லி, பீஸ்ட்), ஹக்கிம் ஷா, ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் முரளி, சுதி கோபா, உன்னி லாலு மற்றும் ஹஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடர்ந்த காட்டின் நடுங்கும் அமைதியில் அமைக்கப்பட்ட 'மீஷா' திரைப்படம், நண்பர்கள் குழுவைச்…
Read More
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கேம் சேஞ்சிங் திரையனுபவம் கொடுக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அதன் மூன்றாவது அத்தியாயத்திற்காக மீண்டும் தயாராகியுள்ளது. 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' இந்தியா முழுவதும் டிசம்பர் 19 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சினிமாட்டிக் உலகின் கிளிம்ப்ஸை இந்த டிரெய்லரில் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய ஹாலிவுட் வெளியீடான இதன் மூன்றாவது அத்தியாயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பண்டோராவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும். 'அவதார்: ஃபயர் & ஆஷ்' படத்தில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் புதிய சாகசங்களுக்காக மீண்டும் பண்டோரா உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார். மரைன் நாவி தலைவராக மாறிய ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்), நாவி வாரியர் நெய்திரி (ஸோ சால்டானா) மற்றும் சல்லி குடும்பத்துடன் ஒரு புதிய சாகசத்தை…
Read More
நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து “கிங்டம்” திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்!

நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து “கிங்டம்” திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்!

விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "கிங்டம்" திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு, நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். கவுதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள “கிங்டம்”, அதிரடியும், உணர்ச்சியும் நிறைந்த ஒரு வலிமையான டிரெய்லர் மற்றும் அனிருத் ரவிச்சந்திரனின் சக்திவாய்ந்த இசையுடன் ஏற்கனவே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்கியுள்ளது. விழாவில் விஜய் தேவராகொண்டா கூறியது: “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர்…
Read More
இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு!

இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு!

சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார் கதிர், பாடகர் அந்தோணி தாசன், ப்ளூ சட்டை மாறன், இயக்குநர் அகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், திராவிடர் கழக பொருளாளர் வீ. குமரேசன், தயாரிப்பாளர் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். நடிகர் சத்யராஜ் இயக்குநர் வேலு பிரபாகரனின் படத்தை திறந்து வைத்து பேசும் போது வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் தன்னை சிந்திக்க தூண்டியதாகவும், தன்னை பகுத்தறிவாளனாக மாற்றியதாகவும், தான் பகுத்தறிவாளனாக மாறியதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். மேலும் வேலு பிரபாகரன் மருத்துவமனையில் இருந்த போது தொலைபேசியில் ஆறுதல் சொல்ல அழைத்தபோது 'நான் பிறந்து பெரியாரின் கருத்துக்களை இந்த மக்களுக்கு…
Read More
தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு  !

தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு !

பல வெற்றிப்படங்களை தயாரித்தும், விநியோகித்தும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், படத்தொகுபாளர்கள் பல புது முகங்களை அறிமுகம் செய்த பெருமை JSK நிறுவனத்தையே சாரும். குறிப்பாக, தேசிய விருது வென்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் போன்ற படங்களை தயாரித்துள்ளது JSK நிறுவனம். இந்த நிறுவனம் சார்பாக தற்போது, 2023ம் ஆண்டு தேசிய விருது வென்ற குற்றம் கடிதல் படத்தின் இரண்டாம் பாகம் வரும் திங்கட்கிழமை (28/07/2025) முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.‘புதுமைப்பித்தன்’, ‘லவ்லி’ படங்களை இயக்கி, ‘அநீதி’, ‘தலைமை செயலகம்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய எஸ்.கே.ஜீவா இப்படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளரக மட்டுமல்லாமல், நடிகராகவும் மக்கள் மத்தியில் பரிட்சியமானவர் ஜெ.எஸ்.கே. தரமணி, பேரன்பு, கபடதாரி, அநீதி, ப்ரெண்ட்ஷிப், வாழை போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘ஃபயர்’ படத்தில் இயக்குனராகவும் களம்கண்டார். அப்படத்தில் தானே முதன்மை பாத்திரத்தில் நடித்து மிகப்பெரும்…
Read More
ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இயக்குநர், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல், "இதன் திரைக்கதை படிப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. வெவ்வேறு இடங்களில் டிராவல் ஆகிக் கொண்டே இருந்தது. அதை சரியாக படமாக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. சவாலான இந்த விஷயத்தை செய்ய ஆர்ட் டிரைக்‌ஷன், இசை, ஸ்டண்ட் என அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும். அந்த குழு சரியாக வேலையும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் அதை பிசினஸ் செய்ய வேண்டும் என்றபோது, சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர் படம் பார்த்துவிட்டு, 'உங்கள் குழுவின் முயற்சிக்கு என்னால் ஆன சின்ன சப்போர்ட்' என்று சொல்லிவிட்டு படத்தை வழங்குவதற்கு மிகவும் நன்றி. எனக்கு…
Read More
தலைவன் தலைவி — விமர்சனம்.!

தலைவன் தலைவி — விமர்சனம்.!

மதுரையில் பரோட்டா கடை வைத்திருப்பவர் ஆகாசவீரன் (விஜய் சேதுபதி). பக்கத்து ஊரைச் சேர்ந்த பேரரசியுடன் (நித்யா மேனன்) ஆகாசவீரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. காதலிக்கத் தொடங்கும் இருவரும் மனதளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் ஹீரோவின் பின்னணியை தெரிந்துகொள்ளும் ஹீரோயின் குடும்பத்தினர் இந்த வரன் வேண்டாம் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் நாயகியை திருமணம் செய்தால் ஹீரோவின் பெற்றோர் எதிர்காலத்தில் மருமகளால் ஒதுக்கப்படுவார்கள் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கின்றது ஹீரோ குடும்பம். ஆனால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் தாண்டி ஹீரோயினை தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோ. நன்றாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார் - மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை என ஆரம்பிக்கும் விரிசல் போகப் போக பெரிதாகி ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் பிரியும் நிலைக்கு வந்துவிடுகிறது. இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை அலசுகிறது ‘தலைவன் தலைவி’. தனது…
Read More
ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது

ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது

'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்', 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படங்கள் மற்றும் 'செங்களம்' இணையத் தொடருக்கு பிறகு எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் முற்றிலும் புதிய ஜானர் 'றெக்கை முளைத்தேன்' படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார் 'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் கிராமத்து நட்பு, 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், 'சத்ரியன்' படத்தில் ஆக்ஷன், 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படத்தில் கிராமத்து வீரம் மற்றும் 'செங்களம்' இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், 'றெக்கை முளைத்தேன்' படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார். இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த 'றெக்கை முளைத்தேன்' படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன்…
Read More